நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்களிப்பு அதிகமே

0
3

கோலாலம்பூர், டிச 5-

நாட்டின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அதிகமான பெண்கள் தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

அவர்கள் ஆற்றிய பங்களிப்பிற்கு அரசாங்கம் அவர்களுக்கென நல்ல திட்டங்களை வகுத்து வைத்துள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு வகைகளில் பெண்கள் தங்களால் முடிந்த ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கி வருவது பாராட்டுக்குரியதாகும் நேற்று புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெற்ற 2017ஆம் ஆண்டிந் பெண்கள் அனைத்துலக மாநாட்டில் கலந்து கொண்டபோது அவர் இதனை தெரிவித்தார்.

அரசியலின் பெண்களின் ஈடுபாடு அவசியம் இருக்க வேண்டும். பெண்களின் அரசியல் ஈடுபாடு வாக்காளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு ஜனநாயக நடைமுறையையும் மேம்படுத்துகிறது என்றும் அவர் சொன்னார்.

அரசாங்கத்தில் மட்டுமல்லாது போலீஸ் மற்றும் ராணுவத் துறையிலும் பெண்களின் எண்ணிக்கை பங்கும் சேவையும் அதிகமாகவே உள்ளதால் தற்போது இருக்கும் நிலையைவிட நாம் இன்னும் சிறந்த நிலையை அடையும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தாம் பிரதமராக பதவிவயேற்றது முதல் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை 7 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தது. கடந்த ஆண்டு 46 விழுக்காடாக இருந்த பெண் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து தற்போது 53 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.