ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > 2019 > ஆகஸ்ட் (Page 2)
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

வியாபாரத் துறையில் நீங்கள் கால்பதிக்க உங்களுடன் மின்னல் எப்.எம் கைகோர்கின்றது!

கோலாலம்பூர், ஆக 28- இந்திய சமுதாயத்தை வர்த்தக சமுதாயமாக மாற்றும் ஒரு மாபெரும் முயற்ச்சியாக ஒவ்வொரு திங்கட்கிழமைகளில் இரவு மணி 10.30க்கு  சிகரம் தொடு படைக்கப்படுகின்றது. அதிகமான இந்தியர்கள் குறிப்பாக இளைஞர்கள் வியாபாரத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் பொருட்டு வியாபார வாய்ப்புகள், அரசு சார்பற்ற அமைப்புகளின் மூலமாக கிடைக்கப்பெறும் வாய்ப்புகள், சலுகைகள், தொழில்முனைவர்களுக்கான வியாபார யுத்திகள், நுணுக்கங்கள் போன்றவை குறித்து இந்நிகழ்ச்சியில் கருத்துக்கள் பகிரப்படுகின்றன. வியாபாரிகள் தங்களது வியாபாரத்தை அடுத்த கட்ட

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

நஜீப்பிற்கு எதிரான 1எம்டிபி வழக்கு விசாரணை  தொடங்கியது

கோலாலம்பூர், ஆக 28- 1எம்டிபி நிறுவனத்தில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் தொடர்பான வழக்கு விசாரணை இன்று தொடங்கியது. இந்த வழக்கு விசாரணையின் முதல் நாளான இன்று 4 மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்குப் பின் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலை மணி 9 34 அளவில் தொடங்கிய இந்த வழக்கு விசாரணையின் போது விசாரணைக்காக நான்கு சாட்சிகள் அழைக்கப்பட்டனர் எனினும் பிற்பகல் மணி 1 .45 அளவில்

மேலும் படிக்க
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

நீக்கப்பட்ட 2 மாணவர்கள் கல்வியைத் தொடரவேண்டும் -அமைச்சர் குலசேகரன் உத்தரவு

புத்ராஜெயா, ஆக 28- அலாய்ட் ஏரோநோட்டிக் டிரேய்னிங் செண்டர் எனும் தனியார் பயிற்சி நிறுவனம்  விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இன்று மனிதவள அமைச்சர் எம்.குலசேகரனை நேரில் சந்தித்தனர். விமானத்துறை சம்பந்தப்பட்ட கல்வி திட்டங்களை இயக்கி கொண்டிருக்கும் இக்கல்லூரியில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். ஆரம்பத்தில் வெ.2,500 மட்டும் செலுத்தினால் போதும், இதர கட்டணங்கள் அனைத்தும் பிடிபிகே கல்விக் கடனுதவி வாயிலாக பெற்றுக்கொள்ளலாம் என வாக்குறுதியைக் கொடுத்து பல மாணவர்களை இக்கல்லூரியில்

மேலும் படிக்க
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

சுதந்திர போராட்டத்தின் விளைவு நல்லிணக்க சமுதாயம் –அமைச்சர் வேதமூர்த்தி

அலோர்காஜா, ஆக.28- சுதந்திரக் காற்றை சுவாசிக்க இந்த மண்ணில் தன்னெழுச்சியாக விளைந்த சுதந்திரப் போராட்டத்தின் விளைவாக இன-மொழி-சமய-கலாச்சார எல்லை-களைக் கடந்து மலாயாவில் நல்லிணக்க சமுதாயம் மலர்ந்தது என்று பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி தெரிவித்தார். இங்கு வசிக்கும் சித்தி சல்மா சாலேவின் நல்லிணக்க குடிலுக்கு வருகை மேற்கோண்ட அமைச்சர், தன் எண்ண அலைகளை இளமைப்பருவ காலத்திற்கு நகர்த்திச் சென்றார். மலேசியாவில் அனைத்து இன மக்களிடமும் காணப்படும் இணக்கமும் அனுசரிப்பும் குழந்தைப்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

ஏர் ஆசியாவின் நேரடி அரட்டை தொடர்பு முறைக்கு சிறந்த வரவேற்பு

சிப்பாங், ஆக. 28- ஏர் ஆசியாவின் வாடிக்கையாளர் அரட்டை தொடர்பு திட்டமான ஏவிஏ (AVA) எனப்படும் ஆசியா விசுவல் ஆல்ஸ்டார் முறைக்கு அபரிதமான வரவேற்பு கிடைத்திருக்கிறது. இவ்வாண்டு பிப்ரவரி மாதம் இந்த விவேக தொடர்பு  திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் உலகம் முழுவதிலும் நாள்தோறும் சராசரி 50,000 பேர் தொடர்பு  கொள்வதாக அறிவிக்கப்பட்டது. ஏர் ஆசியா குழுமத்தின் வாடிக்கையாளர் மனநிறைவு பிரிவின் தலைவர்அடாம் ஜெனிவ் ஏர் ஆசிய  தலைமையகத்தில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கம்

