அண்மையச் செய்திகள்
முகப்பு > Aegan (Page 168)
முதன்மைச் செய்திகள்

100 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஸ் போட்டி!

கோத்த பாரு, செப் 1- எதிர்வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் 100க்கும் மேற்பட்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடப்போவதாக பாஸ் அறிவித்துள்ளது. இந்த தொகுதிகளை கட்சி அடையாளம் கண்டிருப்பதாக பாஸ் உதவித் தலைவர் டத்தோ முகமட் அமார் நிக் அப்துல்லா கூறினார். நாட்டில் 222 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என டத்தோ முகமட் அமார் நிக் அப்துல்லா நம்பிக்கை தெரிவித்தார். இந்த இலக்கை

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

போலீஸ்காரர் கொலை: சந்தேக பேர்வழி கைது

கோலாலம்பூர், செப் 1- சுபாங் ஜெயா, ஜாலான் டிபி 7/2இல் உள்ள போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதன் தொடர்பில் சந்தேகப் பேர்வழி ஒருவன் கைது செய்யப்பட்டான். 30 வயதுடைய அந்த ஆடவன் வியாழக்கிழமை இரவு விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஆணையர் டத்தோ மஸ்லான் மன்சோர் தெரிவித்தார். சிபுவைச் சேர்ந்த அந்த நபர் விடியற்காலை 1 மணியளவில் விசாரணைக்கு உதவும் பொருட்டு கைது செய்யப்பட்டதாக அவர்

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

மும்பையில் 6 மாடிக் கட்டடம் இடிந்தது : மரண எண்ணிக்கை 33 ஆக உயர்வு

மும்பை, செப். 1- மும்பையில் 6 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் மாண்டவர்களின் எண்ணிக்கை 33ஆக உயர்ந்தது. இடிபாடுகளிலிருந்து மேலும் 46 பேர் மீட்கப்பட்டனர். மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பெண்டி பசார் பகுதியில் 100 ஆண்டுக் கால கட்டடம் இடிந்து விழுந்தது. 2011ஆம் ஆண்டிலேயே இந்தக் கட்டிடம் குடியிருப்பதற்கு பாதுகாப்பானதல்ல என்று பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும் அங்கிருந்த குடியிருப்பு வாசிகள் இதனை பொருட்படுத்தவில்லை. மும்பையில் கடும் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ள

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

உறுப்பு கட்சிகள் தோல்வி கண்டால் தே.மு.க்கு பெரும்பான்மை கிடைக்காது!

கோலாலம்பூர், செப். 1- 14ஆவது பொதுத்தேர்தலில் மஇகா, மசீச, கெராக்கான் ஆகிய கட்சிகள் மலாய்க்காரர் அல்லாதவர்களின் வாக்குகளைப் பெறுவதில் தோல்வி கண்டால், தேசிய முன்னணி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதில் தோல்வி காணும் என அரசியல் ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார். மேற்கண்ட 3 கட்சிகளும் தங்கள் இனத்தவர்களின் வாக்குகளை முழுமையாகத் தேசிய முன்னணிக்குக் கொண்டுவர வேண்டும். இல்லையேல் தேசிய முன்னணி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற முடியாது

மேலும் படிக்க
சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சுதந்திர நினைவுகள் 2 : மலேசியாவின் அடையாளங்கள்!

(சக்தி) 1960-ஆம் ஆண்டுகளில் தோட்டப்பாட்டாளிகளின் துயர் துடைக்க, தோட்டத் துண்டாலைக் கட்டுப்படுத்த தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தை உருவாக்கியவர் துன் வீ.தி. சம்பந்தன். தோட்டப்பாட்டாளிகளின் சுய உதவியால் நிர்மாணிக்கப்பட்ட இச்சங்கத்தை, அவரைத் தொடர்ந்து வழிநடத்திக் கொண்டிருக்கும் கூட்டுறவுக் காவலர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் பெருமளவில் பங்குதாரர்களைத் திரட்டி மேலும் பல தோட்டங்களை வாங்கி பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்தியதன் ரீதியாக நாட்டின் முன்னேற்றத்திற்காக தம் பங்கினை ஆற்றிக் கொண்டு வருகிறார்

மேலும் படிக்க
சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

உலக பிரபலங்களில் மறக்க முடியாதவர் இளவரசி டயானா!

