வியாழக்கிழமை, ஜூன் 27, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > உலகம் (Page 2)
உலகம்குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

பழனியில் கார் விபத்து காயமடைந்த மற்றொரு மலேசிய சிறுவன் மரணம்!

பழனி. மார்ச் 25- பழனி அருகே நிகழ்ந்த கார் விபத்தில் காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மலேசியாவைச் சேர்ந்த மற்றொரு சிறுவன் நேற்று மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே ஈஸ்வரி(வயது 38) என்ற குடும்ப மாதுவும் அவரது மூத்த மகன் சஞ்சய் (வயது 15) உட்பட மூவர் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே மாண்டனர். இந்த விபத்தில் ஈஸ்வரியின் இரட்டைப் பிள்ளைகளில் ஒருவரான தேவானந்தா என்ற பழனி (வயது 10) கடுமையாக

மேலும் படிக்க
அரசியல்உலகம்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

கிறிஸ்ட்சர்ச் சம்பவம் ஒரு படிப்பினை: பொன்.வேதமூர்த்தி அறைகூவல்

புத்ராஜெயா, நவ.19- நியூசிலாந்து கிறிஸ்ட்சர்ச் சம்பவத்தை ஒரு படிப்பினையாகக் கொண்டு மலேசியர்கள் இன்னும் ஒன்றுபட்டு ஒருமித்த உணர்வுடன் திகழ வேண்டும். அத்துடன், பொது மக்களிடம் திட்டமிட்டே வெறுப்புணர்வை விதிக்கும் தரப்பினர்டம் மலேசியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர் ‘செனட்டர்’ பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார். நியூசிலாந்து பள்ளிவாசலில் சுமார் ஒரு வாரத்திற்கு முன் மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவத்தை ஒரு பாடமாகக் கொண்டு மலேசியர்கள் அனைவரும் ஒருமைப்பாட்டு உணர்வுக்கும்

மேலும் படிக்க
அரசியல்உலகம்முதன்மைச் செய்திகள்

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டிற்கு பாகிஸ்தானின் உயரிய விருது!

கோலாலம்பூர், மார்ச் 21- பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது அவர்களுக்கு பாகிஸ்தானின் உயரிய விருது வழங்கப்படவிருகின்றது. இன்று தொடங்கி பாகிஸ்தானுக்கு மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ளும் டாக்டர் மகாதீருக்கு அந்த உயரிய விருது வழங்கப்படவிருக்கிறது. ஐ நா, ஓ.ஐ.சி எனப்படும் இஸ்லாமிய மாநாடு நிறுவனம் மற்றும் ஆசியான் ஆகிய அனைத்துலக அமைப்பில் டாக்டர் மகாதீர் ஆற்றிய அளப்பரிய பங்கிற்காக இந்த விருது வழங்கப்படவிருக்கிறது. பாகிஸ்தானுக்கான மலேசிய தூதர்

மேலும் படிக்க
இலக்கியம்உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

சிக்காகோ நகரில் பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு!

கோலாலம்பூர் மார்ச் 19- சிக்காகோ நகரில் நடைபெறவிருக்கும் பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரத்து 1,120 கட்டுரைச் சுருக்கம் கிடைத்திருப்பதாகவும் அவற்றிலிருந்து தகுதியான கட்டுரைகளைத் தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடந்து வருவதாகவும் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவர் டான்ஸ்ரீ த.மாரிமுத்து தெரிவித்தார். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் ஜூலை மாதம் 6 மற்றும் 7ம் தேதிகளில் சிக்காகோ நகரில் நடைபெறும் மாநாட்டில் படைக்கப்படும். அந்தக் கட்டுரையாளர்கள்

மேலும் படிக்க
அரசியல்உலகம்முதன்மைச் செய்திகள்

மலேசியா – சிங்கப்பூர் நட்புறவு தொடரும்! டான்ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன்

கோலாலம்பூர் மார்ச் 19- மலேசியா - சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு இடையிலான நட்புறவு தொடரும் என மேலவை தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்தார். பல்வேறான சவால்கள் இரண்டு நாடுகளுக்கு மத்தியில் நிலவும் நிலையிலும் நட்புறவு என்பது தொடர்ந்து பாதுகாக்கப்படும் என அவர் தெரிவித்தார். முன்னதாக புதன்கிழமை காலை சிங்கப்பூர் நாடாளுமன்ற சபாநாயகர் தன் சுவான் ஜின்னுடன் மரியாதை நிமித்த சந்திப்பு நடத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேற்கண்டவாறு

மேலும் படிக்க
உலகம்முதன்மைச் செய்திகள்

ஃபேஸ்புக்கில் `லைவ்’… மசூதிகளில் சரமாரி துப்பாக்கிச்சூடு… நியூ சிலாந்தில் பயங்கரம் !

