முகப்பு > சமூகம் (Page 120)
சமூகம்முதன்மைச் செய்திகள்

சமயத்தை இழிவுப்படுத்தாதே? டத்தோ மோகன் காட்டம்

கோலாலம்பூர் செப் 15- நமது சமுதாயத்தில் சமயம் சார்ந்த விழிப்புணர்வுகள் குறைந்து மூடநம்பிக்கைகளும், கலாச்சார சீரழிவுகளும் அதிகரித்து வருவது ஆரோக்கியமானதல்ல. இந்த மாதிரியான சூழல் நமது சமுதாயத்தை இழிவுபடுத்தி மற்ற இனங்களுக்கு மத்தியில் நமது தரத்தினை குறைத்து விடும். இதன் தொடர்பில் இந்து சங்கம் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், இதற்கு மஇகா உறுதுணையாக இருக்குமெனவும் அதன் உதவித்தலைவர் டத்தோ டி.மோகன் தெரிவித்துள்ளார். தெய்வங்களின் உருவப்படங்களை பெண்களின் உடைகளில் பதிப்பதும்,

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

ஜோகூர் மாநில இந்திய ஆத்ம சக்தி இயக்கத்தின் தலைமைத்துவ பயிற்சி முகாம்

ஜோகூர் செப் 13- இந்திய ஆத்ம சக்தி இயக்கத்தினர்கள் நமது சமுதாய இளைஞர்களிடத்தில் தலைமைத்துவ பண்பை விதைக்கும் உன்னத பணியை கிள்ளான் வட்டாரத்தில் கடந்த 7 ஆண்டுகளாக செய்து வருகின்றனர். அதனைத்தொடர்ந்து இந்திய ஆத்ம சக்தி இயக்கத்தின் ஜோகூர் கிளை தனது பணியாக தலைமைத்துவ பயிற்சி முகாமினை அரங்கேற்றியுள்ளார்கள். உலுதிராமில் நடைபெற்ற இந்த முகாமில் படிவம் 4 யை சார்ந்த 121 மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர். 4 நாட்கள் நடைபெற்ற

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

டத்தோ சரவணனுக்கு எதிராக பிரதமர்துறை அலுவலகத்தில் ஓம்ஸ் தரப்பு மகஜர் ஒப்படைப்பு!

புத்ரா ஜெயா, செப்.13- தமிழ் மலர் நாளிதழின் உரிமையாளரான பிரபல தொழிலதிபர் ஓம்ஸ் தியாகராஜன், தலைமை ஆசிரியர் சரஸ்வதி கந்தசாமி ஆகிய இருவரும் அண்மையில் தாக்கப்பட்டது தொடர்பில் அவரது ஆதரவாளர்கள் இன்று பிற்பகல் மணி 2.00 அளவில் பிரதமர்துறை அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் மலர் நாளிதழின் அலுவலகமும் அதன் உரிமையாளரும் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் கோஷங்களை எழுப்பியதோடு கண்டனங்களை தெரிவிக்கும் பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

பெட்ரோல் விலை மேலும் உயர்ந்தது!

கோலாலம்பூர், செப், 13- ரோன் 95 பெட்ரோல் விலை 1 காசு உயர்வு கண்டுள்ள நிலையில் ரோன் 97 பெட்ரோல் விலை 4 காசு உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் முழுவதும் 2.20 காசுக்கு விற்கப்பட்ட ரோன் 95 பெட்ரோல் விலை, அடுத்த வாரம் புதன்கிழமை வரை 1 காசு உயர்வு கண்டு 2.21 காசாக விற்கப்படும். அதேபோல் 2.48 காசுக்கு விற்கப்பட்ட ரோன் 97 பெட்ரோல் விலை 4 காசு

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

எதிர்கட்சியுடன் இணக்கம் காணாததால் சைத்தானை ஆதரித்தோம்! வேதமூர்த்தி

கோலாலம்பூர், செப். 13- கடந்த பொதுத்தேர்தலின் போது எதிர்கட்சியுடன் இணக்கம் காண்பதில் தோல்வி கண்டதால் வேறுவழிகளின்றி சைத்தானை (தேசிய முன்னணி) ஆதரித்தோம் என ஹிண்ட்ராப்பின் தலைவர் பி.வேதமூர்த்தி தெரிவித்தார். இந்திய சமுதாயத்திற்கு எந்தெந்த வழிகளில் உதவுவது என்பது குறித்து எதிர்கட்சிகளுடன் இறுதிவரை எங்களால் இணக்கம் காண முடியவில்லை. இத்தணைக்கும் அக்கூட்டணியுடன் நாங்கள் 20க்கும் மேல் சந்திப்பு கூட்டங்களை நடத்தினோம் என அவர் கூறினார். தேசிய முன்னணி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது

மேலும் படிக்க
சமூகம்

ஒற்றுமையை வலுபடுத்தும் ஐபிஎப்பின் சுதந்திர கலை நிகழ்ச்சி

செமினி, செப். 13- சுதந்திர தினம் மற்றும் தேசிய தினத்தையொட்டி ஐ.பி.எஃப் உலு லங்காட் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சி இம்மாதம் 15ஆம் தேதி இரவு மணி 7.00க்கு செமினியில் ஸ்டோர் பேரங்காடி கார் நிறுத்துமிடத்தில் நடைபெறும் என்று ஐ.பி.எஃப் தேசிய தலைவர் டத்தோ எம்.சம்பந்தன் தெரிவித்தார். பழைய, புதிய பாடல்களோடு புகழ் பெற்ற உள்ளூர் கலைஞர்கள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவும் வகையில்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

சுகாதார அமைச்சின் ஊடக விருது : முதன்மை பரிசை வென்றார் சரளாதேவி

கோலாலம்பூர், செப். 13- சுகாதார அமைச்சின் ஊடக விருதளிப்பு நிகழ்ச்சியில் தமிழ் நேசன் நாளேடு இரு விருதுகளைத் தட்டிச் சென்றது. தலைநகர் சன்வே புத்ரா ஹோட்டலில் நடைபெற்ற சுகாதார அமைச்சின் 11ஆவது ஊடக விருதளிப்பு நிகழ்ச்சியில் நேசன் துணையாசிரியர் தா.சரளா தேவி முதன்மை பரிசான 3,000 வெள்ளியைப் பெற்ற வேளையில் மற்றொரு விருதுக்கான 500 வெள்ளி பரிசை நேசன் ஆசிரியர் கே.பத்மநாபன் பெற்றார். ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட சிறார்களின் நிலை மற்றும்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

1எம்டிபி விவகாரத்தை கொண்டு நாட்டின் பொருளாதாரத்தைக் கீழறுப்பு செய்ய முயற்சிக்கின்றனர்!

நியூ யார்க், செப். 13- மலேசிய பொருளாரத்தை சீரழிக்கும் நோக்கில் 1எம்டிபி-க்கு எதிராக சதிவேலைகள் முடுக்கி விடப்பட்டிருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்தார். அவர்களின் நோக்கம் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதுதான் என அமெரிக்க- ஆசியான் வணிக மன்றமும் அமெரிக்க வர்த்தகச் சங்கமும் கலந்துகொண்ட ஒரு விருந்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய நஜீப் கூறினார். மலேசிய பொருளாதாரத்தைப் பற்றி, குறிப்பாக, 1எம்டிபி குறித்து தவறான தகவல்களைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். நாங்கள் எதையும் மூடிமறைக்க

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

நிதி ஒதுக்கீடு குறைந்தாலும் சிறப்பாக செயல்படுகிறோம்!

பெட்டாலிங் ஜெயா, செப். 13 - சுற்றுலாத் துறைக்கான அரசின் ஒதுக்கீடு இந்த ஆண்டு வெகுவாகக் குறைக்கப்பட்டிருந்தாலும், இத்துறை சிறப்பாகவே செயல்பட்டு வருவதாக சுற்றுலா மற்றும் பண்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அஸிஸ் தெரிவித்தார். அமைச்சின் அடைவு நிலை 112 விழுக்காட்டுக்கு அதிகமாக உயர்ந்துள்ள வேளையில் அதன் மூலம் கிடைத்த வருமானம் வெ.7,330 கோடியாக அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். இணையத்தின் மூலம் விசா விண்ணப்பிக்கும் நடைமுறை தொடங்கப்பட்டதிலிருந்து சீன சுற்றுலாப்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

பெர்மாய் அடுக்குமாடி வீடமைப்புத் திட்டத்திற்கு அரசாங்கம் 70 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு!

கோலாலம்பூர், செப். 13- சிலாங்கூர் அரசாங்கத்தால் கைவிடப்பட்ட தாமான் டத்தோ ஹருனிலுள்ள பெர்மாய் அடுக்குமாடி வீடமைப்புத் திட்டத்திற்கு 70 லட்சம் வெள்ளியை மத்திய அரசாங்கம் ஒதுக்கீடு செய்வதாக வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் டான்ஸ்ரீ நோ ஓமார் தெரிவித்தார். இந்த ஒதுக்கீடு அந்த அடுக்குமாடி வீடமைப்புத் திட்டத்தின் கூரைகள், லிப்டு, தண்ணீர் தொட்டி, புட்சால் விளையாட்டு மையம், கால்வாய், வேலி ஆகியவற்றை சீர்படுத்துவதற்காக செலவிடப்படும் என சம்பந்தப்பட்ட அந்த வீடமைப்புத்

மேலும் படிக்க