இளவரசி டயானாவின் 20-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. உலகின் தவிர்க்க முடியாத கனவு நாயகி டயானாவின் இயற்பெயர் பிரான்செஸ் ஸ்பென்சர். இவர் ஜூலை 1, 1961ஆம் ஆண்டு பிறந்தார். வேல்ஸ் இளவரசர் சார்லஸின் முதலாவது மனைவி. இவர்களது பிள்ளைகள் இளவரசர்கள் வில்லியம், ஹென்றி (ஹேரி). இளவரசர் சார்லசுடன் டயானா திருமண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து, டயானா பொது வாழ்வில் ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார். ஐக்கிய நாடுகள்

மேலும் படிக்க
சிறப்புச் செய்திகள்மற்றவைமுதன்மைச் செய்திகள்

சுதந்திர நினைவுகள்…. திரும்பிப் பார்ப்போம் மலையக இந்தியர்களை..!

(சக்தி) சுதந்திரம் எவ்வளவு சுலபமான வார்த்தை தமிழில், ஆனால் அதை பெறுவதற்குதான் எத்தனை போராட்டம், தியாகம். ஒவ்வொரு தேசத்தின் சுதந்திரமும் முன்னோர்களின் குருதியினாலும் தியாகத்தாலும் பெறப்பட்டவை. நமது மலேசிய நாட்டின் சுதந்திரத்தின் மகிமை உலகில் வேறு எந்த நாட்டிற்கும் கிடைக்காத பெருமை. ஆம், மலாய், சீன மற்றும் இந்திய சமுதாயம் என்ற மூவினத்தாரின் ஒற்றுமையால் 1957-ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 31-இல் பெறப்பட்டது நம் நாட்டின் சுதந்திரம். முப்புறம் கடல் சூழ்ந்து,

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வு!

பெட்டாலிங் ஜெயா, ஆக. 30- பெட்ரோல் விலை 1 காசு உயர்ந்துள்ள நிலையில் டீசல் விலை 3 காசு உயர்ந்துள்ளது. செப்டம்பர் முதல் வாரம் முழுவதும் ரோன் 95 பெட்ரோல் விலை 2.15 காசிலிருந்து 1 காசு உயர்ந்து 2.16 காசுக்கு விற்கப்படும். அதேபோல் ரோன் 97 பெட்ரோல் விலை 1 காசு உயர்ந்து 2.44 காசுக்கு விற்கப்படுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. டீசல் விலை 3 காசு உயர்வு கண்டு

மேலும் படிக்க
கலை உலகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

நவீனுக்காக வருந்துகிறேன்! ஏ.ஆர். ரஹ்மான்

கோலாலம்பூர், ஆக. 30- தம்மைப் போல இசையமைப்பாளராக உருவாக வேண்டுமென்ற கனவும் இருந்த நவீனின் மரணம் தம்மை வெகுவாகப் பாதித்துள்ளது. அவருக்காக தாம் வருந்துவதாக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கூறினார். பினாங்கில் 5 பேர் கொண்ட கும்பலால் பகடிவதை செய்யப்பட்ட நவீன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் தீவிர ஏர்.ஆர். ரஹ்மான் ரசிகர். அவரைப் போல தாமும் இசையமைப்பாளராக வேண்டுமென்ற கனவுடன் நவீன் இருந்தார். இந்த விவரத்தை

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

பூச்சோங் முரளியின் மேல் முறையீட்டு வழக்கு செலவுத் தொகையுடன் தள்ளுபடி

கோலாலம்பூர், ஆக. 30- மஹா மாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா குறித்து முகநூலில் அவதூறு பரப்பிய காரணத்திற்காக பூச்சோங் முரளி 347,247.47 வெள்ளியை செலுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அவர் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த மூன்று பேரைக் கொண்ட நீதிபதிக் குழு கூட்டாக அதனை செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்தனர். அதோடு இந்த வழக்கை தொடுத்ததற்காக 15,000

மேலும் படிக்க