சனிக்கிழமை, நவம்பர் 23, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > கேபிந்தாரின் தொழில்நுட்பம் 4.0 : பயிற்சி தொடங்கியது!
சமூகம்முதன்மைச் செய்திகள்

கேபிந்தாரின் தொழில்நுட்பம் 4.0 : பயிற்சி தொடங்கியது!

பெர்லின், டிச, 4-

மலேசியாவின் திறன் மேம்பாட்டு கழகமான கேபிந்தாரின் தொழில்நுட்பம் 4.0  பயிற்சி திட்டம் இன்று ஜெர்மனியின் பெர்லின் நகரில் தொடங்கியது. கேபிந்தாரின் முதன்மை அதிகாரிகளில் ஒருவரான பாலன் தலைமையில் மலேசியாவிலிருந்து 21 பேராளர் இந்த பயிற்சியில் கலந்து கொண்டுள்ளார்கள். இது இவ்வாண்டு நடைபெறும் 2ஆவது பயிற்சி திட்டமாகும்.

நேற்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து, கத்தார் டாகா விமான நிலையத்தை சென்றடைந்தனர்கள், பின்னர் பெர்லின் நோக்கி பயணமாகினார்கள். பெர்லினில் உள்ள முதன்மை பல்கலைக்கழகங்களில் ஒன்றான இஎஸ்எம்டி பல்கலைக்கழகத்தில் அவர்களுக்கான பயிற்சி இன்று காலை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

பெர்லின் நகரின் 3 நாட்கள் பயிற்சியை முடித்து கொண்டு, இந்த குழு ஸ்டட்கர்ட் நோக்கி பயணமாகின்றது. அதன் பின்னர் பாயன் முனீச் நகரில் இந்த பயிற்சி முடிவடைகின்றது. தொழில்நுட்பம் 4.0 வளர்ச்சி குறித்து விளக்கம் அளிக்கும் வகையிலும், அது குறித்து  ஊடகவியாளர்கள்அறிந்து கொள்ளும் வகையிலும் இந்த பயிற்சி முன்னெடுக்கப்படுகின்றது.

தொழில்நுட்பத்தை சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களும் தங்களின் வர்த்தகத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று இந்த பயிற்சியின் வழி வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக இந்த தொழில்நுட்பம் 4.0 திட்டத்தை கூடிய விரைவில் மலேசியாவும் முழுமையாக செயல்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன