அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் (Page 2)
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

காணாமல்போன அயர்லாந்து இளம்பெண்ணை தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும்!

சிரம்பான். ஆக 11- காணாமல்போன அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த 15 வயது இளம்பெண் நோரா அனி கொய்ரினை தேடும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும். ஆகக் கடைசியாக இந்த பெண் காணப்பட்ட இடத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் மட்டுமே தேடும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என நெகிரி செம்பிலான் போலீஸ் தலைவர் துணை கமிஷனர் டத்தோ முகமட் மாட் யூசோப் கூறினார்.  ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் காணாமல்போன நோராவை

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

கைகலப்பிற்கும் ஆலயத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை! – ஷர்மிளா

பெஸ்தாரி ஜெயா, ஆகஸ்ட் 8- கடந்த சில நாட்களுக்கு முன்பு பெஸ்தாரி ஜெயா சுங்கை டாரா வட்டாரத்தில் நிகழ்ந்த இரு கும்பல்களுக்கிடையிலான மோதலுக்கும் அருள்மிகு ருத் ராமா காளியம்மன் ஆலயத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என ஆலயத் தலைவர் ஷர்மிளா தேவி தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை 4ஆம் தேதி இரவு 8 மணியளவில் இரு கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு கை துண்டானது. அதில் போலீஸ்காரருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டது.

மேலும் படிக்க
குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

மகளை ஒரு முறை பார்க்க வேண்டும் என்ற தாயின் ஏக்கம் புரியவில்லையா? அருண் துரைசாமி கண்ணீர்

கோலாலம்பூர் ஜூலை 26- 10 ஆண்டுகளுக்கு மேலாக தமது மகளை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்ற தாய் இந்திரா காந்தியின் ஏக்கம் யாருக்கும் புரியவில்லையா? என இந்திரா காந்தி மகள் மீட்புக் குழுவின் தலைவர் அருண் துரைசாமி கண்ணீர் மல்க கேள்வி எழுப்பினார். மகளை தாயிடம் ஒப்படைக்க வேண்டும். பத்மநாதன் என்ற இயற்பெயர் கொண்ட முகமட் ரிடுவானை கைது செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகும் இதுவரையில்

மேலும் படிக்க
குற்றவியல்

பிடிப்பட்ட புலி இறந்து விட்டது! – டாக்டர் ஜெயக்குமார் வருத்தம்

புத்ராஜெயா, ஜூலை 23- டூங்கும், கம்போங் பெசூல் லாமா குடியிருப்புப் பகுதியில் புலி நடமாட்டம் இருந்ததாகப் தகவல் கிடைத்ததைத்லடுத்து, வனவிலங்கு பாதுகாப்புப் பிரிவினர் கடந்த ஜுலை 19-ஆம் தேதி அந்தப் புலியை பிடித்தனர். அப்போது புலியை பரிசோதித்தபோது முகத்திலும், காலிலும் காயம் ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அவாங் பெசூல் என்று அழைக்கப்படும் அந்தப் புலிக்கு சிகிச்சை வழங்க வனவிலங்கு இலாகாவினர் அப்புலியை சுங்கையில் உள்ள வனவிலங்கு பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு சென்றனர்

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

தஞ்சோங் மாலிம் மாவட்ட மன்ற உறுப்பினர்கள் போலிஸ் புகார்!

சிலிம்ரிவர், ஜூலை 16- அண்மையில் தனது முகநூல் பக்கத்தில் சிலிம் நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டக் கருத்துப் பதிவை ஒட்டி இங்குள்ள தஞ்சோங் மாலிம் மாவட்ட மன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் போலிஸ் புகாரையும் செய்துள்ளனர். இரகசியக் காப்புக்கு உட்பட்டத் தகவலை அந்த சட்ட மன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ளதாகவும், மாவட்ட மன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் பேசப்பட்டு இன்னும் ஆவணப்படுத்தப்படாத சில செய்திகளையும் பொய்யான கூற்றுகளையும் வெளியிட்டு மாவட்ட மன்ற உறுப்பினர்கள்,

மேலும் படிக்க
குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

டத்தோஸ்ரீ வேள்பாரி, தமிழ்நேசன் நிர்வாகம் மீது முன்னாள் ஊழியர்கள் போலீஸ் புகார்?

