திங்கட்கிழமை, பிப்ரவரி 18, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > Aegan (Page 116)
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

யோகிபியுடன் தல அஜீத் ரசிகர்கள்!

காஜாங், ஆக. 4- வெகுவிரைவில் திரையரங்குகளை அலங்கரிக்கவுள்ள விவேகம் திரைப்படத்தின் அறிமுக பாடலை பாடியுள்ள மலேசியாவில் புகழ்பெற்ற சொல்லிசை மன்னரான யோகிபியுடனான ஒரு மாலைப் பொழுது அண்மையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.  மலேசிய தல அஜித் நற்பணி கழகத்தின் ஏற்பாட்டில் ஒரு மலேசிய கலைஞரை அங்கீகரிக்கும் வண்ணம் இந்நிகழ்வு அண்மையில் காஜாங் ஒரியண்டல் கிரிஸ்டல் ஹோட்டலில் நடைபெற்றது. 2011ஆம் ஆண்டு ஆடுகள படத்தில் பாடியதை தொடர்ந்து அவரது இசைப் பயணம் சில

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

சீபில்டு தோட்ட ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய நிலப்பிரச்னைக்கு தீர்வு காண அஸ்மின் அலி முன்வரவேண்டும்

கோலாலம்பூர், ஆக. 2- சுபாங் ஜெயா, ஜாலான் பூச்சோங் பழைய சீபில்டு தோட்டம் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம் நிலப் பிரச்னைக்கு தீர்வு காண சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி முன்வரவேண்டும் என்று மக்கள் புகார் மையத்தின் தலைவர் டத்தோ சந்திர குமணன் வலியுறுத்தினார்.  இந்த ஆலய நிலப்பிரச்னைக்கு தீர்வு காண 12 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது. அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

வீடுகளை உடைக்கவிடமாட்டோம்

கோலாலம்பூர், ஆக. 2- எங்கள் வீடுகள் உடைக்கப்படாமல் இருக்க இறுதி வரை போராடுவோம். இதில் இருந்து ஒரு போதும் பின் வாங்கமாட்டோம் என்று ஜிஞ்சாங் செலாத்தான் தம்பஹான் மக்கள் நேற்று சூளுரைத்தனர். வீடுகளைக் காலி செய்யும்படி எங்களுக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டாம். மாற்று வீடுகள் உள்ளிட்ட எங்கள் கோரிக்கைகளை மேம்பாட்டு நிறுவனம் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என இந்தக் குடியிருப்பின் மக்கள் சங்கத் தலைவர் ஏ.பொன்னாம்பலம் தெரிவித்தார். கோலாலம்பூர் மாநகர்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

எண் கணித நிபுணர் மீது 13 மோசடி புகார்

கோலாலம்பூர், ஆக 2- எண் கணிதம் வாயிலாக எதிர்காலத்தை மாற்றுவதாக கூறி மோசடி செய்ததாக எண் கணித நிபுணர் ஒருவர் மீது 13 புகார்களை போலீஸ் பெற்றுள்ளது.  டாக்டர் உதயா அல்லது முதையா என்ற பெயரில் அடிக்கடி தொலைகாட்சியிலும் வானொலியிலும் எண் கணிதம் தொடர்பாக உரையாற்றி வரும் அவர் பலரை நம்ப வைத்து மோசடி செய்ததாகத் தெரிகிறது. 2001ஆம் ஆண்டிலிருந்து அவர் இக்குற்றத்தை புரிந்ததாக தெரிகிறது. இவர் மீதான குற்றச்சாட்டு

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

சிசுவை  கிணற்றில் வீசினேன்! மனநோயாளி ஒப்புதல்

மலாக்கா, ஆக. 2- பிறந்து ஆறு நாட்களே ஆன ஆண் சிசு கிணற்றில் பிணமாக மிதந்தது தொடர்பாக நீடித்து வந்த மர்மத்திற்கு விடை கிடைத்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அறுவரில் ஒருவர் அந்தப் படுபாதகச் செயலைப் புரிந்ததை ஒப்புக் கொண்டார். சுமார் 2 வாரங்களுக்கு முன்பு கம்போங் ஒன் லோக் பத்தாங் மலாக்கா, ஜாசினில் ஒரு வீட்டின் பின்புறம் இருந்த கிணற்றில் இந்தியத் தம்பதியருக்குப் பிறந்த ஆண் சிசு

மேலும் படிக்க
விளையாட்டு

பார்சிலோனாவை விட்டு விலகுகிறார் நெய்மார்!

