கேமரன் மலை தொகுதி வேட்பாளர்: முடிவு பிரதமர் கையில் -டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடி

0
8

கோலாலம்பூர், டிச.5-
கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக யாரை நியமிப்பது என்பதை பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கே தீர்மாணிக்கட்டும் என துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

இன்று புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெறற அம்னோ பொதுப் பேரவையில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர் குறித்து கேள்வி எழுப்பியபோது அவர் இவ்வாறு பதிலளித்தார்.

14ஆவது பொதுத் தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடவிருப்பதாக தேசிய முன்னணி உறுப்பு கட்சிகளான மஇகாவும் மைபிபிபி கட்சியும் மாறி மாறி கூறி வருகின்றன.

கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் மஇகா வசமிருக்கும் இந்தத் தொகுதியை எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேறு கட்சிக்கு விட்டுக் கொடுக்க தயாராயில்லை என மஇகாவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.சுப்ரமணியம் இதற்கு முன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.