வியாழக்கிழமை, ஜனவரி 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > lingga (Page 2)
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

மலேசியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியிலிருந்து லியூ டேரன் விலகல்

கோலாலம்பூர், ஜன. 19- மலேசியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் மலேசிய ஒற்றையர் பேட்மிண்டன் வீரரான லியூ டேரன் சீனாவின் சீ யூ கியை வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றார். ஆனால், காலில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த அரையிறுதி ஆட்டத்தில் கலந்து கொள்வதிலிருந்து அவர் விலகிக் கொண்டார். அவருடன் அரையிறுதி ஆட்டத்தில் மோதவிருந்த தென்கொரியாவின் ஆட்டக்காரர் சூ வென் ஹோ இறுதியாட்டத்திற்கு நேரடியாக தகுதி பெற்றார். புக்கிட்

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

பிபிஆர் திட்டத்தை மேம்படுத்த நிலம் ஒதுக்குவீர் -ஸுராய்டா கமாருடின்

கோலாலம்பூர், ஜன.19 பிபிஆர் வீடமைப்புத் திட்டங்களை மேம்படுத்த ஒவ்வொரு மாநில அரசும் தகுந்த நிலத்தை ஒதுக்கி தர வேண்டும் என வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ஸுராய்டா கமாருடின் வலியுறுத்தினார். வசதி குறைந்தவர்களுக்கு வாங்கக்கூடிய வகையிலான நிறைய வீடமைப்புத் திட்டங்களை நிர்மாணிக்க வேண்டும் என்ற அரசின் இலக்கு இதன் வழி நிறைவேறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். அனைத்து அடிப்படை வசதிகளையும் முழுமையாகக் கொண்ட நகர்ப்புற நிலங்களைத் தருவிக்க வேண்டும்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

கோலகுபுபாருவில் ஒற்ற்றுமைப் பொங்கல்

கோலகுபுபாரு, ஜன. 18- கோலகுபுபாரு கம்போங்பாரு குடியிருப்பைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இந்திய குடும்பங்களை ஒன்றிணைக்கும் வகையில் அவ்வட்டார இளைஞர்களின் முயற்சியில் ஒற்றுமைப் பொங்கல் விழா மிக பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டது. டாக்டர் ஹரி முருகையா, பிரகாஷ் வேலு, பிரகாஷ், பவளச்செல்வன் மாரிமுத்து ஆகிய 4 இளைஞர்களின் முயற்சியில் பலவருடங்களுக்குப் பிறகு அந்தக் குடியிருப்புப் பகுதியில் அனைத்துக் குடும்பங்களும் ஒன்று சேர்ந்து கொண்டாடிய குடும்ப விழாவாக இது அமைந்தது. இந்நிகழ்ச்சியில் அந்த

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தன

பெட்டாலிங் ஜெயா, ஜன. 18 ஜனவரியின் நான்காவது வாரத்தில் ரோன்95, ரோன் 97 பெட்ரோலின் விலை 6 காசும் டீசலின் விலை 12 காசும் அதிகரித்துள்ளன. ரோன் 95 பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 1 வெள்ளி 98 காசாகவும் ரோன் 97இன் விலை 2 வெள்ளி 28 காசாகவும் டீசல் 2 வெள்ளி 17 காசாகவும் விற்கப்படும் என வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய விலை ஜனவரி 19

மேலும் படிக்க
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

நாடு முழுவதும் தைப்பூச விழாக்களில் மித்ரா முனையம்

புத்ராஜெயா, ஜன.18 பிரதமர் துறை அமைச்சர் ‘செனட்டர் பொன்.வேதமூர்த்தி கண்காணிப்பின்கீழ் செயல்படுகின்ற ‘மித்ரா அமைப்பு, நாடு முழுவதும் தைப்பூச விழா கொண்டாடப்படும் தலங்களில் தகவல முனையங்களைத் திறந்திருக்கும் என்றும் அதற்கு பொதுமக்கள் தாராளமாக வருகை தரலாம் என்றும் மித்ரா சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பினாங்கு மாநிலத்தில் தண்ணீர் மலை திருத்தலம், கெடா சுங்கைப்பட்டாணி அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயம், பேராக் மாநிலத்தில் ஈப்போ கல்லுமலை திருத்தலம், சிலாங்கூர் பத்துமலைத் திருத்தலம்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

