வியாழக்கிழமை, ஜனவரி 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > aran (Page 2)
அரசியல்சிறப்புச் செய்திகள்பொதுத் தேர்தல் 14மற்றவைமுதன்மைச் செய்திகள்

மைபிபிபி கட்சியின் பதிவு ரத்து !

கோலாலம்பூர், ஜன.14- மைபிபிபி கட்சியின் பதிவை ஆர்.ஓ.எஸ் எனப்படும் சங்கங்களின் பதிவகம் இன்று ரத்து செய்துள்ளது. அக்கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும் கடிதத்தின் நகலை  சங்கங்களின் பதிவகதிகாரி மஷாயாத்தி அபாங் இப்ராஹிம் அக்கட்சியின் தலைவர்களுக்கு அனுப்பி இருக்கிறார். கடந்த ஆண்டில் 14 ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, மைபிபிபி கட்சியின் தலைமைத்துவ போரட்டம் வெடித்தது. இதில் கட்சியின் அப்போதைய தலைவர் டான் ஶ்ரீ கேவியஸ் பதவி விலகுவதாக கடிதம் ஒன்றை

மேலும் படிக்க
விளையாட்டு

உலகின் சிறந்த கோல் காவலர் டாவிட் டே ஹே !

லண்டன், ஜன்.14- மென்செஸ்டர் யுனைடெட் கோல் காவலர் டாவிட் டே ஹே, உலகின் மிகச் சிறந்த கோல் காவலர் என அந்த கிளப்பின் இடைக்கால நிர்வாகி ஓலே கன்னர் சோல்ஜ்ஸ்கர் தெரிவித்துள்ளார். அதேவேளையில் மென்செஸ்டர் யுனைடெட்டின் வரலாற்றிலும் மிக சிறந்த கோல் காவலர் என்ற அந்தஸ்தை அவர் பெறுவார் என சோல்ஜ்ஸ்கர் கூறினார். ஞாயிற்றுக்கிழமை வெம்பிளி அரங்கில் நடந்த இங்கிலீஷ் பிரீமியர் லீக் ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் 1 -

மேலும் படிக்க
விளையாட்டு

லா லீகாவில் 400 ஆவது கோலை அடித்தார் மெஸ்சி !

மாட்ரிட், ஜன.14- ஸ்பெயின் லா லீகா கால்பந்துப் போட்டியில் பார்சிலோனாவின் லியோனெல் மெஸ்சி தனது 400 ஆவது கோலைப் போட்டு அதிரடி படைத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடந்த லீக் ஆட்டத்தில் பார்சிலோனா 3 - 0 என்ற கோல்களில் எய்பார் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் பார்சிலோனா, ஐந்து புள்ளிகள் வித்தியாசத்தில் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஐரோப்பா அளவில் 400 ஆவது லீக் கோலைப் போட்டிருக்கும் இரண்டாவது ஆட்டக்காரராக மெஸ்சி

மேலும் படிக்க
விளையாட்டு

காராபாவோ கிண்ணம் – செல்சியை வீழ்த்தியது டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் !

லண்டன், ஜன.9- இங்கிலாந்தின் காராபோவா கிண்ண கால்பந்துப் போட்டியின் ( லீக் கிண்ணம் ) முதல் அரையிறுதி ஆட்டத்தில் , டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர்  1 - 0 என்ற கோலில் செல்சியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பரின் ஒரே கோலை அதன் தாக்குதல் ஆட்டக்காரர் ஹாரி கேன் அடித்தார். 26 ஆவது நிமிடத்தில் கிடைத்த பினால்டியின் மூலம் ஹாரி கேன் அந்த கோலைப் போட்டார். இந்த கோலானது ,

மேலும் படிக்க
விளையாட்டு

ஆப்ரிக்காவின் சிறந்த கால்பந்து ஆட்டக்காரர் விருதை தற்காத்தார் முஹமட் சாலா !

டாக்கார், ஜன.9- 2018 ஆம் ஆண்டுக்கான ஆப்ரிக்க மண்டலத்தின் சிறந்த கால்பந்து ஆட்டக்காரர் விருதை எகிப்தின் முஹமட் சாலா தற்காத்துக் கொண்டுள்ளார். செவ்வாய்கிழமை செனகலில் நடைபெற்ற விருதளிப்பு விழாவில், லிவர்பூலின் சாலா, செனகலின் சாடியோ மானே, காபோனின் பியேரி எமெரிக் அவ்பாமேயாங்கைப் பின்னுக்குத் தள்ளி விருதை தட்டிச் சென்றார். சிறு வயது முதலே ஆப்ரிக்காவின் சிறந்த கால்பந்து ஆட்டக்காரர் விருதை வெல்ல வேண்டும் என்பது தமது கனவாகும் என சாலா

