செவ்வாய்க்கிழமை, ஜூன் 25, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு (Page 112)
விளையாட்டு

போலிங் ஆடவர் இரட்டையர் பிரிவில் தங்கம்

கோலாலம்பூர், ஆக.21- 2017 சீ விளையாட்டுப் போட்டியின் போலிங் விளையாட்டில் மலேசியா ஒரு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கத்தை திங்கட்கிழமை கைப்பற்றியது. சன்வே பிரமிட்டில் உள்ள போலிங் அரங்கில் நடைபெற்ற ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் மலேசியாவின் அலெக்ஸ் லியூ - சாபிக் ரிட்வான் அப்துல் மாலேக் இணை தங்கம் வென்றது. இந்தப் போட்டியில் ஆட்ரியன் ஆங் - ரபிக் இஸ்மாயில் இணை வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது. இது மலேசியாவுக்கு கிடைத்துள்ள

மேலும் படிக்க
விளையாட்டு

வூஷு போட்டியில் மலேசியா தங்கம்!

கோலாலம்பூர், ஆக.21- 2017 சீ விளையாட்டுப் போட்டிக்கான வூஷு போட்டியில் மலேசியா, யாப் வாய் கின் மூலம் மேலும் ஒரு தங்கப் பதக்கத்தை வென்றது. திங்கட்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான கியான்சூ பிரிவில் யாப் வாய் கின் சக நாட்டைச் சேர்ந்த வோங் வெங் சூனை வீழ்த்தினார். வாய் கின்னுக்கு 9.68 புள்ளிகள் கிடைத்த வேளையில், வெங் சூனுக்கு 9.65 புள்ளிகள் கிடைத்தது. ஞாயிற்றுக்கிழமை ஜியான் சூ போட்டியிலும் வாய் கின்

மேலும் படிக்க
விளையாட்டு

இ.பி.எல்: ஸ்டோக் சிட்டியிடம் வீழ்ந்தது அர்செனல்; லிவர்புல் வெற்றி

லண்டன், ஆக.20- இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் அர்செனல் 0-1 என்ற கோலில் ஸ்டோக் சிட்டியிடம் வீழ்ந்தது. 47 ஆவது நிமிடத்தில் ஸ்டோக் சிட்டியின் ஒரே கோலை யேசே ரோட்ரிகுவேஸ் அடித்தார். கடந்த சில ஆண்டுகளாக, ஸ்டோக் சிட்டியை வீழ்த்துவதில் அர்செனல் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது. இந்த ஆட்டத்தில் அர்செனல் தாக்குதல் ஆட்டக்காரர் அலெக்சாண்டர் லக்காசாட் போட்ட கோலை நடுவர் ஒப்சைட் காரணமாக அங்கீகரிக்கவில்லை.

மேலும் படிக்க
விளையாட்டு

இ.பி.எல்: மென்செஸ்டர் யுனைடெட்டின் அதிரடியில் வீழ்ந்தது சுவான்சி

லண்டன், ஆக.20- 2017/18 ஆம் பருவத்துக்கான இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் 4 -0 என்ற கோல்களில் சுவான்சி சிட்டியை வீழ்த்தி அதிரடிப் படைத்துள்ளது. இந்த வெற்றியுடன் மென்செஸ்டர் யுனைடெட் லீக் பட்டியலில் தனது முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. முதல் பாதி ஆட்டத்தின் இறுதியில் மென்செஸ்டர் அணியின் எரிக் பெய்லி முதல் கோலை பதிவு செய்தார்.   இதனால் முதல்பாதி

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

கூடைப்பந்தில் மலேசியாவிற்கு தங்கம்! கரிஸ்மா, சந்திரலேகா அதிரடி

கோலாலம்பூர், ஆக. 20- சீ விளையாட்டுப் போட்டியின் 2ஆம் நாளான நேற்று மலேசியா கூடைப்பந்து பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்றது. சீ போட்டியின் நடப்பு வெற்றியாளரான சிங்கப்பூருக்கு எதிராக மலேசியா சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது. [caption id="attachment_3261" align="alignright" width="300"] தங்கப்பதக்கம் வென்ற மலேசிய அணி[/caption] ஆட்டம் தொடங்கியது முதல் மலேசிய பெண்கள் அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, சிங்கப்பூரை திக்குமுக்காட வைத்தது. அதோடு புள்ளிகளைப் பெறுவதில் மலேசிய அணி முனைப்பாக