இரதம் இழுப்பதற்கு காளைகளை வதைக்கக்கூடாது

ஜோர்ஜ்டவுன், ஜன. 18- வரும் திங்கட்கிழமை கொண்டாடப்படவிருக்கும் தைப்பூசத் திருவிழாவில் இரதத்தை இழுக்க காளைகளை பயன்படுத்தக்கூடாது என பிஎச்இபி எனப்படும் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. பிஎசிஇபியின் கீழ் உள்ள கோயில்களில் இரதம் இழுப்பதற்கு காளைகளைப் பயன்படுத்த கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தடை விதித்திருந்தாலும் அதனை சில கோயில்கள் பின்பற்றுவதில்லை என பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவரும் பினாங்கு துணை முதல்வருமான பேராசிரியர் பி

மேலும் படிக்க
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

குடிநீர் கட்டண உயர்வு விவகாரம்; டாக்டர் சேவியர் ஜெயகுமார் விளக்கம்

கோலாலம்பூர், ஜன 16 குடிநீர் கட்டணத்தை உயர்த்தும் பரிந்துரைக்கு சில மாநிலங்கள் இன்னும் இணக்கம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று குடிநீர், நிலம் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் தெரிவித்தார். 25 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. குடிநீர் கட்டணத்தை உயர்த்தாமல் நாட்டின் குடிநீர் விநியோக பராமரிப்பிற்கான செலவை சமாளிப்பது அரசாங்கத்திற்கு சிரமமானதாக அமையும் என அவர்

மேலும் படிக்க
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

ஜோ லோவை தேடும் பணி தொடர்கிறது-டான்ஸ்ரீ முகமட் ஃபுசி ஹருண்

கேமரன் மலை, ஜன. 13- 1எம்டிபி ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட தொழிலதிபர் ஜோ லோவை தேடுவதில் இண்டர்போல் எனப்படும் அனைத்துலக போலீசுடன் அரச மலேசிய போலீஸ் தீவிரமான தொடர்புகளை ஏற்படுத்தி வருகிறது என தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஃபுசி ஹருண் தெரிவித்துள்ளார். அதோடு ஜோ லோவை கண்டுபிடிக்க சீன நாட்டு அதிகாரிகளுடன் மலேசிய போலீஸ் சில சந்திப்புகளை நடத்தியிருக்கின்றது. கேமரன் மலையில் உள்ள தங்கும் விடுதியில்

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

14 கத்திக் குத்து; இந்திய ஆடவர் பலி

புக்கிட் மெர்தாஜம், ஜன. 13 இங்குள்ள தாமான் புலாசானில் நேற்று பகல் 3.10 மணியளவில் இந்திய ஆடவர் 14 கத்திக் குத்துக் காயங்களுடன் இறந்துகிடந்தார். அவர் தங்கியிருந்த அடுக்ககத்தின் கீழ் தளத்தில் ஆர். மனோகரன் (வயது 55) எனும் அந்த நபர் இறந்து கிடந்ததை கண்டு அவரது நண்பர் திடுக்கிட்டார். அவருடைய வயிற்றில் ஒரு கத்தி குத்தப்பட்ட நிலையில் அப்படியே இருந்தது. மனோகரனின் கண்காணிப்பில் வேலை செய்யும் அந்நிய தொழிலாளர்களின்

மேலும் படிக்க
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளி நில விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் -கணபதிராவ்

பத்துகேவ்ஸ், ஜன. 13 செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் நில விவகாரத்தை சில தரப்பினர் வேண்டுமென்றே அரசியலாக்க முயற்சி செய்கிறார்கள் என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவ் கூறினார். செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு 6 ஏக்கர் நிலம் கிடைக்க வேண்டும் என்பது வரவேற்கத்தக்க ஒன்றாக இருந்தாலும் அடிப்படை உண்மை விஷயங்கள் என்ன என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். பத்துமலை தைப்பூச திருநாளை

மேலும் படிக்க