மேலும் படிக்க
விளையாட்டு

இங்கிலாந்து எப்.ஏ கிண்ணப் போட்டி – நான்காவது சுற்றில் மோதும் மென்செஸ்டர் யுனைடெட் , அர்செனல்

லண்டன், ஜன.8- 2018/19 ஆம் பருவத்துக்கான இங்கிலாந்து எப்.ஏ கிண்ண கால்பந்துப் போட்டியின் நான்காவது சுற்றில் அதிக முறை கிண்ணத்தை வென்றுள்ள அர்செனலும், மென்செஸ்டர் யுனைடெட்டும் மோதவிருக்கின்றன. இங்கிலாந்து எப்.ஏ கிண்ண கால்பந்துப் போட்டியின் நான்காவது சுற்றுக்கான குலுக்கல் திங்கட்கிழமை லண்டனில் நடைபெற்றது. இதில் அர்செனல் தனது சொந்த அரங்கில் மென்செஸ்டர் யுனைடெட்டை சந்திக்கவிருக்கிறது. அதேவேளையில், இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியின் நடப்பு வெற்றியாளரான மென்செஸ்டர் சிட்டி, தனது

மேலும் படிக்க
விளையாட்டு

இங்கிலாந்து எப்.ஏ கிண்ணம் – 3 ஆவது சுற்றில் கவிழ்ந்தது லிவர்பூல் !

வோல்வர்ஹாம்ப்டன், ஜன.8- 2018/19 ஆம் பருவத்துக்கான இங்கிலாந்து எப்.ஏ கிண்ண கால்பந்துப் போட்டியின் 3 ஆவது சுற்றில் லிவர்பூல் 1- 2 என்ற கோல்களில் வோல்வர்ஹாம்ப்டனிடம் தோல்வி கண்டுள்ளது. இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் தற்போது முதலிடத்தில் இருக்கும் லிவர்பூல் தொடர்ச்சியாக இரண்டு ஆட்டங்களில் தோல்வி கண்டிருப்பது அதன் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது. கடந்த வாரம் மென்செஸ்டர் சிட்டிக்கு எதிராக களமிறக்கிய அணியைக் காட்டிலும், வோல்வர்ஹாம்ப்டனுக்கு எதிராக லிவர்பூல்

மேலும் படிக்க
விளையாட்டு

ஜூன் மாதம் வரையில் அர்செனலில் நீடிக்க ஏரோன் ரம்சே முடிவு !

லண்டன், ஜன.7- அர்செனல் மத்திய திடல் ஆட்டக்காரர் ஏரோன் ரம்சே, ஜனவரி மாதம் அந்த கிளப்பை விட்டு வெளியேற மாட்டார் என கூறப்படுகிறது. அர்செனல் கிளப்புடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத பட்சத்தில் வரும் ஜூன் மாதம் வரையில் அந்த கிளப்பில் தொடர்ந்து நீடிக்க ஏரோன் ரம்சே திட்டமிட்டுள்ளதாக ஈ.எஸ்.பி.என் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டிருக்கிறது. கடந்த ஆண்டில் செப்டம்பர் மாதம் அர்செனல் கிளப்பின் நிர்வாகம் , வாரம் ஒன்றுக்கு ஒரு

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

ஜனவரி 31 -ல் புதிய மாமன்னர் பதவியேற்பார் – இஸ்தானா நெகாரா !

கோலாலம்பூர், ஜன.7- நாட்டின் 16 ஆவது மாமன்னர் வரும் ஜனவரி 31 ஆம் தேதி பதவியேற்பார் என இஸ்தானா நெகாரா சற்று முன்னர் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளது.  அதேவேளையில் புதிய மாமன்னரைத் தேர்தெடுப்பதற்கான கூட்டம் மலாய் ஆட்சியாளர் மன்றத்தின் கூட்டம் வரும் ஜனவரி 24 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இஸ்தானா நெகாராவில் காலையில் நடைபெற்ற மலாய் ஆட்சியாளர் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அரச முத்திரை

மேலும் படிக்க
விளையாட்டு

தாய்லாந்து பயிற்றுனர் மிலோவன் ரஜேவேச் நீக்கப்பட்டார் !

அபுதாபி, ஜன.7- 2019 ஆசிய கிண்ண கால்பந்துப் போட்டியின் முதல் ஆட்டத்தில் தாய்லாந்து 1 - 4  என்ற கோல்களில் இந்தியாவிடம் தோல்வி கண்டதை அடுத்து, மிலோவன் ரஜேவேச் பயிற்றுனர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.  தாய்லாந்தின் சிரிசாக் யோட்யார்தை தற்காலிகமாக பயிற்றுனராக செயல்படுவார் என தாய்லாந்து கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டுத் தொடங்கி, கானாவைச் சேர்ந்த  மிலோவன் தாய்லாந்து கால்பந்து அணியின் பயிற்றுனராக செயல்பட்டு வருகிறார்.

மேலும் படிக்க