அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் (Page 113)
சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ஊத்தான் மெலிந்தாங்கில் ரமேஷ் ராவ்?

கோலாலம்பூர், ஜன. 3- வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதியில் சமூக சிந்தனை மேம்பாட்டு இயக்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ ரமேஷ் ராவ் போட்டியிடக்கூடுமென பரவலாகப் பேசப்படுகின்றது. குறிப்பாக துணைப் பிரதமரும் பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ அமாட் ஸாஹிட், வெற்றி பெறக்கூடிய வேட்பாளருக்கு மட்டுமே ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கின்றார். கடந்த 13ஆவது பொதுத் தேர்தலில் தேசிய

மேலும் படிக்க
குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

எஸ்பிஎம் மாணவர்களுக்கு இலவச பிரத்தியேக வகுப்பு: பக்தி சக்தி அழைக்கின்றது!

கோலாலம்பூர், ஜன. 1- பக்தி சக்தி இயக்கம் வறுமை கோட்டின் கீழ் இருக்கும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டது. டத்தோஸ்ரீ எஸ்.கே. தேவமணியின் ஆலோசனையின் கீழ் இந்த இயக்கம் அடுத்த இலக்கை நோக்கி தமது பயணத்தை தொடங்குவதாக அதன் தலைவர் டத்தோ பழனியப்பன் தெரிவித்தார். கடந்த ஆண்டு பக்தி சக்தி இயக்கம் முன்னெடுத்த பிரத்தியேக வகுப்புகளின் மூலம் 1000 மாணவர்கள் பலனடைந்தார்கள். இந்த முறை

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

சுபிட்சம் தழைத்தோங்கட்டும்! டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம்

ஒவ்வோர் ஆண்டு துவக்கத்திலும் புதிய எண்ணங்களுடனும் சிந்தனைகளுடனும் அவ்வாண்டை நோக்கி நாம் பயணிக்கின்றோம்.  இப்புதிய ஆண்டு அனைவருக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் ஆண்டாக அமைய வேண்டும் என சுகாதார அமைச்சரும் ம.இ.கா. தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தமது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார். அவ்வகையில், நாட்டிற்கும் சமூகத்திற்கும் மிதவாத அடிப்படையில் நல்லதொரு சுபிட்சத்தை வழங்க நாம் வகை செய்ய வேண்டும். இன வேறுபாடின்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும்.

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

எதிர்கட்சியின் கோட்டை சரிகிறது! – பிரகாஷ் ராவ்

சுங்கை பூலோ, டிச. 31- சுபாங் நாடாளுமன்றத் தொகுதியின் ஆட்சிப் பீடத்தில் எதிர்கட்சியின் ஆளுமையை உறுதிச் செய்த இந்திய இளைஞர்களில் அதிகமானோர், தங்களின் ஆதரவுக் கரங்களை தற்போது மஇகா பக்கம் திருப்பியிருக்கின்றனர். மஇகாவின் பாரம்பரிய நாடாளுமன்றத் தொகுதியான சுபாங்கில் எதிர்கட்சி வேட்பாளரை அமர வைத்து 10 ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு தவணைக்கு வழங்கிய வாய்ப்பு போதும்! அடுத்து வரும் பொதுத் தேர்தலில் மஇகா வேட்பாளரை வெற்றிப் பெறச் செய்ய வேண்டும்.

மேலும் படிக்க
கலை உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

மலேசிய கலைஞர்களுக்கு 1 லட்சம் வெள்ளி மானியம்!

கோலாலம்பூர், டிச. 29- தமிழகத்திற்கு அடுத்து தென்னிந்திய நடிகர்களின் மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருப்பவர்கள் மலேசிய தமிழர்கள் தான் என திரைப்பட நடிகர் நந்தா புகழாரம் சூட்டினார். மை ஈவன்ஸ் இண்டர்நெஷனல் ஏற்பாட்டில் தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் நட்சத்திர கலை விழா ஜனவரி 6ஆம் தேதி புக்கிட் ஜாலில் அரங்கில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த விழாவில் முன்னணி நட்சதிரங்களான சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

மேலும் படிக்க
கலை உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் புன்னகைப் பூ கீதா!

