சனிக்கிழமை, மார்ச் 23, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > பொதுத் தேர்தல் 14 (Page 2)
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

தேசிய முன்னணியில் இருந்து ம. இ.கா – ம. சீ. ச விலகல்!.

கோலாலம்பூர். மார்ச் 4- தேசிய முன்னணியில் இருந்து மஇகாவும் மசீசவும் விலகுவதற்கு முடிவு செய்துள்ளன. அவ்விரு கட்சிகளும் திங்கட்கிழமை நடத்திய கூட்டத்திற்கு பின்னர் இந்த முடிவு காணப்பட்டதாக ம.இ.கவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ, விக்னேஸ்வரனும் ம. சீ ச தலைவர் டாக்டர் வீ கா சீயோங் வெளியிட்ட கூட்டறிக்கையில் இதனை தெரிவித்தனர். பல்வேறு இனங்களைக் கொண்ட மலேசியாவில் ஒற்றுமையை ஊக்குவிக்கும் நோக்கத்தில் நமது தலைவர்கள் தேசிய முன்னணியை தோற்றுவித்தனர்.

மேலும் படிக்க
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

பாஸ் ஆதரவு எனக்கு தேவையில்லை – துன் டாக்டர் மகாதீர்

கிள்ளான், பிப். 26- நாடாளுமன்றத்தில் தமது கட்சியின் ஆதரவையும் தமது பலத்தையும் நிரூபிப்பதற்கு பாஸ் கட்சியின் ஆதரவு தமக்கு தேவையில்லை என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் திட்டவட்டமாக கூறி இருக்கின்றார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள நம்பிக்கை கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தமக்கு போதுமானது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் 50 விழுக்காடு ஆதரவுதான் எனக்கு தேவைப்படுகின்றது. அது போதுமான அளவில் இருக்கும் நிலையில் பாஸ் கட்சியின் ஆதரவு

மேலும் படிக்க
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

செமினி தொகுதியைக் கைப்பற்ற தேசிய முன்னணி தீவிரம்…!

கோலாலம்பூர். பிப் 24- செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தேசிய முன்னணி தீவிரமாக போராடி வருகிறது.தற்போது 56 இடங்களைக் கொண்ட சிலாங்கூர் சட்டமன்றத்தில் 4 இடங்களை மட்டுமே தேசிய முன்னணி கொண்டுள்ளது. மார்ச் இரண்டாம் தேதி நடைபெறவிருக்கும் செமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்றால் மாநில சட்டமன்றத்தில் தனது தொகுதியை ஐந்தாக அதிகரித்து கொள்ள முடியும். அதிகரித்து கொள்ள முடியும். பல ஆண்டுகாலம் தேசிய

மேலும் படிக்க
அரசியல்சிறப்புச் செய்திகள்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

செமினி இடைத்தேர்தல் : வெற்றி யாருக்கு? பிரச்சாரம் தீவிரமடைந்தது!

(அரசியல் விமர்சகர் பார்வையில்) மார்ச் 2ஆம் தேதி நடைபெறவிருக்கும் செமினி சட்டமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு தற்போது பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. ஜனவரி 11ஆம் தேதி செமினி சட்டமன்ற உறுப்பினராக இருந்த நம்பிக்கை கூட்டணியைச் சேர்ந்த பக்தியார் முகமது நோர் காலமானதைத் தொடர்ந்து அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. இந்த இடைத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணி, தேசிய முன்னணி , பிஎஸ்எம் கட்சி மற்றும் சுயேட்சையும் போட்டியிடுகின்றனர். இதற்கு முன் தேசிய முன்னணியின்

மேலும் படிக்க
அரசியல்சமூகம்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

நம்பிக்கை கூட்டணி ஆட்சியில் பெண்களின் வளர்ச்சி குறைந்து விட்டது! – ஐபிஎப் மகளிர் தலைவி ராஜம்மா சாடல்

செமினி, பிப். 22- நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது முதல் தனித்து வாழும் தாய்மார்கள் உட்பட பெண்களின் கை தொழில் மேம்பாட்டு திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என ஐபிஎப் கட்சியின் தேசிய மகளிர் பிரிவு தலைவி ராஜம்மா குற்றம்சாட்டியுள்ளார். தேசிய முன்னணி ஆட்சி காலத்தில் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களை மேம்படுத்தும் நோக்கத்தில் பலதரப்பட்ட கடனுதவித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக இதில் இந்திய பெண்களும் விடுபட்டு விடக்கூடாது

