வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > தயாளன் சண்முகம் (Page 169)
மற்றவைமுதன்மைச் செய்திகள்

அமைச்சரவையில் மலாய்க்காரர்களுக்கு மட்டுமே இடம்! – ஹாடி அவாங்

கோலாலம்பூர், டிசம். 26- பெரும்பான்மையைக் கொண்ட சமூகமே அமைச்சரவையில் இடம் பெற்றிருக்க வேண்டுமென்ற விருப்பத்தை பாஸ் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் மலாய்க்காரர்களே அமைச்சரவையில் முழு உறுப்பியத்தையும் கொள்கை இயற்றும் அதிகாரத்தையும் பெற்றிருக்க வேண்டுமென்பதே தமது கட்சியின் தலையாய நோக்கமாக இருப்பதாக ஹாடி அவாங் தெரிவித்துள்ளார். மலாய்க்காரர்களையே முழுமையாக கொண்டிருக்கும் அந்த அமைச்சரவை உறுப்பினர்கள் இஸ்லாமிய நம்பிக்கையில் உறுதிப்பாடு கொண்டிருக்க வேண்டும்

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்மற்றவைமுதன்மைச் செய்திகள்

ஸாக்கிர் நைக் விவகாரம் : இந்தியாவின் கோரிக்கையை மலேசியா ஆராயும்!

கோலாலம்பூர், டிச.26- சர்ச்சைக்குரிய மத போதகர் ஸாக்கிர் நைக்கை தற்காலிகமாக கைது செய்ய வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை மலேசிய போலீஸ் ஆராயும் என போலீஸ் துணைத் தலைவர் டான்ஸ்ரீ நோர் ரஷீட் இப்ராஹிம் தெரிவித்தார். இந்தியாவின் தேசிய விசாரணை அமைப்பிடமிருந்து மலேசியப் போலீஸ் படைக்குக் கோரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்றும் நோர் ரஷீட் தெரிவித்தார். ஆதலால், அந்தக் கோரிக்கையை போலீஸ் படையால் செயல்படுத்த முடியாது என்று அவர் மேலும்

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத குழந்தையை கடிதத்தோடு விட்டுச் சென்ற தாய்!!

ஈப்போ, டிச. 26- பிறந்த குழந்தையை ஒரு வீட்டின் முன்புறம் இருந்த பூந்தொட்டிக்கு அருகில் ஒரு கடிதத்தோடு விட்டுச் சென்ற தாயைப் போலீசார் தேடி வருகின்றனர். என் குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள், அவனை இப்படி விட்டுச் செல்வதற்காக என்னை மன்னித்து விடுங்கள் என்ற கடிதத்தை பிறந்த குழந்தையின் அருகில் வைத்து கைவிட்டு அதன் தாய் தலைமறைவாகியுள்ளார். கமுந்திங், கம்போங் குர்னியா ஜெயா என்ற பகுதியில், மோட்டார் சைக்கிள் நிறுத்துமிடத்தில்,

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

பாலத்திலிருந்து தவறி விழுந்து கஸ்தூரி மரணம்!

கோலாலம்பூர், டிச.26- சன்வே டோல் பிளாஸா அருகேயுள்ள பூச்சோங், 13ஆவது மைல், கம்போங் கெனாங்கான் ஆற்று பாலத்திலிருந்து தவறி விழுந்து எம். கஸ்தூரி (வயது 20) மரணமடைந்தார். இவர் செம்பாகா பிபிஆர் குடியிருப்புப் பகுதிக்கு அருகேயுள்ள பாலத்தில் திங்கள்கிழமை காலை 7.50 மணிக்குத் தவறி விழுந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுவதாக கோலாலம்பூர் தீய்ணைப்பு மீட்புத் துறை இயக்குநர் கிருடின் ட்ரஹ்மான் தெரிவித்தார். கஸ்தூரியின் சடலம் பூச்சோங், 13ஆவது மைல், கம்போங் கெனாங்கான்

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : தினகரன் அமோக வெற்றி

சென்னை, டிச.24- தமிழகத்தின் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளரான டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றார். குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட இவருக்கு மொத்தம் 89,013 வாக்குகள் கிடைத்தன. கிட்டத்தட்ட 40,707 வாக்குகள் பெரும்பான்மையில் இவர் வெற்றி பெற்றுள்ளார். இந்த இடைத் தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 48,306 வாக்குகளும் திமுக வேட்பாளர் மருது கணேஷ் 25,651 வாக்குகளும் பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் 1,368 வாக்குகளும் நாம் தமிழர் வேட்பாளர்

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

தனி ஒருவன் இல்லை இந்த வேலைக்காரன்!

