அண்மையச் செய்திகள்
முகப்பு > Aegan (Page 2)
சமூகம்முதன்மைச் செய்திகள்

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி!

எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட்டு 23 - ஆம் திகதி ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி ஆகும். இந்த உற்சவத்தை நமது கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் விமரிசையாய் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த உற்சவம் மதியம் 12.00 மணியளவில் அன்னதானத்துடன் துவங்கவுள்ளது. மாலை 7.00 மணியளவில் ஸ்ரீ கிருஷ்ணரின் பெருமைகளைச் சித்தரிக்கும் சிறப்பு நாட்டிய நிகழ்ச்சி இடம்பெறும். அதைத் தொடர்ந்து உற்சவ மூர்த்தியாகிய ஸ்ரீ கிருஷ்ணருக்குச் சிறப்புப் பூஜையும்,

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

ஜாவி மொழியை எதிர்த்துப் புரட்சி எனும் அமைதிப் பேரணி!

கோலாலம்பூர், ஆகஸ்ட், 19- அடுத்த ஆண்டுத் தொடங்கி ஜாவி எழுத்துத் தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளின் நான்காம் ஆண்டு மலாய் பாட புத்தகத்தில் இடம்பெறும் என்பதைக் கல்வி அமைச்சு மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கின்றது. பெற்றோர்கள் விரும்பினால் இந்த மொழியை மாணவர்கள் கற்கலாம் என்பதைக் கல்வியமைச்சு உறுதிப்படுத்தியுள்ள நிலையில் பாடபுத்தகத்தில் இம்மொழி இடம்பெறக்கூடாது எனப் பல அரசு சாரா இயக்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் ஜாவி எழுத்தை பாடபுத்தகத்தில் இணைக்கக்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

காராக் பாலசுப்பிரமணியம் ஆலயத்தின் புதிய ரத வெள்ளோட்டம்!

காராக், ஆகஸ்ட் 19- காராக் ஸ்ரீ சுப்பிரமணிய ஆலயத்தில் புதிய ரத வெள்ளோட்ட விழா மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. அண்மையில் ஸ்ரீ பாலசுப்பிரமணியம் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட இந்த ரத வெள்ளோட்டம் காராக் சாலையை வலம் வந்தது. அந்த வெள்ளோட்ட நிகழ்ச்சியின் போது நமது பாரம்பரிய நடனங்களும் பக்திப் பாடல்களும் இடம்பெற்றன. இந்த ரதத்தை ஆலயத்தின் ஸ்தாபகரும் முன்னாள் தலைவரும் ஆகிய அமரர் வீ. சின்னுவின் தம்பி வீ.

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

பொன்.வேதமூர்த்தி தலைமையில் ஒருமைப்பாட்டு நிகழ்ச்சி

சுங்கைப்பட்டாணி, ஆக.19- பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் இந்தியர்கள் எழுச்சியுடன் கலந்து கொண்ட ஒருமைப்பாட்டு ஆகஸ்ட் 18 ஞாயிற்றுக்-கிழமை முன்னிரவில் இங்கு நடைபெற்றது. இங்குள்ள 'மின் தெக்' மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் திரண்டு தேசிய மாதம் அனுசரிக்கப்படுகின்ற இந்த வேளையில் ஒற்றுமை உணர்வையும் சமூக வலிமையையும் வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மித்ராவின் துணைத் தலைமை இயக்குநர் ம.மகாலிங்கம் உரையாற்றினார். மித்ரா தற்பொழுது கண்டுள்ள

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

தற்காப்பின் அவசியத்தை உணர்த்திய விழிப்புணர்வுக் கருத்தரங்கு!

ஸ்கூடாய் ஆகஸ்ட் 19- திரான்ஸ்ஃபாமாசி மிண்டா 1 கல்வி நிலையமும் ஐேபி வெற்றிக் கரங்கள் ஒன்றிணைந்து மாணவர்களுக்கும் பெற்றாேர்களுக்கும்  விழிப்புணர்வுக் கருத்தரங்கு கடந்த 16 ஆகஸ்ட் தேதியில் திரான்ஸ்ஃபாேமசி கல்வி நிலையத்தில் சிறப்பாக நடைப் பெற்றது. இக்கல்வி நிலையத்தின் நிர்வாகி திரு வெங்கட் மற்றும் தலைமையாசிரியர் திருமதி ராணி ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்காகத் தற்காப்பு விழிப்புணவை ஏற்படுத்த வேண்டும் எனும் நாேகத்தில் ஜே.பி வெற்றிக்கரங்கள் தலைவரான திருமதி க்லாேரி மற்றும்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

பினாங்கில் 70 % உணவகங்கள் முதல் தர அந்தஸ்தைப் பெறும்..!

