புதன்கிழமை, ஜனவரி 22, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் (Page 102)
அரசியல்குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

70 ஆண்டு கால மாட்டுத்தொழுவத்தை தகர்தெறிந்த கிள்ளான் நில அலுவலக அதிகாரிகள் !

கிள்ளான், ஆக. 27- சுசு ரவி என்பவரின் 70 ஆண்டுகால மாட்டுத் தொழுவத்தை இன்று காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, கிள்ளான் நில அலுவலக அதிகாரிகள் உடைத்தெறிந்தனர். ஒரு காலத்தில் ஹைலண்ட்ஸ் தோட்டமாக இருந்த இடம். கடந்த 20 ஆண்டுகளாக பாரிசான் அரசாங்கத்துடன் இழுபறியாக இருந்து வந்த மாட்டுப் பண்ணை புதிய அரசாங்கம் வந்ததும், அதிரடி நடவடிக்கையில் இறங்கி, காளியம்மன் கோவில் மற்றும் கருணைக்காட்டும் நாகம்மாள் கோவில்

மேலும் படிக்க
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

கட்சித் தேர்தலில் ரபிஸி போட்டியிட முடியுமா? – டத்தோஸ்ரீ வான் அஸிஸா

கோலாலம்பூர், ஆக. 27 இரண்டு நீதிமன்ற வழக்குகளில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிஸி ரம்லி, கட்சித் தேர்தலில் கலந்து கொள்ள முடியுமா என்பதை பிகேஆர் தேர்தல் குழுதான் முடிவு செய்ய வேண்டும். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் கள் கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்தபோது வான் அஸிஸா இவ்வாறு தெரிவித்தார். சன் டெய்லியில், நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவர் கட்சித் தேர்தலில் போட்டியிட கட்சி விதிகள்

மேலும் படிக்க
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

12 பேர் மேலவை உறுப்பினர்களாக பதவி உறுதிமொழி!

கோலாலம்பூர், ஆக. 27- பக்காத்தான் ஹராப்பானின் 12 பேரோடு வாரிசான் சபாவின் ஒருவரும் மேலவையின் புதிய உறுப்பினர்களாக  பதவியேற்றனர். பிகேஆரிலிருந்து நால்வரும், ஜசெகவின் நால்வரும் பிரிபூமி பெர்சத்துவிலிருந்து இருவரும் அமானா நெகாராவிலிருந்து ஒருவரும் புதிய செனட்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களில் அடங்குவர். தேசிய காங்கிரசின் நிரந்தரத் தலைவரான இஸ்மாயில் யூசோப், பாலிக் பூலாவ் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் யுஸ்மாடி முகமட் யூசோப், பெரா தொகுதித் தலைவர் மோனாலான் முகமட் மற்றும் லூமுட் நாடாளுமன்ற

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

மேம்பாட்டுத் திட்டங்கள் தொடரப்பட வேண்டும்! – அன்வார் வலியுறுத்து

கிள்ளான், ஆக.27- நாட்டிற்கு நல்ல மாற்றத்தைக் கொண்டு வரும் பொருட்டு பொது மேம்பாட்டுத் திட்டங்கள் தொடரப்படுவதை நம்பிக்கைக் கூட்டணி அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று பிகேஆர் தலைவர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார். இதில் நல்ல கொள்கைகள் அமல்படுத்தப்படுவதற்கு இந்தப் புதிய அரசு தொடர்ந்து கலந்தாலோசிக்க வேண்டும். அதிலும் இப்போது நிலைமை மாறி புதிய தொடக்கம் உருவாகி விட்டதால் பழைய அரசின் தவறுகளை சரி செய்யும் பொறுப்பு நமக்கு உள்ளது.

மேலும் படிக்க
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

3 லட்சம் இந்தியர்கள் நாடற்றவர்கள் என்பது உண்மையல்ல! நம்பிக்கைக் கூட்டணி ஒப்புதல்

கோலாலம்பூர், ஆக. 27- 3 லட்சம் இந்தியர்கள் நாடற்றவர்கள் என்பது பொய்ச்செய்தி என்றும், 3853 பேருக்கான ஆவணங்கள் மட்டுமே உள்துறை அமைச்சிடம் இருப்பதாக நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் உள்துறை துணையமைச்சர் டத்தோ முகமட் அஜிஸ் பின் ஜமான் நாடாளுமன்ற மேலவையில் ஒப்புக்கொண்டார். கடந்த காலங்களில் 3 லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை இல்லை என்ற குற்றச்சாட்டை முன்ளாள் எதிர்கட்சியும், இன்னாள் ஆளுங்கட்சியுமான நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் முன்னெடுத்து வந்தது உண்மைக்கு புறம்பானது

