திங்கட்கிழமை, மே 27, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் (Page 2)
அரசியல்முதன்மைச் செய்திகள்

நிலம் இடமாற்று உடன்பாடு தொடர்பில் ஸாஹிட்  – ஹிசாமுடினை எம் ஏ.ஏ.சி விசாரிக்கும்

கோலாலம்பூர் மே 22 தற்காப்பு அமைச்சின் நிலம் இடமாற்றம் உடன்பாடு   தொடர்பில்  எம் .ஏ.சி.சி  எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்  தற்போது விடுமுறையில் இருக்கும்  அம்னோவின் தலைவர் டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடியிடம் விசாரணை மேற் கொள்ளக்கூடும். இந்த விவகாரம் தொடர்பாக தற்போது  மேற்கொண்டு வரும் விசாரணையில் தொடர்பு உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என எம் ஏ சி சியின் துணை தலைமை ஆணையர்

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

ஜோ லோ தொடர்பான புதிய தகவல் கிடைத்துள்ளது

கோலாலம்பூர் மே 22 1எம்டிபி ஊழல் விவகாரம் தொடர்பில் போலீசாரால் தேடப்படும் வர்த்தகர் ஜோ லோ குறித்த புதிய தகவல்களை போலீசார் பெற்றிருப்பதாக போலீஸ் படையின் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹமிட் படோர் தெரிவித்தார். ஜோ லோவை மலேசியாவுக்கு கொண்டுவருவதற்கான சிறந்த நடவடிக்கையை போலீசார் மேற்கொள்வார்கள் என அப்துல் ஹமிட் கூறினார். எனினும் தங்களுக்கு  கிடைத்திருக்கும் புதிய தகவல் குறித்து எதனையும் ஐ.ஜி.பி தெரிவிக்கவில்ல. அதே வேளையில் ஜோ லோ

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

பேரரசரின் தந்தை  பகாங்கின் முன்னாள் சுல்தான் காலமானார்

குவாந்தான்  மே 22- பகாங் மாநிலத்தின் முன்னாள் ஆட்சியாளர் சுல்தான் ஹாஜி அகமட் ஷா இன்று காலையில்  தேசிய இருதய சிகிச்சை மையத்தில் காலமானார்.  காலை மணி 8. 50  அளவில் அவர்  காலமானதாக பகாங் மந்திரி புசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் அறிவித்தார். 88 வயதுடைய  பகாங் மாநிலத்தின் முன்னாள் ஆட்சியாளர் அகமட் ஷா 1930ஆம் ஆண்டு பெக்கானில் உள்ள இஸ்தானா மங்கா துங்காலில் பிறந்தார்.

மேலும் படிக்க
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

மஇகா சரவணனுக்கு அதிகார வேட்கை தீரவில்லை! – ஹிண்ட்ராஃப் நாகேஷ் கிருஷ்ணன்

புத்ராஜெயா, மே 21- ம.இ.கா. தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மு.சரவணன், நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இரண்டு தவணையும் துணை அமைச்சராக இரு முறையும் பொறுப்பு வகித்த பின்னும் அதிகார வேட்கை இன்னும் அவருக்கு தீரவில்லை. அதனால்தான், ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட நம்பிக்கைக் கூட்டணி அரசு கவழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். மஇகா கெப்போங் பேராளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், தங்களின் கட்சி மீட்சி பெறுவதற்கான

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

அகமட் ஸாஹிட் ஹமிடியை பதவி விலக  சொல்வதா? -அம்னோ இளைஞர் பிரிவு கண்டனம்

கோலாலம்பூர்,  மே 20- அம்னோ தலைவர் டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி தொடர்ந்து விடுமுறையில் இருக்க வேண்டும் அல்லது கட்சியின் நலன் கருதி பதவி விலக வேண்டும் என தெப்ராவ் அம்னோ டிவிஷன் தலைவர் மவ்லிசான் பூஜாங் விடுத்துள்ள கோரிக்கையை அம்னோ இளைஞர் பிரிவு நிராகரித்தது. மவ்லிசானின் அறிக்கை  அம்னோவின் நிலையை பிரதிபலிக்கவில்லை. ஒட்டுமொத்த அம்னோ மற்றும் அம்னோ இளைஞர் பிரிவு தங்களது தலைவரின் நிலை குறித்து விவாதிக்க வில்லை

மேலும் படிக்க
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

2030ஆம் ஆண்டுக்குள் இந்தியர்களின் சொத்துடமை மூன்று விழுக்காடாக உயரும்! -பொருளாதார நிபுணர் நம்பிக்கை

