வியாழக்கிழமை, ஜனவரி 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் (Page 2)
அரசியல்முதன்மைச் செய்திகள்

டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் பேராளர் குழு புது டெல்லி பயணம்!

புதுடில்லி, ஜன 20- மஇகா சார்பில் இந்தியா வாரணாசியில் நடைபெறவிருக்கும் பரவாசி பாரதீய திவாஸ் மாநாட்டிற்கு 250 பேராளர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை அவர்கள் அனைவரும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புதுடில்லிக்கு பயணமாகின்றனர். இன்று மதியம் புதுடில்லியிலிருந்து புறப்பட்டு வாரணாசியை சென்று அடைவார்கள். இந்தியாவின் தேசபிதா மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிய நாளை பரவாசி பாரதீய திவாஸ் என அந்நாட்டு அரசு மாநாடாக

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

பூஜையுடன் துவங்கியது தளபதி 63 படப்பிடிப்பு

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் விஜய்யின் 63ஆவது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது. படத்தின் பூஜையில் நடிகர் விஜய், இயக்குநர் அட்லி, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு, கலை இயக்குநர் முத்துராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். விளையாட்டு துறையை மையப்படுத்தி படம் உருவாகிறது. கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்துஜாவும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

இபிஎப் இலாப ஈவு குறையுமா?

கோலாலம்பூர், ஜன.20 இபிஎப் எனப்படும் ஊழியர் சேமநிதி வாரியம் இவ்வாண்டிற்க்கான இலாப ஈவுத் தொகையை விரைவில் அறிவிக்க உள்ளது. அநேகமமாக இன்னும் 3 வாரத்தில் அதாவது பிப்ரவரி மத்தியில் இபிஎப் தொகைக்கன இலாப் ஈவு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது கடந்த ஆண்டு 6.9 விழுக்காடு இலாப ஈவு அறிவிகப்பட்டிருந்த நிலையில் இவ்வாண்டு அதைவிடக் குறைவானத் தொகையாக அறிவிக்கப்படும் என நம்பப்படுகிறது.

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

ஆஸ்ட்ரோவின் அனைத்து தளங்களில் தைப்பூச சிறப்பு நேரடி நிலவரங்கள்!

கோலாலம்பூர், ஜன 20- ஒவ்வொரு ஆண்டும் மலேசியாவில் நடைபெறும் தைப்பூசத் திருநாள் கொண்டாட்டங்களை ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி, செயலி, ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கம் போன்ற தளங்களில் மக்களுக்குக் கொண்டு செல்லும் மாபெரும் பணியை இந்த ஆண்டும் தொடர்ந்து மேற்கொண்டுள்ளது. இன்று ஜனவரி 20-ஆம் தேதி தொடக்கம் ஜனவரி 21-ஆம் தேதி வரை ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201, ஆஸ்ட்ரோ விண்மீன் எச்.டி அலைவரிசை 231, அஸ்ட்ரோ கோ செயலி மற்றும் www.astroulagam.com.my/thaipusam2019

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

மலேசியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியிலிருந்து லியூ டேரன் விலகல்

கோலாலம்பூர், ஜன. 19- மலேசியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் மலேசிய ஒற்றையர் பேட்மிண்டன் வீரரான லியூ டேரன் சீனாவின் சீ யூ கியை வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றார். ஆனால், காலில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த அரையிறுதி ஆட்டத்தில் கலந்து கொள்வதிலிருந்து அவர் விலகிக் கொண்டார். அவருடன் அரையிறுதி ஆட்டத்தில் மோதவிருந்த தென்கொரியாவின் ஆட்டக்காரர் சூ வென் ஹோ இறுதியாட்டத்திற்கு நேரடியாக தகுதி பெற்றார். புக்கிட்

