மென்செஸ்டர் , டிச.5 –
மென்செஸ்டர் யுனைடெட் மத்திய திடல் ஆட்டக்காரர் போல் பொக்பாவுக்கு மூன்று ஆட்டங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளன. கடந்த சனிக்கிழமை அர்செனலுக்கு எதிரான பிரீமியர் லீக் ஆட்டத்தின்போது ஹெக்டர் பெலரினை முரட்டுத்தனமாக தாக்கியதால், பொக்பாவுக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டது.
நடுவர் சிவப்பு அட்டை வழங்கியபோது, பொக்பா கை தட்டி நடுவரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டாலும் அவரின் தடை நீட்டிக்கப்படாது என இங்கிலாந்து கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது. இதனால் மென்செஸ்டர் சிட்டி, வெஸ்ட் புரோம்விச் அல்பியோன், போர்னிமோத் கிளப்புகளுக்கு எதிரான ஆட்டத்தில் பொக்பா பங்கேற்க முடியாது.
பொக்பா இல்லாத மென்செஸ்டர் யுனைடெட் பிரீமியர் லீக் போட்டியில் சற்று தடுமாறியது. இந்நிலையில் பொக்பாவுக்கு 3 ஆட்டங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது மென்செஸ்டர் யுனைடெட் ரசிகர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