கோலாலம்பூர், டிச. 29- பிரபல மலேசிய நடிகையும், டி.எச்.ஆர். ராகா வானொலியின் அறிவிப்பாளருமான புன்னகைப் பூ கீதா இயக்குநர் நாகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ‘‘காவல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடித் துள்ளார். இவருக்கு இந்தியாவில் முன்னணி கதாநாயகியாக நடித்த மலேசியாவின் முதல் நடிகை எனும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு வெளியாகிய காவல் திரைப்படத்தில் தமிழ்த்திரைப்படவுலகில் நன்கு அறிமுகமான

மேலும் படிக்க
கலை உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

புறம் பேசுவதை நிறுத்துவீர்

கோலாலம்பூர், டிச. 28- மலேசிய தல அஜித் நற்பணி மன்றத்தின் சார்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, சமூக வலைத் தளங்களில் தவறான கருத்துகளை பரப்பி வருபவர்களை அதன் தலைவர் தேவேந்திரன் வன்மையாகச் சாடினார். நடிகர்களின் பெயரில் நற்பணி மன்றங்கள் தேவையா? என கேள்வி கேட்பவர்கள், சங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்து பேச மறுப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். தமிழ்ப்பள்ளி மாணவர்களின் தேவைகளை அறிந்து அதற்கு எங்களின் நற்பணி

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்விளையாட்டு

ஒற்றுமையை மேலோங்கச் செய்வோம்!!

கோத்தாராஜா, டிச. 27- சமுதாயப் பணிகளில்,  கிளைகளுக்கிடையில் ஒற்றுமையை நிலைநாட்டுவதன் வழி மக்களுக்கு நல்ல ஓர் எடுத்துக்காட்டாக அமைய முடியும் என கோத்தா ராஜா தொகுதித் தலைவரும் மத்திய செயலவை உறுப்பினருமான டத்தோ ஆர் எஸ் மணியம் குறிப்பிட்டார். கடந்த சனிக்கிழமை, கோத்தா ராஜா தொகுதி ஏற்பாடு செய்திருந்த நட்புமுறை பூப்பந்து போட்டியில், கிளைத்தலைவர்கள், மகளிர், இளைஞர், புத்ரா, புத்ரி உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர். இம்மாதிரியான விளையாட்டுப் போட்டிகள், உடல்

மேலும் படிக்க
சமூகம்மற்றவை

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ரிஞ்சிங், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் வழங்கிய உதவிக்கரம்!

செமினி, டிச.23- சமூகநல நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் ரிஞ்சிங் தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் நிர்வாகம் டி.எஸ்.எஸ். பாதுகாவலர் சேவை நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி எஸ்.கே.நாயருடன் இணைந்து சுமார் 12 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு காலணி, பள்ளி சீருடை, புத்தகப்பை உள்ளிட்ட பள்ளி உபகரண பொருட்களையும் குறிப்பிட்ட தொகையையும் வழங்கியது. இது குறித்து ரிஞ்சிங் தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் தலைவர் விஜயகுமார் கூறுகையில், இந்த உதவியை ஆலய

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலமா? கடுமையாகக் கண்டிக்கிறோம்

கோலாலம்பூர், டிச. 22- அண்மையில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இஸ்ரேல் தலைநகராக ஜெருசலத்தை அறிவித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என பெர்மிம் பேரவை தலைவர் ஹாஜி தாஜுதீன் தெரிவித்தார். இந்த உத்தரவானது இஸ்ரேலியர்களின் கனவு நனவாக வழி வகுத்துள்ளது. அதேவேளை பாலஸ்தீன மக்கள் தங்களுக்கென தனி நாடு பெற்று கிழக்கு ஜெருசலத்தைத் தலைநகராக பெறுவதற்கும் தடைக்கல்லாக அமைந்துவிட்டது. அந்த அறிவிப்பைத் தொடர்ந்து அனைத்துலக ரீதியில் கண்டனக் குரல் எழுப்பப்பட்டது.

மேலும் படிக்க