புதன்கிழமை, ஜனவரி 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > எதிர்கட்சிகளின் கடைசி நிமிட தாக்குதல்களை எதிர்கொள்ள தயாராகுங்கள்!
முதன்மைச் செய்திகள்

எதிர்கட்சிகளின் கடைசி நிமிட தாக்குதல்களை எதிர்கொள்ள தயாராகுங்கள்!

கோலாலம்பூர், டிச.5 –

14 ஆவது பொதுத் தேர்தலில் எதிர்கட்சிகளின் கடைசி நிமிட தாக்குதல்களை எதிர்கொள்ள அம்னோவும் தேசிய முன்னணியும் தயாராக இருக்க வேண்டும் என துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி கேட்டு கொண்டுள்ளார். கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களில், கடைசி நிமிடங்களில் எதிர்கட்சிகள் கட்டவிழ்த்த போலி பிரசாரங்களினால் தேசிய முன்னணி பெரும் பாதிப்பை சந்தித்தது என அஹ்மாட் சாஹிட் கூறினார்.

14 ஆவது பொதுத் தேர்தலில் அந்நிலை மீண்டும் ஏற்படக்கூடாது என அவர் தெரிவித்தார். செவ்வாய்கிழமை புத்ரா உலக வாணிப மையத்தில் அம்னோ தகவல் பிரிவு ஏற்பாட்டில் நடைபெற்ற தகவல், ஊடகங்கள் மாநாட்டில் உரையாற்றியபோது அஹ்மாட் சாஹிட் இவ்வாறு தெரிவித்தார். வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற அம்னோ இன்னமும் பழைய அணுகுமுறைகளைப் பயன்படுத்துவது எவ்வித நன்மையையும் கொண்டு வராது என அஹ்மாட் சாஹிட் தெரிவித்தார்.

குறிப்பாக அதிக அளவில் மக்களைத் திரட்டி உரையாற்றுவது நடப்பு அரசியல் சூழலுக்கு உகந்தது அல்ல என அவர் சொன்னார். மாறாக நின்ற இடத்திலேயே அதிக மக்களை சென்றடையும் வகையில் , அம்னோ உறுப்பினர்கள் இணையம் மூலமாக பிரச்சாரங்களை மேற்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன