வியாழக்கிழமை, ஜனவரி 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் (Page 2)
சமூகம்முதன்மைச் செய்திகள்

ஒற்றுமையில் வளம் பெறுவோம்! மஇகா தேசியத் தலைவரின் பொங்கல் வாழ்த்துச் செய்தி

உலகமெங்கும் வாழும் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில், எனது அன்பிற்குரிய மலேசிய வாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என நாடாளுமன்ற மேலவைத் தலைவரும் மஇகாவின் தேசியத் தலைவருமான மாண்புமிகு செனட்டர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார். உழவர் பெருமக்கள், இயற்கையின் அருளினாலும், கடின உழைப்பினாலும் விளைந்த நெற்கதிர், கரும்பு, வாழை, இஞ்சி, மஞ்சள் ஆகிய விளைபொருட்களை இறைவனுக்கு படைத்து வழிபட்டு,

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

ஸ்ரீ கோட்டை சங்கிலிக் கறுப்பர் ஆலயத் தேர்தல்: சுற்று வட்டார பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்கலாம்

செராஸ், ஜன. 14- பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் செயல்பட்டுவந்த செராஸ் ஸ்ரீ கோட்டை சங்கிலிக் கறுப்பர் ஆலயத்தில் நிர்வாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. சுற்று வட்டார பொதுமக்கள் வாக்களித்து நிர்வாகத்தை தேர்வு செய்யட்டும் என்று ஆலயத்தின் முன்னால் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். கடந்த ஓர் ஆண்டாக நடப்பு நிர்வாகத்தின் மீதுள்ள அதிருப்தியின் காரணமாக முன்னாள் நிர்வாகத்தினரும் சுற்றுவட்டார மக்களில் சிலரும் தொடர்ந்து குரல் எழுப்பி வந்ததோடு காவல்நிலையத்தில் கிட்டத்தட்ட 50 புகார்களையும் செய்துள்ளனர்.

மேலும் படிக்க
கலை உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

உலக அரங்கில் சாதனை படைக்கிறது பேட்ட! மலேசியாவில் கபாலி வசூலை மிஞ்சியது

கோலாலம்பூர் ஜன 14- மலேசியாவின் முதன்மை திரைப்பட வெளியீட்டு நிறுவனமான மாலிக் ஸ்ட்ரிம் காப்பிரேஷன் நிறுவனத்தின் வெளியீட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியீடு கண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படம் உலக அரங்கில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி வருகின்றது. மலேசியாவைப் பொறுத்தவரை கபாலி திரைப்படத்திற்கு பிறகு இத்திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை புரிந்திருக்கின்றது. குறிப்பாக கபாலியின் வசூலையும் இது கடந்துள்ளது என

மேலும் படிக்க
கலை உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

மலேசிய தல அஜித் ரசிகர் நற்பணி மன்றத்தின் விஸ்வாசம் திரைப்பட கொண்டாட்டம்

ஷாஆலம், ஜன.  14- தல அஜித் குமாரின் அனல்பறக்கும் நடிப்பில் வெளிவந்துள்ள விஸ்வாசம் திரைப்படத்தை பிரம்மாண்டமான முறையில் கொண்டாடியது மலேசிய தல அஜித் ரசிகர் நற்பணி மன்றம். கட்டுக்கடங்காத காளையாக பட்டையை கிளப்பி இருக்கும் நடிகர் அஜித்குமாரின் வெற்றி படங்களின் வரிசையில் விஸ்வாசம், குடும்பத்துடன் பார்க்கவேண்டிய கமர்ஷியல் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது, இயக்குநர் சிவாவின் உருவாக்கத்தில் அஜித் நடித்த 4ஆவது திரைப்படம் விஸ்வாசம். டி.இமான் இசை இத்திரைப்படத்திற்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளது.