மேலும் படிக்க
அரசியல்சமூகம்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

செமினியில் 3000 இந்திய வாக்காளர்களை மஇகா வென்றெடுக்கும்! – டத்தோ அசோஜன் நம்பிக்கை

செமினி, பிப். 22- செமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் 3,000 இந்திய வாக்காளர்களை தேசிய முன்னணிக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇகா) ஈடுபட்டுள்ளது. இதுவரையில் ஆயிரத்திற்கும் அதிகமான வாக்காளர்களை சந்தித்து விட்டோம் அதனால் தேசிய முன்னணி இம்முறை கணிசமான அளவு இந்திய வாக்காளர்களின் ஆதரவைப் பெறும் என மஇகாவின் நிர்வாக செயலாளர் டத்தோ அசோஜன் நம்பிக்கை தெரிவித்தார். செமினி சட்டமன்றத் தொகுதியை பொறுத்தவரையில் உயர்மட்ட தலைவர்களில் இருந்து

மேலும் படிக்க
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

ரந்தாங் இடைத்தேர்தலில் ஶ்ரீராம் போட்டியிடுவரா? பல்டி அடித்தார் அஸ்மின் அலி

சிரம்பான், பிப். 19- நெகிரி செம்பிலான், ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான பொருத்தமான வேட்பாளரை நம்பிக்கைக் கூட்டணி விரைந்து தேர்ந்தெடுக்குமென பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி கூறியிருக்கின்றார். இதன் மூலம் டாக்டர் ஶ்ரீராம் தான் வேட்பாளர் என்பது தற்போது உறுதியில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் நம்பிக்கைக் கூட்டணி இந்திய தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள். அத்தொகுதியை தேசிய முன்னணியிடமிருந்து பறிப்பதற்கான வியூகங்களையும் நம்பிக்கைக் கூட்டணி வகுக்கும்

மேலும் படிக்க
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

செமினி சட்டமன்றத் தேர்தல் : சனிக்கிழமை வேட்புமனு தாக்கல்! வெற்றி யாருக்கு? பரபரக்கும் தேர்தல் களம்

செமினி, பிப். 15- செமினி சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை சனிக்கிழமை 16ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் நால்வர் போட்டியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகத்தான பலப்படும் நம்பிக்கை கூட்டணியின் சார்பில் 30 வயதுடைய முகமட் அய்மான் போட்டியிடுகிறார். இவர் பெர்சத்து கட்சியின் உலு லங்காட் தொகுதியின் பொருளாளராகவும் இருந்து வருகிறார். எதிர்க்கட்சியான தேசிய முன்னணி அம்னோவின் சார்பில் 58 வயதுடைய ஸாகரியா ஹனாபியை களமிறக்க இருக்கிறது.

மேலும் படிக்க
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

சபாவில் ஃபிரிபூமி பெர்சத்து கால்பதிக்கும்! – துன் டாக்டர் மகாதீர் உறுதி

கோலாலம்பூர், பிப். 15- மலேசிய ஃபிரிபூமி பெர்சத்து கட்சி சபாவில் தமது கிளையை அமைக்கும் என அக்கட்சியின் தலைவரும் பிரதமருமான துன் டாக்டர் மகாதீர் திட்டவட்டமாகக் கூறினார். சபா மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஷாபி அப்டால் அவர்களின் வாரிசான் கட்சியை எதிர்த்து இக்கட்சி உருவாக்கப்படவில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். மாறாக தமது கட்சி மாநில மந்திரி பெசாருக்கு மேலும் வலு சேர்க்கும் என கூறியுள்ளார். மாநில மந்திரி பெசாரின் கரத்தை

மேலும் படிக்க
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

நஜீப்பின் ஆதரவு அலையால் செமினியை தேசிய முன்னணி வென்றெடுக்கும்! – பாஸ் நம்பிக்கை

செமினி, பிப். 15- செமினி சட்டமன்றத் தொகுதியை தேசிய முன்னணி வென்றெடுக்க அதிக வாய்ப்பு உள்ளதாக பாஸ் கட்சி நம்புகிறது. செமினி பகுதிக்கு தேசிய முன்னணியின் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதமருமான டத்தோஸ்ரீ நஜிப் வருகை தந்த போது அங்கு எழுந்த ஆதரவு அலையை பார்க்கும்பொழுது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் தெரிவித்தார். வாக்காளர்கள் மத்தியில் மிகப்பெரிய மனமாற்றம்

மேலும் படிக்க