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

பிபிஆர் திட்டத்தை மேம்படுத்த நிலம் ஒதுக்குவீர் -ஸுராய்டா கமாருடின்

கோலாலம்பூர், ஜன.19 பிபிஆர் வீடமைப்புத் திட்டங்களை மேம்படுத்த ஒவ்வொரு மாநில அரசும் தகுந்த நிலத்தை ஒதுக்கி தர வேண்டும் என வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ஸுராய்டா கமாருடின் வலியுறுத்தினார். வசதி குறைந்தவர்களுக்கு வாங்கக்கூடிய வகையிலான நிறைய வீடமைப்புத் திட்டங்களை நிர்மாணிக்க வேண்டும் என்ற அரசின் இலக்கு இதன் வழி நிறைவேறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். அனைத்து அடிப்படை வசதிகளையும் முழுமையாகக் கொண்ட நகர்ப்புற நிலங்களைத் தருவிக்க வேண்டும்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

கோலகுபுபாருவில் ஒற்ற்றுமைப் பொங்கல்

கோலகுபுபாரு, ஜன. 18- கோலகுபுபாரு கம்போங்பாரு குடியிருப்பைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இந்திய குடும்பங்களை ஒன்றிணைக்கும் வகையில் அவ்வட்டார இளைஞர்களின் முயற்சியில் ஒற்றுமைப் பொங்கல் விழா மிக பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டது. டாக்டர் ஹரி முருகையா, பிரகாஷ் வேலு, பிரகாஷ், பவளச்செல்வன் மாரிமுத்து ஆகிய 4 இளைஞர்களின் முயற்சியில் பலவருடங்களுக்குப் பிறகு அந்தக் குடியிருப்புப் பகுதியில் அனைத்துக் குடும்பங்களும் ஒன்று சேர்ந்து கொண்டாடிய குடும்ப விழாவாக இது அமைந்தது. இந்நிகழ்ச்சியில் அந்த

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தன

பெட்டாலிங் ஜெயா, ஜன. 18 ஜனவரியின் நான்காவது வாரத்தில் ரோன்95, ரோன் 97 பெட்ரோலின் விலை 6 காசும் டீசலின் விலை 12 காசும் அதிகரித்துள்ளன. ரோன் 95 பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 1 வெள்ளி 98 காசாகவும் ரோன் 97இன் விலை 2 வெள்ளி 28 காசாகவும் டீசல் 2 வெள்ளி 17 காசாகவும் விற்கப்படும் என வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய விலை ஜனவரி 19

மேலும் படிக்க
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

நாடு முழுவதும் தைப்பூச விழாக்களில் மித்ரா முனையம்

புத்ராஜெயா, ஜன.18 பிரதமர் துறை அமைச்சர் ‘செனட்டர் பொன்.வேதமூர்த்தி கண்காணிப்பின்கீழ் செயல்படுகின்ற ‘மித்ரா அமைப்பு, நாடு முழுவதும் தைப்பூச விழா கொண்டாடப்படும் தலங்களில் தகவல முனையங்களைத் திறந்திருக்கும் என்றும் அதற்கு பொதுமக்கள் தாராளமாக வருகை தரலாம் என்றும் மித்ரா சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பினாங்கு மாநிலத்தில் தண்ணீர் மலை திருத்தலம், கெடா சுங்கைப்பட்டாணி அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயம், பேராக் மாநிலத்தில் ஈப்போ கல்லுமலை திருத்தலம், சிலாங்கூர் பத்துமலைத் திருத்தலம்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

இரதம் இழுப்பதற்கு காளைகளை வதைக்கக்கூடாது

ஜோர்ஜ்டவுன், ஜன. 18- வரும் திங்கட்கிழமை கொண்டாடப்படவிருக்கும் தைப்பூசத் திருவிழாவில் இரதத்தை இழுக்க காளைகளை பயன்படுத்தக்கூடாது என பிஎச்இபி எனப்படும் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. பிஎசிஇபியின் கீழ் உள்ள கோயில்களில் இரதம் இழுப்பதற்கு காளைகளைப் பயன்படுத்த கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தடை விதித்திருந்தாலும் அதனை சில கோயில்கள் பின்பற்றுவதில்லை என பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவரும் பினாங்கு துணை முதல்வருமான பேராசிரியர் பி

மேலும் படிக்க