வேலைக்காரர்கள் நினைத்தால் இந்த சமுதாத்தையே மாற்றி அமைக்க முடியுமென்பதை அழுத்தமாக பதிவுச் செய்ய வேண்டுமென்ற முயற்சியே வேலைக்காரன். அந்த முயற்சியில் இயக்குநர் வென்றாரா? என்பதுதான் இந்தத் திரைப்படத்தின் வெற்றியை நிர்ணயிக்கின்றது. தாம் வசிக்கும் குப்பத்து இளைஞர்களை கூலிப்படையில் இணைத்து, தமது வாழ்க்கையை நகர்த்தும் ரவுடி பிரகாஷ் ராஜ்ஜை எதிர்க்கும் கதாநாயகனாக சிவகார்த்திகேயனின் அறிமுகம் தொடங்குகின்றது. குப்பம் எப்.எம். என்ற வானொலியை தொடங்கி அதை பிரகாஷ் ராஜ்ஜூக்கு எதிராக திசை திருப்புகிறார்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலமா? கடுமையாகக் கண்டிக்கிறோம்

கோலாலம்பூர், டிச. 22- அண்மையில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இஸ்ரேல் தலைநகராக ஜெருசலத்தை அறிவித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என பெர்மிம் பேரவை தலைவர் ஹாஜி தாஜுதீன் தெரிவித்தார். இந்த உத்தரவானது இஸ்ரேலியர்களின் கனவு நனவாக வழி வகுத்துள்ளது. அதேவேளை பாலஸ்தீன மக்கள் தங்களுக்கென தனி நாடு பெற்று கிழக்கு ஜெருசலத்தைத் தலைநகராக பெறுவதற்கும் தடைக்கல்லாக அமைந்துவிட்டது. அந்த அறிவிப்பைத் தொடர்ந்து அனைத்துலக ரீதியில் கண்டனக் குரல் எழுப்பப்பட்டது.

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

உரிமைக் குரலாக இருங்கள்! ஆர்.டி.சுந்தரம் வலியுறுத்து

கோலாலம்பூர், டிச. 22- ம.இ.கா. குறித்து தவறான கருத்துகளை வெளியிடும் எதிர்க்கட்சியின் நடவடிக்கைகளுக்கு உடனடி பதில் கொடுப்பது அனைத்து உறுப்பினர்களின் கடமையாகும். குறிப்பாக கட்சியின் உரிமைக் குரலாக நாம் அனைவரும் விளங்க வேண்டுமென ம.இ.கா. தித்திவாங்சா தொகுதித் தலைவர் ஆர்.டி. சுந்தரம் தெரிவித்தார். மலேசிய இந்தியர்களின் நல்வாழ்விற்கான ம.இ.கா. தேசிய முன்னணி அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அதனால் அவற்றை சமூகத் தளங்கள் அல்லது எந்த நிலையிலும் இந்தியர்கள் மத்தியில்

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

இந்தியாவின் தலைசிறந்த திரைப்படங்கள் முதலிடத்தில் விக்ரம் வேதா ! மெர்சலும் இடம்பிடித்தது

சென்னை, டிச. 22- 2017ஆம் ஆண்டு இந்திய அளவில் வெளிவந்த திரைப்படங்களில் சிறந்த 10 திரைப்படங்களின் பட்டியலை ஐஅம்டிபி திரைப்பட அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் இரண்டு தமிழ்த்திரைப்படங்கள் இடம்பிடித்துள்ளன. குறிப்பாக இந்தப் பட்டியலில் விஜய் சேதுபதி மாதவன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் வேதா திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது. அதோடு தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியீடு கண்டு 250 கோடி ரூபார் வசூல் சாதனை படைத்த மெர்சல் 9ஆவது இடத்தைப்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்விளையாட்டு

பெங்களூரு பயணமாகும் எஸ்.எம்.சி. பேட்மிண்டன் வெற்றியாளர்கள்!

கோலாலம்பூர், டிச. 21- ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் யூத் கோர் ஏற்பாட்டில் நடந்த தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பேட்மிண்டன் போட்டி அண்மையில் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.  இந்தப் போட்டியில் காஜாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வெற்றிக் கிண்ணத்தை தட்டிச் சென்றனர். இந்நிலையில் இவ்வாரம் ஞாயிற்றுக்கிழமை அதாவது டிசம்பர் 24ஆம் தேதி வெற்றி பெற்ற காஜாங் தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் 1 ஆசிரியரும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் பொறுப்பாளர்களில் ஒருவரும் இந்தியா

மேலும் படிக்க