கிறிஸ்ட்சர்ச், மார்ச்.15-  நியூஸிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், உயிரிழப்பு பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. எனினும், இந்தச் சம்பவத்தில் பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நியூஸிலாந்து நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ளது கிறிஸ்ட் சர்ச் நகரம். நியூஸிலாந்து நேரப்படி, வெள்ளிக்கிழமை பிற்பகல் (இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை காலை) அந்த நகரில் உள்ள அல் நூர் ( al Noor) மற்றும்

மேலும் படிக்க
உலகம்முதன்மைச் செய்திகள்

எத்தியோப்பியாவின் போயிங் 737 விமானம் விபத்துக்குள்ளானது:157 பேர் நிலை என்ன?

அடிஸ் அபாபா, மார்ச் 10- எத்தியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவிலிருந்து கென்யாவின் நைரோபியை நோக்கி புறப்பட்ட போயிங் 737 விமானம் விபத்துக்குள்ளானது. அந்த விமானம் புறப்பட்ட 6 நிமிடங்களில் ரேடாரில் இருந்து மறைந்து, தகவல் தொடர்பை இழந்தது. எத்தியோப்பியாவின் பிரதமர் அலுவலகம் இந்த விபத்தை உறுதி செய்தது. விபத்து நிகழ்ந்த இடத்தில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. விமானிகள் மற்றும் பணியாளர்கள் 8 பேரும்

மேலும் படிக்க
உலகம்முதன்மைச் செய்திகள்

இரு போலீஸ்கார்கள் கடத்தப்பட்டு கொலை

நராதிவாத், பிப். 27- போலீஸ்கார்கள் இருவர்  தேநீர் கடை ஒன்றில் இருந்து கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் தென் எல்லையின் நராதிவாத் வட்டாரத்தில் நேற்று நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. பிரிவினைவாத இயக்கத்தைச் சேர்ந்த எண்மர் அந்தக் கடைக்குள் அத்துமீறி நுழைந்து அப்போலீஸ்கார்களைக் கடத்தியதாக லெஃடனென் சராயுத் கோச்சாவோங் கூறினார்.  "போலீஸ்கார்களிடமிருந்து துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்த பின்னர் அவர்களை தங்களின் வாகனத்தில் ஏறும்படி கட்டாயப்படுத்தினர்" என்றார். " இவ்விருவரின் உடல்களும் சம்பவம் நடந்த

மேலும் படிக்க
உலகம்முதன்மைச் செய்திகள்

இந்தியா-பாகிஸ்தான் நெருக்கடி; ஏர் ஆசியா அணுக்கமாக கண்காணிக்கிறது

கோலாலம்பூர். பிப். 27- இந்தியா மற்றும் பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை ஏர் ஆசியா அணுக்கமாக கண்காணித்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான பதட்ட நிலையை தொடர்ந்து வட இந்தியாவுக்கான விமான சேவைகள் குறித்து ஏர் ஆசியா மிகவும் கவனமாக கண்காணித்து வருகிறது. வட இந்தியாவின் நிலைமையை நாங்கள் மிகவும் கவனமாக கண்காணித்து வருகிறோம். குறிப்பாக அமிர்தரஸ் மற்றும் ஸ்ரீநகருக்கான விமான சேவைகளின் தாக்கங்களை நாங்கள் அணுக்கமாக கண்காணித்து வருகிறோம். அணிகள் தங்களது

மேலும் படிக்க
உலகம்முதன்மைச் செய்திகள்

எம்எச்724 விமானம் அவசரமாக தரை இறங்கியது

ஜம்பி. பிப் 26- ஜகர்த்தாவிலிருந்து கோலாலம்பூர் புறப்பட்ட எம்எச்724  விமானம்  ஜம்பியிலுள்ள சுல்தான் டாக்கா விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியது .அந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக இந்தோனேசியாவின்  இணையதள பதிவேடு தகவல் வெளியிட்டது. ஜம்பி நகரிலுள்ள சுல்தான் விமான நிலையத்தில் இரவு மணி 9.50 அளவில் அந்த விமானம் அவசரமாக தரை இறங்கியது என கூறப்பட்டது. அந்த விமானத்தில் 7 ஊழியர்கள் உட்பட 120 பேர் இருந்ததாக

மேலும் படிக்க