ஜோர்ஜ்டவுன்,  ஆக 19 2020 ஆம் ஆண்டிற்குள் பினாங்கு மாநிலத்தில் உள்ள 70 விழுக்காடு உணவகங்கள் தூய்மை நிலையில் GRED'A' எனும் முதல் தர அந்தஸ்தைப் பெற்றிருக்கும் என்று வீடமைப்பு, ஊராட்சி மன்றம் மற்றும் நகரப் பெரு வளர்ச்சி துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெகதீப் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அம்மாநிலத்திலுள்ள உணவகங்களின் தூய்மையை கண்காணிக்கும் நடவடிக்கைகளில் செபராங் பிறை மற்றும் பினாங்கு மாநகராண்மைக் கழகங்கள் தீவிரம் காட்டுவதற்கு பணிக்கப்பட்டிருப்பதால் அதன் இலக்கு

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்சமூகம்முதன்மைச் செய்திகள்

இந்தியாவுக்கான குறுகிய காலப் பயணத்திற்கு விசா தளர்வு வேண்டும்?

பினாங்கு ஆக 18- அவசர நோக்கத்தின் பேரில் இந்திய நாட்டுக்கு குறுகிய காலப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு எதிராக விதிக்கப்படும் விசா கட்டணம் தளர்த்தப்பட வேண்டுமென்று, பினாங்கு தஞ்சோங் தமிழ் முஸ்லீம் சங்கத் தலைவர் நசீர் முகைதீன் கோரிக்கை விடுத்துள்ளார். திருமணம், இறப்பு,மருத்துவச் சிகிச்சை போன்ற அவசர காரியங்கள் தொடர்பில் இரு வாரங்களுக்கு மேற் போகாமல் குறுகிய காலப் பயணமாக இந்தியா செல்லும் மலேசிய பயணிகளுக்கு விசா கட்டணத்தில் தளர்வு வழங்கப்பட

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

ஜாகிரைத் தற்காக்க நம்பிக்கைக் கூட்டணிக்கு இந்தியர்கள் வாக்களிக்கவில்லை! – ஹிண்ட்ராஃப்

கோலாலம்பூர், ஆக.18- சமய நிந்தனைப் பேச்சாளர் ஜாகிர் நாய்க்கைத் தற்காக்க நம்பிக்கைக் கூட்டணி அரசுக்கு இந்தியர்கள் வாக்களிக்கவில்லை என்று ஹிண்ட்ராஃப் தலைவர் கார்த்திக் ஷான் தெரிவித்துள்ளார். உத்வேகத்தின் ஊற்றுக்கண் ஜாகிர் நாய்க் என்று பிரதமர் துறை அமைச்சர் முஜாஹிட் யூசோஃப் ராவா அண்மையில் தெரிவித்த கருத்து இந்திய சமுதாயத்தைச் சங்கடப்படுத்தி உள்ளது. அப்படியானால், பல இன சமுதாயமாக மலேசியர்களிடையே நிலவும் அமைதிக்கும் சகோதரத்துவத்திற்கும் இன்றைய அரசு உறுதி அளிக்கமுடியுமா என்று

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

ஜாகிர் நாயக் விவகாரத்தில்:  மஇகா குரல் ஒலித்தது!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 18- ஜாகிர் நாயக் விவகாரத்தில் பாஸ் கட்சி தொடர்ந்து ஆதரவு வழங்கி வந்தால், அக்கட்சியுடனான உறவை மலேசிய இந்திய காங்கிரஸ் ஒரு முடிவுக்குக் கொண்டு வருமென அதன் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறியிருப்பது, சமூகத் தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது. இன்றைய மக்கள் ஓசை நாளிதழில் முதல் பக்கச் செய்தியாக, டான்ஶ்ரீ விக்னேஸ்வரனின் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. உறவை முறிக்கவும் தயார் என்ற தலைப்பில் மலேசிய இந்தியர்களின் விசுவாசம்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

பணிகளைத் தோளில் சுமந்து கைகளில் விருது பெற்ற இளைஞர்கள்..!

கற்றல் கற்பித்தல் மட்டுமின்றிச் சீருடை இயக்கத்திலும் மலேசிய இந்தியர்கள் உலக அளவில் சிறந்தவர்கள் என்பதைப் போர்டிக்சன் பண்டார் ஸ்பிரிங் ஹில் தமிழ்ப்பள்ளி ஆசிரியரான குகனேஸ்வரன் தமிழ்மணி மற்றும் அரச சாரணர் பார்த்திபன் காத்தவராயன் ஆகிய இருவரும் அமெரிக்கா சென்று மெய்ப்பித்து உள்ளனர். கடந்த ஜூலை மாதம் 21-ஆம் தேதி முதல் ஆகஸ்டு மாதம் வரை அமெரிக்காவில் நடைபெற்ற அனைத்துலகச் சாரணர் ஒன்று கூடும் நிகழ்ச்சியில் சிறந்த முறையில் விளங்கிய இந்த

மேலும் படிக்க