அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் (Page 2)
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

தமிழகத்திற்கு ஒரு அமைச்சர் வாய்ப்பு வழங்கப்படலாம்!

புதுடெல்லி மே 24 - நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அண்ணா திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட தமிழக பாரதிய ஜனதா கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அந்த கூட்டணியின் முக்கிய கட்சியான அண்ணா திமுக கூட ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது .அதுவும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பன்னீர்செல்வத்தின் புதல்வர் மட்டுமே வெற்றி பெற்றார். பாஜக முன்னணித் தலைவர்கள் அனைவரும் தோல்வி

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

மீண்டும் அரியாசனத்தில் அமருகிறார் மோடி.. 30ஆம் தேதி பிரமாண்ட பதவியேற்பு விழா!

புது டில்லி, மே.24 -  மக்களவைத் தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து நரேந்திர மோடி வரும் 30 ஆம் தேதி பிரதமராக பதவியேற்கவுள்ளார். தமிழகத்தின் வேலூர் தொகுதியை தவிர்த்து நாடு முழுவதும் 542 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக 350 இடங்களில் அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி 3 லட்சத்து 85ஆயிரம் வாக்குகள்

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

இந்திய பொதுத் தேர்தலில் அசத்திய நாம் தமிழர் கட்சி..!

சென்னை, மே.24 - நாம் தமிழர் கட்சி முதல் முறையாக மிகப் பெரிய சாதனையை செய்துள்ளது. அவர்கள் கட்சி தொடங்கிய இத்தனை காலத்தில் இப்போதுதான் பல லட்சம் வாக்குகளை அள்ளி எடுத்து அதிசயிக்க வைத்துள்ளனர். இனவாதம் பேசுகிறார், கத்துகிறார், இளைஞர்களை தூண்டி விடுகிறார் என்று எத்தனயோ விமர்சனங்கள் இருந்தாலும் எதையும் பொருட்படுத்தாமல் நடை போட்டு வருகிறார் சீமான். யாரெல்லாம் அவரை கடுமையாக விமர்சிக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் அவர் நிதானமாக பல கேள்விகளை

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

நேர்மையான வழியில் போனால் ஜெயிக்கலாம்.. நம்பிக்கை தந்த மக்கள்.. நெகிழ்ச்சியுடன் கமல் நன்றி!

சென்னை, மே.24: வாக்களித்த மக்களுக்கு நன்றியை உரித்தாக்கிய கமல்ஹாசன், கிராமப்புறங்களில் தங்களுக்கு வாக்குகள் கிடைக்காமல் போக காரணம் பாதுகாக்கப்பட்ட ஏழ்மையே என்றும், அரசியல் கட்சிகள் தங்களது ஆதாயத்துக்காக ஏழ்மையை அகற்றாமல் பாதுகாக்கின்றன என்றும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார். நேற்றைய வாக்கு எண்ணிக்கையில் மக்கள் நீதி மய்ய கட்சியையும் உயர்த்தி அழகு பார்த்தது தமிழகம். கட்சி ஆரம்பித்து ஓராண்டு ஆன சுவடு இல்லாமல், முதிர்ச்சியான கட்சியாக வாக்குகள் தென்பட்டன. இனி வரும்

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

இந்திய நாடாளுமன்றத் தேர்தல்: அபரிதமான வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் பதவி ஏற்கிறார் மோடி

புதுடெல்லி மே 23- இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான (BJP) பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இதுவரை 345 இடங்களை பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி 94 இடங்களை வென்றுள்ளது. திரினாமுல் 22 இடங்களையும் இதர சிறு கட்சிகள்

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

மே 18; முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

கோலாலம்பூர், மே 18- இலங்கை இறுதிக்கட்ட போரின் போது தமிழர்கள் பலர் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலை சம்பவம் 10ஆம் ஆண்டு நினைவு தினமாக இன்று அனுசரிக்கப்படுகிறது. இலங்கையில் 30 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் மற்றும் அந்த நாட்டு அரசுக்கு எதிராக நீடித்து வந்த போர், கடந்த 2009 ஆண்டு, முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைகளுடன் நிறைவடைந்தது. மே 18-ஆம் நாளில் உலகமே கண் விழித்துப் பார்த்திருக்க, ஈழத் தமிழினத்தின் மீது மனிதகுலம்

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

கமலின் பேச்சுக்கு கண்டனங்கள்..!

"சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரன் என்பதால், அக்கொலைக் குறித்து கேள்வி கேட்க வந்திருக்கின்றேன்" என்று, அண்மையில், தமிழகம், கரூரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது நடிகர் கமல்ஹாசன் பேசிய பேச்சு தற்போது தமிழகத்தில் கடும் சர்ச்சையாக எழுந்திருக்கிறது. சர்ச்சைக்குரிய வகையில் கமல் பேசியது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன் கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. எதிர்ப்புகள் வலுத்ததால் கமல் 2

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்

மோடியை அறைவதாக சொல்லவில்லை – மம்தா பானர்ஜி மறுப்பு!

கொல்கத்தா,மே.10 : “மோடியை கன்னத்தில் அறைவேன்” என்று மம்தா பானர்ஜி சொன்னதாக பிரதமர் மோடி கூறியதை மம்தா பானர்ஜி மறுத்துள்ளார். மேற்கு வங்காள மாநிலம் புருலியா மாவட்டம் சிமுலியாவில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது:- மோடியை கன்னத்தில் அறைவேன் என்று நான் பேசியதாக மோடி கூறியுள்ளார். அது, ஜனநாயக அறை. மொழியை புரிந்து கொள்ளுங்கள். நான் ஏன் உங்களை அறையப்போகிறேன். நான் அப்படிப்பட்ட ஆள் அல்ல.

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் 67,600 டாலருடன் மலேசிய பெண்மணி கைது!

கோலாலம்பூர் ஏப்ரல் 26- விமானத்தின் மூலம் கோலாலம்பூருக்கு புறப்படவிருந்த மலேசிய பெண் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் 67,600 அமெரிக்க டாலர் வைத்திருந்தது தொடர்பில் அந்தப் பெண்மணி கைது செய்யப்பட்டார். இப்பெண் தடுத்து வைக்கப்பட்டதை இந்திய அதிகாரிகள் சென்னையில் உள்ள மலேசிய தூதரக பேராளர் அலுவலகத்திற்கு தெரிவித்ததாக தூதரக அதிகாரி சரவணன் கூறினார். இச்சம்பவம் தொடர்பில் இந்திய சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பெண்மணியிடம்

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

இலங்கையில் அவசர காலம் பிரகடனம்..!

இலங்கைத் தலைநகர் கொழும்புவில் ஒன்பது இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொடர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களால் அங்கு அவசரகாலச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, முழுவதும் இந்த அவசரகால சட்டத்தை அமல்படுத்த இலங்கை நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஈஸ்டர் பண்டிகையின்போது நடத்தப்பட்ட இத்தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் அச்ச நிலைமையை நீக்கி,   இலங்கையில் மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் வகையிலேயே இந்த அவசர காலச்

மேலும் படிக்க