மேலும் படிக்க
விளையாட்டு

ஜெர்மனி பண்டேஸ்லீகா – பாயேர்ன் மூனிக் வெற்றி

பெர்லின், ஆக.19 - 2017/18 ஆம் பருவத்துக்கான ஜெர்மனி பண்டேஸ்லீகா கால்பந்துப் போட்டியை நடப்பு வெற்றியாளரான பாயேர்ன் மூனிக் வெற்றியுடன் தொடங்கியுள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் பாயேர்ன் மூனிக் 3 - 1 என்ற கோல்களில் பாயேர்ன் லெவர்கூசனை வீழ்த்தியது. முதல் முறையாக ஜெர்மனி பண்டேஸ்லீகா போட்டியில் வீடியோ துணை நடுவர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் இரண்டாம் பாதியில் பாயேர்ன் மூனிக்கிற்கு நடுவர் பினால்டி ஒன்றை

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

44 ஆண்டுகளுக்குப் பிறகு மரத்தோன் போட்டியில் பதக்கம்

புத்ராஜெயா, ஆக.19 - 44 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்களுக்கான மரத்தோன் போட்டியில் மலேசியா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. புத்ராஜெயாவில் சனிக்கிழமை நடைபெற்ற மரத்தோன் போட்டியில் மலேசியாவின் முஹாய்சர் முஹமட் , வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். ஆக கடைசியாக 1973 ஆம் ஆண்டில் மலேசியா மரத்தோன் போட்டியில் பதக்கம் வென்றது. அப்போது எஸ். சோலைமுத்து மலேசியாவுக்கு வெண்கலப் பதக்கம் பெற்றுத் தந்தார். சிங்கப்பூரின் சோ ரூய் யோங் தங்கப் பதக்கம் வென்ற

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

கோலாகலமாக தொடங்குகிறது 29 ஆவது சீ விளையாட்டுப் போட்டி

கோலாலம்பூர், ஆக.18 - 29 ஆவது தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டி இன்று புக்கிட் ஜாலிலில் உள்ள கோலாலம்பூர் விளையாட்டு நகரில் கோலாகலமாக தொடங்குகிறது. 111 தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றி 29 ஆவது சீ விளையாட்டுப் போட்டியின் வெற்றியாளராக வாகை சூட இலக்கு கொண்டுள்ள மலேசியா இம்முறை அதிகமாக விளையாட்டாளர்களை களத்தில் இறக்கியுள்ளது. ஆக கடைசியாக 2001 ஆம் ஆண்டில் மலேசியா சீ விளையாட்டுப் போட்டியை ஏற்று நடத்தியது. அந்தப் போட்டியில்

மேலும் படிக்க
விளையாட்டு

அம்பு எய்தல் போட்டியில் மேலும் ஒரு தங்கப் பதக்கம்

கோலாலம்பூர், ஆக.18 - 2017 சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியா தொடர்ந்து தங்கப் பதக்கங்களை வாரி குவிக்கிறது. அம்பு எய்தல் போட்டியில் மலேசியா தனது ஏழாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற கம்பாவுன்ட் கலப்பு பிரிவில் மலேசியாவின் முஹமட் ஜூவாய்டி மர்சூகி - பாத்தின் நூர்பாத்திஹா இணை தங்கப் பதக்கத்தை வென்றது. மலேசிய இணை இறுதிப் போட்டியில் மியான்மாரின் ஆவுங் ஙேயன் - யான் மின் சுவீ இணையை

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

10 கிலோ மீட்டர் பொது நீச்சல் போட்டியில் மலேசியாவுக்கு மேலும் 2 தங்கப் பதக்கங்கள்

புத்ராஜெயா, ஆக.18 - 29 ஆவது சீ விளையாட்டுப் போட்டியின் பொது நீச்சல் போட்டியில் மலேசியா மேலும் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளது. ஆண்களுக்கான 10 கிலோ மீட்டர் பிரிவில் கேவின் யாப் தங்கம் வென்ற வேளையில் மகளிர்க்கான பிரிவில் ஹெய்டி கான் மலேசியாவுக்கான தங்கப் பதக்கத்தை உறுதிச் செய்தார். புத்ராஜெயாவில் உள்ள நீர் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற போட்டியில் கேவின் யாப் 2 மணி 3

மேலும் படிக்க