வியாழக்கிழமை, ஜனவரி 30, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > ஆர்.கே நகரில் அதிமுக, திமுக, தினகரன், நாம் தமிழர் வேட்பு மனுக்கள் ஏற்பு!
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

ஆர்.கே நகரில் அதிமுக, திமுக, தினகரன், நாம் தமிழர் வேட்பு மனுக்கள் ஏற்பு!

சென்னை,  டிச.5 –  

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, தினகரன், நாம் தமிழர் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளன.

ஆர்.கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 21ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனுத்தாக்கல் நேற்றோடு முடிவடைந்த நிலையில், 131 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.

இந்த வேட்புமனுக்களின் மீது இன்று காலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தலைமையில் விசாரணை நடந்தது. இதில் ஒரு வேட்பாளருக்கு இருவர் என்கிற கணக்கில் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

அதிமுக வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மற்றும் டி.டி.வி தினகரன் ஆகியோரது வேட்புமனுக்கல் ஏற்கப்பட்டன. முறையான தகவல்கள் இல்லாததால், சரியாக நிரப்பபடாத படிவங்களாலும் 25 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன