அண்மையச் செய்திகள்
முகப்பு > Aegan (Page 167)
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

அறிவியல் விழா! பூச்சோங் கின்ராரா தமிழ்ப்பள்ளி சாதனை!

பாங்கி, ஆக 13- இந்திய சமுதாயம் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் புத்தாக்க சிந்தனை, அறிவியல் திறன், தன்னம்பிக்கை ஆகியவற்றை வளர்க்கும் வண்ணம் கல்வி அமைச்சின் ஒத்துழைப்போடு, செடிக், யாயசான் மை நாடி, என்.எல்.எப்.சி.எஸ், உள்ளிட்டவர்களின் ஆதரவோடு அஸ்டியின் ஏற்பாட்டில் நடைபெற்ற தேசிய இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா 2017 கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த விழாவில் பூச்சோங் கின்ராரா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வெற்றி வாகை சூடி சாதனை படைத்தனர். இந்த அறிவியல்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

எம்ஜிஆர் அனைத்துலக மாநாட்டுக்கு தமிழக முதலமைச்சர் அங்கீகாரம்!

கோலாலம்பூர், ஆக. 13- காலத்தை வென்ற காவியத் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவதரித்து நூறாண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு, தலைநகர் கோலாலம்பூரில் ‘எம்ஜிஆர் அனைத்துலக மாநாடும் - நூற்றாண்டு விழாவும் நடைபெறுகிறது. மலேசிய இந்திய சமுதாய மேம்பாட்டு இயக்கத்தின் (MICAS) தலைவர் எஸ்.பி.மணிவாசகம் தலைமையிலான தொண்டார்வளர் குழு முன்னின்று நடத்தும் இவ்விழாவுக்கு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அங்கீகாரம் வழங்கியிருக்கிறார். தமிழகத்தின் பிரபல தொழிலதிபர் வி.ஜி. சந்தோஷம், தனது விஜிபி தமிழ்ச்

மேலும் படிக்க
குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

களும்பாங் தமிழ்ப்பள்ளிக்கு 1 லட்சம் மானியம்!

களும்பாங், ஆக. 13- இந்நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளையும் தரம் உயர்த்த வேண்டுமென்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கின்றது. அதனால் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிலும் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றது என கல்வித்துறை துணையமைச்சர் டத்தோ கமலநாதன் தெரிவித்தார். குறிப்பாக 2009ஆம் ஆண்டு, டத்தோஸ்ரீ நஜீப் பிரதமராகப் பொறுப்பேற்றது முதல், தமிழ்ப்பள்ளிகளின் தரம் கட்டம் கட்டமாக மேம்பாடு கண்டு வருகின்றது. இதே நிலை தொடர்ந்தால், மற்ற இனப்பள்ளிகளுக்கு இணையாக தமிழ்ப்பள்ளிகள் துரித

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

பிந்து மாதவி, கணேஷ் தப்பினர்! சக்தியின் தலை தப்புமா?

சென்னை, ஆக. 13- விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை 4 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த வாரம் ரைசாவைத் தவிர வீட்டிலிருந்த அனைவரும் வெளியேறுவதற்கான பட்டியலில் இணைக்கப்பட்டனர். முன்னதாக வையாபுரியை சக போட்டியாளர்கள் வீட்டில் இருக்க வேண்டுமென்று முடிவு செய்ததால், அவரும் பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து தங்குகிறார். இந்நிலையில் சனிக்கிழமை இரவு, கமல்ஹாசன், மேலும் இரண்டு

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

சாதனை படைக்கும் ஆளப்போறான் தமிழன்! பாடல் வரிகள்

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கும் புதிய திரைப்படம் இவ்வாண்டு தீபாவளிக்கு வெளியீடு காண்கின்றது. இந்த திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார் ஆஸ்கர் நாயகன் இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான், உதயா, அழகிய தமிழ்மகன் திரைப்படத்திற்கு பிறகு விஜய் - ரஹ்மான் கூட்டணியில் வெளிவரும் 3 ஆவது திரைப்படம் என்பதால், பாடல்களுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தில் இடம்பெறும் ஆளப்போறான் தமிழன் என்ற பாடலை சோனி நிறுவனம் வெளியிட்டது. புதிய சாதனைகளை ஏற்படுத்தி வரும்

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

பிக் பாஸ் : காயத்திரி காப்பாற்றப்பட்டார்!