கோலாலம்பூர், மே 20- வரும் 2030ஆம் ஆண்டுவாக்கில் இந்தியர்களின் சொத்துடமையை 3 விழுக்காடாக உயர்த்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த இலக்கை அடையும் பொருட்டு புதிய முதலீட்டு திட்டம் ஒன்று வரையப்பட்டிருப்பதாக அலையன்ஸ் வங்கியின் பொருளாதாரப் பிரிவு அதிகாரி மனோகரன் மொட்டையன் கூறினார். அடுத்த பத்தாண்டுகளில் மலேசிய இந்தியர்களின் பொருளாதாரத்தை 3 பில்லியன் வெள்ளியாக உயர்த்த புதிய முதலீட்டு நிறுவனம் ஒன்று தோற்றுவிக்கப்படவிருப்பதாக அவர் சொன்னார். இந்த முதலீட்டு திட்டமானது

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

பினாங்கு பயனீட்டாளர் சங்கத்திற்கு விரைவில் புதிய தலைவர்

ஜோர்ஜ் டவுன்,  மே 20- பி.ப.ச. எனப்படும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மற்றும் அதன் சகோதரத்துவ இயக்கமான மலேசிய மண்ணின் தோழர் கழகம் ஆகியவற்றுக்கு விரைவில் புதிய தலைவர் நியமிக்கப்படுவார். அந்த சங்கத்தின் முழு நிர்வாக மன்ற கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப்படும். தலைவர் பதவிக்கான புதிய வேட்பாளர் முழுமையான நிர்வாக மன்ற கூட்டத்திற்குப் பின்னரே முடிவு செய்யப்படுவார் என பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் உதவித் தலைவர் முகைதீன் அப்துல்

மேலும் படிக்க
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

தாய்மொழி பள்ளிகளில் பாகுபாடு கிடையாது; பெர்சத்து கட்சி இளைஞர் பிரிவுக்கு ஜ.செ.க பதிலடி

கோலாலம்பூர்,  மே 20- மெட்ரிகுலேஷன் கல்விக்கான கோட்டா விவகாரத்தில் தாய்மொழிப்பள்ளிகளை  தொடர்புபடுத்த வேண்டாம்  என பிரிபூமி பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவுக்கு ஜ.செ.க.வின்  இளைஞர் பிரிவு பதிலடி கொடுத்துள்ளது. மாணவர்களை சேர்ப்பதில்  தமிழ் மற்றும் சீன பள்ளிகள் கோட்டா முறையை பயன்படுத்துவதில்லையென   ஜ.செ.க இளைஞர் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. மெட்ரிகுலேஷன் கல்வித்திட்டத்தின் கோட்டா முறை தொடர்பாக கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலேக்கை ம.சீ.ச, ஜ.செ.க,மற்றும் கெராக்கான் ஆகிய

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

கல்வி அமைச்சர் பதவியிலிருந்து டாக்டர் மஸ்லியை நீக்குவதற்கு ஜ.செ.க முயற்சியா? -லிம் கிட் சியாங் மறுப்பு

கோலாலம்பூர், மே 20- கல்வி அமைச்சர் பதவியிலிருந்து டாக்டர் மஸ்லி மாலேக்கை நீக்குவதற்கு ஜ.செ.க முயற்சியை மேற்கொண்டு வருவதாக கூறப்படும் தகவலை அக்கட்சியின் மூத்த  தலைவரான லிம் கிட் சியாங் மறுத்துள்ளார். இப்படி ஒரு தகவல் உண்மைக்குப் புறம்பான ஒன்று என இஸ்கந்தர் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் கிட் சியாங் தெரிவித்தார். அடுத்த பொதுத் தேர்தலில் கூட்டரசு அரசாங்கத்தின் அதிகாரத்தை  கைப்பற்றுவதற்கு எதிர்க்கட்சிகள் மேற்கொண்டு வரும் மற்றொரு தந்திரங்களில்

மேலும் படிக்க
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

பெம்பான் நிலத்திட்டத்தில் நிலம் வழங்கவேண்டும் -ஜெயகோபி வலியுறுத்து

ஈப்போ, மே. 19- பேரா மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் அறிவித்தபடி பெம்பான் நிலத்திட்டத்தில்  முதல் கட்டமாக 133  குடும்பங்களுக்கு  நிலத்தை வழங்கவேண்டும் என்று ஈப்போ பாராட் தொகுதி காங்ரகிரஸ் தலைவர் எஸ்.  ஜெயகோபி வலியுறுத்தினார். தேசிய முன்னணி ஆட்சியின் போது பெம்பான் நிலத்திட்டம் உருவாக்கப்பட்டது. இதனை மேம்படுத்த முன்னாள் பிரதமர்  டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் ரிம. 50 லட்சம் வழங்கினார். இதில் முதல் கட்டமாக 133

மேலும் படிக்க