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

மலேசியா 2025இல் மேம்பாடு அடையும் – டாக்டர் மகாதீர்

பெய்ஜிங், ஆக.20- மலேசியா ஒரு மேம்பாடடைந்த நாடாக உருவாக முடியும், ஆனால் அதற்கு சற்று கால அவகாசம் பிடிக்கும் என்று பிரதமர், துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார். அந்த இலக்கை வரும் 2020இல் அடையாமல் போனாலும் 2025இல் அடைந்து விடலாம். எனினும், உங்கள் அனைவரின் உதவியின் மூலம் அதைச் சற்று முன்கூட்டியே அடைந்து விடலாம் என்று அங்கு வசிக்கும் மலேசியர்களுடன் விருந்து நிகழ்வில் உரையாற்றிய போது மகாதீர் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

இந்திய சமூக மேம்பாட்டுக்கு வெ. 400 கோடி ஒடுக்கீடு!

கோலாலம்பூர், ஆக. 20- 10 ஆண்டு காலத்தில் நாட்டிலுள்ள இந்திய சமூகத்தை மேம்படுத்துவதற்கு வெ. 400 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக மேலவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சமூகத்தில் இருக்கும் பி40 எனப்படும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்பத்தினரை மேம்படுத்த இந்நிதி பயன்படுத்தப்படும் என பிரதமர் துரை அமைச்சர் பி.வேதமூர்த்தி குறிப்பிட்டார். மேலும் தேசிய பொருளாதாரத்தில் இந்தியர்களின் பங்கினை அதிகரிக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேற்கண்ட அடிப்படை தொகையான

மேலும் படிக்க
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

அன்வாருன் இணைந்து பணியாற்றக்கூடிய துணைத் தலைவர்தான் தேவை!

கோத்தாகினபாலு, ஆக.20- பிகேஆர் தலைவர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராவதை துணைத் தலைவர், டத்தோஸ்ரீ அஸ்மின் அலி ஆதரிக்கிறாரா இல்லையா என்று அவரின் விசுவாசம் தொடர்பில் உதவித் தலைவர் வேட்பாளர்களில் ஒருவரான சுங்கை சிப்புட் தொகுதி எம்.பி, எஸ்.கேசவன் கேள்வி எழுப்பியுள்ளார். பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் பிரதமர் ஆவதற்கு துணைத் தலைவர் அஸ்மின் அலி, வெளிப்படையான ஆதரவை இதுவரையில் தெரிவிக்கவில்லை. இது பல்வேறான கேள்விகளை எழுப்புவதாகவும் அவர்

மேலும் படிக்க
அரசியல்குற்றவியல்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

1MDB முறைகேடுகள்! பாகம் 4 – மதியழகன் முனியாண்டி

முன்னுரை 1.முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் அம்பேங்க் சொந்த கணக்கில் 2.6 பில்லியன் ரிங்கிட் டெபாசிட் செய்யப்பட்டது என்று சரவாக் ரிப்போர்ட் செய்தி வெளியிட்ட பிறகு நமது நாட்டின் அரசியலில் பெரும் கொந்தளிப்பு எற்பட்டு அதன் தொடர்ச்சியாக அரசியல் மாற்றமும் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. 2. 2.6 பில்லியன் ரிங்கிட் சர்ச்சைக்கு பிறகு 1MDB முறைகேடுகள் குறித்து பரவலாக எல்லோராலும் பேசப்பட்டது. மலேசிய ஊடகங்கள் 1MDB முறைகேடுகள் குறித்தோ

மேலும் படிக்க
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

தமிழ்ப்பள்ளி விவகாரங்களுக்கு யார் பொறுப்பேற்பது? – டத்தோ சிவராஜ் கேள்வி

கோலாலம்பூர், ஆக. 18- தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் தமிழ்ப்பள்ளிகளை பிரதிநிதிக்கும் இந்திய கல்வியாளருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழ்ப்பள்ளி எதிர்நோக்கும் சவால்களை ஆலோசனை மன்றம் எப்படி கண்டறியுமென கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் சிவராஜ் சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் இன பாகுபாடில்லை என தொடர்ந்து கூறி வந்தாலும், இந்தியர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவது தவறான நடவடிக்கை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். நாம்

மேலும் படிக்க