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த காயத்திரிரை பிக் பாஸ் காப்பாற்றிவிட்டார். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள். குறிப்பாக இந்த வாரம் ரைசாவை தவிர மற்ற அனைவரும் வீட்டிலிருந்து வெளியேறுவதற்கான பட்டியலில் இணைக்கப்பட்டார்கள். இதில் காயத்திரியின் பெயர் இருந்ததால், அவரை இந்த வாரம் வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டுமென அவரை காப்பாற்ற ரசிகர்கள் வாக்களிக்கவில்லை. பட்டியலில் அவர் தொடர்ந்து இறுதி நிலையில் இருந்ததால்,

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

செஞ்சிட்டாரு ரகுவரன்!! விஐபி2 விமர்சனம்

வேலையில்லா பட்டதாரி முதல் பாகம் கொடுத்த மிகப் பெரிய வெற்றியில் சற்றும் குறைவில்லாமல் விஐபி2 இருக்குமென்று நினைத்தால், சற்று ஏமாற்றம்தான். ஆனால் இறுதி நிமிடம் வரை விருவிருப்பிற்கு பஞ்சமில்லை. இருப்பினும் கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்கிறார்கள் நமது ரசிகர்கள். அல்லது திரைக்கதையில் திருப்பங்களை ஏற்படுத்தியிருக்கலாம் என்கிறார்கள்  தனுஷ் வெறியர்கள். மாப்பிள்ளை (ரஜினி நடித்தது), மன்னன், படையப்பா போன்ற ரஜினிக்கே உரித்தான கதையில் இந்த முறை தனுஷ் நடித்துள்ளார். காவியா

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

வரலாற்றில் முதல் முறையாக ஆர்.டி.எம்.மில் 11 பேருக்கு பதவி உயர்வு

கோலாலம்பூர், ஆக. 11- ஆர்.டி.எம். வரலாற்றில் முதல் முறையாக 11 இந்திய அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த ஒளிபரப்புத் துறையிலும் இந்த 11 பேரும் தங்களின் நியமனங்களை வரும் ஆக்ஸ்ட் 15ஆம் தேதி ஏற்றுக் கொள்கிறார்கள். பார்வதி சுப்ரமணியம், ரோஹினி சுப்ரமணியம், ராதா வெங்கடாசலம், ராஜேஸ்வரி ராஜமாணிக்கம், ஷாமளா தேவி அமிர்தராஜ், வனஜா ராஜன், கிருஷ்ணமூர்த்தி, ரேகா பாலசந்திரன், தவமலர் தேவி முனுசாமி, மனோகரன் கோவிந்தராஜூ, அந்தோணி இன்னாசி

மேலும் படிக்க
விளையாட்டு

தொடங்கியது வெறியாட்டம்!

லண்டன், ஆக. 11- உலகில் அதிகமான கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் போட்டியாக பிரிமியர் லீக் விளங்குகின்றது. இன்று இங்கிலீஷ் பிரிமியர் லீக் போட்டி 2 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்குகின்றது. இதனிடையே இவ்வாண்டுக்கான பிரிமியர் லீக் கிண்ணத்தை எந்த அணி வெல்லுமென்ற எதிர்பார்ப்பும் ஆர்வமும் அதிகரித்துள்ளது. செல்சீ! இங்கிலீஷ் பிரிமியர் லீக் கிண்ணப் போட்டியின் நடப்பு வெற்றியாளர். கடந்த பருவத்தில் அதிக கோல்களை அடித்த டியாகோ கோஸ்தாவிற்கு

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

பள்ளிகளில் பிரிவுனை வேண்டாம்! சிவராஜ் சந்திரன்

கோலாலம்பூர், ஆக. 11- இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை வளர்க்க வேண்டிய ஒரே இடமாக பள்ளிக்கூடங்கள் விளங்குகின்றது. இந்நிலையில் அங்கேயும் பிரிவினைகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கக்கூடாது என ம.இ.கா. இளைஞர் பிரிவித் தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் எச்சரித்தார்.  உலு லங்காட்டிலுள்ள பள்ளி ஒன்றில் முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத மாணவர்களுக்கு நீர் அருந்துவதற்கு தனித்தனி கிளாஸ் வைக்கப்பட்டிருப்பது குறித்து, சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் சாடி வருகிறார்கள். இது குறித்து கருத்துரைத்த சிவராஜ்

மேலும் படிக்க