கோலாலம்பூர் ஜூலை 16- தென்கிழக்காசியாவில் மிகவும் பழமையான நாளிதல் என்ற பெருமையை கொண்டிருந்த தமிழ்நேசன் கடந்த ஜனவரி மாத இறுதியோடு வெளிவராது என அதன் நிர்வாகம் அறிவித்திருந்தது. அங்கு பணியாற்றியவர்களுக்கு பிப்ரவரி, மார்ச் மாத ஊதியம் வழங்கப்படும் என உறுதி கடிதம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மார்ச் மாத ஊதியம் இன்னமும் கிடைக்கவில்லை. இத்தனை ஆண்டு காலமாக வேலை செய்த எங்களுக்கு எந்த நஷ்ட ஈடும் வழங்கப்படவில்லை என்பதை முன்னிறுத்தி அதன்

மேலும் படிக்க
அரசியல்குற்றவியல்

ஒரே நாளில் 33 லட்சம் வெள்ளியை நஜீப் செலவு செய்தார்!

கோலாலம்பூர் ஜூலை 16- ஒரே நாளில் தமக்குச் சொந்தமான இரண்டு கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி 33 லட்சம் வெள்ளியை நஜீப் செலவிட்டார் என கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சுவிட்சர்லாந்திலுள்ள நகைக்கடையில் நகை வாங்குவதற்கு அவர் 33 லட்சம் வெள்ளியை கிரெடிட் கார்டு மூலம் செலவிட்டதாகவும் கூறப்பட்டது. ஆம் பேங்கின் கிரெடிட் கார்டு அனுமதி மற்றும் மோசடி பிரிவின் முத்த அதிகாரியான யோ இங் லியோங் (வயது 58)இதனைத் தெரிவித்தார். ஆர்

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

ஸ்ரீதரன் கொலை ! தங்கை மற்றும் ஆடவனுக்கும் காவல் நீட்டிப்பு !

தைப்பிங் ஜூலை 8- கால்வாயில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட ஸ்ரீதரன் கொலைச் சம்பவம் தொடர்பாக கைதான இருவரிடம் தொடர் விசாரணை மேற்கொள்ள ஆறு நாள் போலீஸ்காவலில் கைப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 15 மற்றும் 16 வயதுடைய அவ்விருவரும் இங்குள்ள நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு காவலில் வைக்க அனுமதியைப் போலீசார் பெற்றனர். கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீ தரன் (வயது 16), காணாமல் போனதாக புகார் கூறப்பட்டது. இங்குள்ள இடை நிலைப்பள்ளியில் பயின்று வந்த

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

சாக்கடையில் இந்திய இளைஞரின் சடலம்; கொலையாளி சகோதரியா? போலீஸ் விசாரணை

தைப்பிங், ஜூலை 7- இங்குள்ள தாமான் கிரின்வியுவில் சாக்கடை ஒன்றில் இந்திய இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவரது சடலம் ஒரு பிளாஸ்டிக் பையினால் சுற்றப்பட்டிருந்ததாகவும் இன்று பிற்பகல் 12.18 மணியளவில் பொது மக்களால் கண்டெடுக்கப்பட்டதாகவும் தைப்பிங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஒஸ்மான் மாமாட் தெரிவித்தார். 16 வயதுடைய அந்த இளைஞர் கடந்த வெள்ளிக்கிழமை காணாமல் போனதாக அவரது குடும்பத்தார் போலீசில் புகார் செய்திருந்தனர். இச்சம்பவம் தொடர்பாக முதல் கட்ட

மேலும் படிக்க
குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

பெஸ்தினோ பங்குதாரர்களின் போராட்டம்:  தீர்ப்பு ஆகஸ்ட் 15 தேதி

ஈப்போ ஜூலை 2- பெஸ்தினோ எனும் தங்க முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்துள்ள 6764 நபர்களின் போராட்டத்திற்கான தீர்ப்பு ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்தவர்களில் 95 விழுக்காட்டுனர் இந்தியர்களாவர் இதில் வெ. 411 மில்லியன் பணத்தை முதலீடு செய்துள்ளனர் அதன் முதலீடு செய்த நபர்கள் போட்டப பணத்தை மீட்க கடந்த 10 ஆண்டுகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணத்தை மீட்க

மேலும் படிக்க