வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முன்னர் பிடிபிடிஎன் விவரங்களை உறுதி செய்க

0
7

கோலாலம்பூர், டிச 5-

பிடிபிடென் கல்வி கடனுதவி பெற்றவர்கள் வெளிநாட்டிற்கு செல்வதற்கு 7 நாட்களுக்கு முன்னர் தங்களது பெயர் கருப்பு பட்டியலில் இல்லாமல் இருப்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.

வெளிநாட்டிற்கு செல்வதற்கு தடை விதிக்கப்படாமல் இருக்க இணக்கம் காணப்பட்ட தொகைக்கு பிடிபிடிஎன் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பிடிபிடிஎன் தலைவர் டத்தோ டாக்டர் ஷம்சுல் அனுவார் வலியுறுத்தினார்.

இதன்வழி கருப்பு பட்டியலில் இருக்கும் பிடிபிடிஎன் கடனாளிகளின் பெயர் நீக்கப்படும். வெளிநாடுகளுக்கு செல்ல த்டை இருக்காது என அவர் சொன்னார்.

 இதனிடையே, மீதமிருக்கும் கடன் தொகையை செலுத்தாதவர்களும் கடனை திரும்ப செலுத்துவதில் பிரச்னை எதிர்நோக்குபவர்களும் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். கடனை திரும்ப செலுத்த முடியாதவர்களுக்கு கடன் சீரமைக்கும் அணுகுமுறையின் வழி மாதம் குறைந்த பட்சம் கடனை திரும்ப செலுத்த ஏற்பாடு செய்து தரப்படும் என நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் விளக்கமளித்தார்.

அண்மையில் வெளிநாடுகளுக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் பாதிக்கும் மேற்பட்டோர் பிடிபிடென் கல்வி கடனுதவியை திரும்ப செலுத்தாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.