மாட்ரிட், ஆக. 2- பார்சிலோனாவின் முன்னணி நட்சத்திர ஆட்டக்காரரான நெய்மார் (வயது 25) அவ்வணியை விட்டு விலகலாம் என பார்சிலோனா அறிவித்துள்ளது. இதனிடையே 198 மில்லியன் பவுன் தொகையில் அவர் பிரான்ஸின் பிஎஸ்ஜியில் அணியில் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக டெய்லி மெயில் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனிடையே அவரின் குத்தகை முடிவதற்குள் அணியை விட்டு வெளியேறுவதால் இந்த தொகை மேலும் அதிகரிக்கக்கூடுமென பேசப்படுகின்றது. பார்சிலோனா அணியின் நிர்வாகம் நெய்மாருடன் பேச்சு வார்த்தை

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

இந்திய மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம்

கோலாலம்பூர், ஆக 2- ம.இ.கா இளைஞர் பிரிவும் ஆசியா மெட்ரோ போலிடன் பல்கலைக்கழகமும் இணைந்து செய்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆசியா மெட்ரோ போலிடன் பல்கலைக்கழகம் இந்திய மாணவர்களுக்கு கல்வி உபகாரச் சம்பளம் வழங்கியுள்ளது. இந்த உபகாரச் சம்பளம் குறித்த தகவல் நம் இந்திய சமுதாய மாணவர்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் தொடக்கமாக, 4 இந்திய மாணவர்களுக்கு இந்த உபாகாரச் சம்பளத்தை மஇகா இளைஞர் பிரிவு

மேலும் படிக்க
சமூகம்

அன்பழகன் குடும்பத்திற்கு டத்தோ மலர்விழி குணசீலன் உதவி

பெஸ்தாரி ஜெயா வட்டாரத்தில் பல பொது இயக்கங்கள் மற்றும் ஐ.பி.எஃப் கட்சியின் வழி மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்கியவர் அன்பழகன். தற்போது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் வாரம் மூன்று முறை டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். ஆறு பிள்ளைகளுக்குத் தந்தையான இவர் பொருளாதார ரீதியில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகிறார். எஸ்.டி.பி.எம் படிக்கும் மகள் நவசங்கரிக்குத் தேவைப்படும் மடிக் கணினிக்காக ஓராண்டுக்கு மேலாக உள்ளூர் பிரமுகர்களின் உதவி கேட்டு

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

பெட்ரோல் விலை உயர்கிறது!

பெட்டாலிங் ஜெயா, ஆக. 2- இன்று நள்ளிரவு 12 மணி தொடங்கி (03 பெட்ரோல் விலை 4 காசு உயர்கிறது. அதேபோல் டீசல் விலையும் லிட்டருக்கு 6 காசு உயர்வு கண்கின்றது. இந்த வாரம் முழுக்க 2 வெள்ளி 3 காசுக்கு விற்கப்பட்ட ரோன் 95 பெட்ரோல் விலை 4 காசு உயர்வு கண்டு அடுத்த வாரம் புதன்கிழமைவரை 2 வெள்ளி 7 காசுக்கு விற்கப்படும். அதேபோல் ரோன் 97 பெட்ரோல்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

ஸாஹிட்டின் மீது போலீஸ் புகார்

கோலாலம்பூர், ஆக. 2- துன் டாக்டர் மகாதீரை சிறுமைப்படுத்தும் நோக்கில் அவரை இனவாதியாகப் பேசிய ஸாஹிட்டின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படி போலீசில் புகார் செய்யப்பட்டது.  இந்த விவகாரத்தில் தகுந்த முகாந்திரம் இருக்குமானால் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி மற்றும் தேசிய பதிவிலாகாவின் தலைமை இயக்குநரின் டத்தோ யாஸிட் ரம்லி ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ நூர் ரஷிட் இப்ராஹிம்

மேலும் படிக்க