மேலும் படிக்க
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளி நில விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் -கணபதிராவ்

பத்துகேவ்ஸ், ஜன. 13 செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் நில விவகாரத்தை சில தரப்பினர் வேண்டுமென்றே அரசியலாக்க முயற்சி செய்கிறார்கள் என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவ் கூறினார். செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு 6 ஏக்கர் நிலம் கிடைக்க வேண்டும் என்பது வரவேற்கத்தக்க ஒன்றாக இருந்தாலும் அடிப்படை உண்மை விஷயங்கள் என்ன என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். பத்துமலை தைப்பூச திருநாளை

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

ஜன.22 தொடங்கி இரவு 10 வரை யுடிசி மையங்கள்

கோலாலம்பூர், ஜன. 12 யுடிசி எனப்படும் நகர்ப்புற உருமாற்று மையங்கள் ஜனவரி 22ஆம் தேதி முதல் இரவு 10 மணி வரை சேவை செயல்படும். பொதுமக்களின் வேண்டுகோளுக்காகவும் அரசாங்கத்தின் செலவுகளை குறைப்பதற்காகவும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார். ஷா ஆலம், சிரம்பான், அலோர் ஸ்டார், ஜோகூர் பாரு, கோத்தா பாரு, கோலத்திரங்கானு, கெராமாட், ஆகிய இடங்களில் உள்ள மையங்கள் வார நாட்களில் இரவு 10

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தைப்பூசத் திருவிழா -டான்ஸ்ரீ நடராஜா

கோலாலம்பூர், ஜன 11 தைப்பூசத்திற்கு பத்துமலைத் திருத்தலத்தில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவஸ்தானம் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை முக்கிய கடமையாகக் கொண்டுள்ளது. எனவே, பலத்த பாதுகாப்புடன் தைப்பூச திருவிழா கொண்டாடப்படும் என ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா தெரிவித்தார். தைப்பூசத்தை முன்னிட்டு வெள்ளி ரதம் ஜனவரி 19ஆம் தேதி சனிக்கிழமையன்று விசேஷ பூஜைக்குப் பின்னர் இரவு 10.00 மணியளவில் ஸ்ரீ

மேலும் படிக்க
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

பெட்ரோலின் விலை குறைந்தது; டீசல் விலை உயர்வு

பெட்டாலிங் ஜெயா, ஜன. 11 மூன்றாம் வாரத்திற்கான பெட்ரோலின் விலை ஒரு காசு குறைந்துள்ள நிலையில் டீசல் விலை ஒரு காசு உயர்ந்துள்ளதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் அறிவித்துள்ளார். ரோன் 95 ஒரு லிட்டருக்கு 1 வெள்ளி 92 காசாகவும் ரோன்97 பெட்ரோல் 2 வெள்ளி 22 காசாகவும் டீசலின் விலை ஒரு லிட்டருக்கு 2 வெள்ளி 5 காசாகவும் விற்கப்படும். இந்த விலை ஜனவரி 12ஆம் தேதி

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

புகை பிடிக்கும் தடை: உயர்கல்வி நிலையங்களிலும் அமல் -டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா

புத்ராஜெயா, ஜன.8- புகை பிடிக்கும் தடையை உயர்கல்வி நிலையங்களிலும் அமல்படுத்த திட்டமிட்டிருப்பதாகத் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உணவகங்கள் மற்றும் நாடாளுமன்ற வளாகம் ஆகிய இடங்களில் புகை பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை உயர் கல்வி நிலையங்களிலும் அமல்படுத்தப்படவிருப்பதாக சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். பொது மற்றும் தனியார் பல்கலைக்கழகம் உட்பட அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இதனை அமல்படுத்த அமைச்சு திட்டமிட்டுள்ளதாகவும் அது

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

மை 100 பயண அட்டைகளுக்கு அமோக வரவேற்பு -அந்தோணி லோக்

கோலாலம்பூர், ஜன. 8- பிரசாரானா மலேசியா பெர்ஹாட்டின் மை 100 கணக்கற்ற சேவைக்கான பயண அட்டைகளுக்கு பயனீட்டாளர்களிடையே மகத்தான வரவேற்பு கிடைத்திருப்பதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார். இவ்வாண்டின் முதல் ஏழு நாள்களில் இந்த பயண அட்டைகள் ஆயிரக்கணக்கில் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அட்டையை டிசம்பர் மாதம் முழுவதும் 34 ஆயிரத்து 472 பேர் வாங்கியுள்ளனர். இம்மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் 30ஆயிரத்து

மேலும் படிக்க