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

அடையாள ஆவணங்களை பரிசீலிக்கும் நடைமுறை மந்தமாகவே உள்ளது -டிரா சரவணன்

புத்ரா ஜெயா ஆக. 28- பிறப்பு பத்திரங்கள், அடையாள கார்டுகள் மற்றும் குடியுரிமை தொடர்பான அடையாள ஆவணங்களை பரிசீலிக்கும் நடைமுறை இன்னும் மந்தமாகவே இருப்பதாக  டிரா மலேசியா தலைவர் சரவணன் சின்னப்பன் தெரிவித்தார். உண்மையில் அடையாள ஆவணங்களை பதிவு செய்யவும் மற்றும் அதனை பரிசீலித்து வழங்கப்பட்ட பொற்காலமாக 2008 ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரைக்கான  காலகட்டத்தை கூற முடியும் என அவர் சுட்டிக்காட்டினார். அந்த காலகட்டத்தில் உள்துறை

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

தமிழ் நேசன் பணியாளர்களை அமைச்சர் குலசேகரன் சந்தித்தார்

புத்ராஜெயா ஆக. 27- வேலை நீக்கம் செய்யப்பட்ட தமிழ் நேசனின் முன்னாள் பணியாளர்களை மனிதவள அமைச்சர் வழக்கறிஞர் எம்.குலசேகரன் சந்தித்தார். மனிதவள அமைச்சின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் தமிழ் நேசன் நடவடிக்கை குழுவின் தலைவர் எஸ்.எம்.சுந்தர், செயலாளர் தயாளன் சண்முகம்,  ரவி முனியாண்டி,  கே.மணி மற்றும் தமிழ் நேசனின் முன்னாள் ஆசிரியர் கே.பத்மநாபன் ஆகியோரும் கலந்து கொண்டனர். அமைச்சர் குலசேகரன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பு

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

முதல் வீடு வாங்குவோருக்கு நிதிச் சலுகை! – பொன்.வேதமூர்த்தி

புத்ராஜெயா, ஆக. 27- குறைந்த வருமானம் பெறுவோர் தங்களின் முதல் வீட்டை வாங்குதவற்காக தேசிய வங்கி(பேங்க் நெகாரா) அறிவித்துள்ள நிதிச் சலுகையை சம்பந்தப்-பட்டவர்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளர். இதன் தொடர்பில் 2019 ஜனவரி 2-ஆம் நாள் 1 பில்லியன் நிதித் திட்டத்தை அறிவித்தது. மாதம் 2,300-க்கும் குறைவான ஊதியம் பெறுவோர், ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் மதிப்புள்ள முதல் வீட்டை வாங்குததற்கு இந்தத் திட்டத்திற்கு

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

ஊடகவியலாளர்களை கௌரவித்த தேசம் குழுமம்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 27- குணாளன் மணியம் தலைமையில் செயல்படும் தேசம் ஊடகம், இரண்டாவது முறையாகத் தேசம் சாதனையாளர் விழாவை மிக விமரசையாக ஏற்பாடு செய்திருந்தது. இந்த விருது விழாவிற்குப் பிரதமர் துறை அமைச்சர் பொன் வேதமூர்த்தித் தலைமையேற்றார். இதில் ஊடகத் துறையைச் சேர்ந்த 30 நபர்களுக்குத் தேசம் விருதுகள் வழங்கப்பட்டன. இதனைச் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் எடுத்து வழங்கினார். [caption id="attachment_34896" align="aligncenter" width="387"] வாழ்நாள் சாதனையாளர் விருது

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

செயற்கை கால்களுடன் கார் பந்தயத்தில் சாதனை படைக்கும் சேட்டன்

கோலாலம்பூர், ஆக 27- இரண்டு கால்களும் இல்லாதவர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து பலருக்கு வேதனையை ஏற்படுத்தி விடுவார்கள். ஆனால் சேட்டன் கொரடா இதற்கு விதிவிலக்காகத் திகழ்கிறார். பிறக்கும்போதே கால்கள் சிதைந்து இருந்ததால் முட்டிக்கு கீழே அவரது கால்கள் துண்டிக்கப்பட்டது. அதன்பின் தமது வாழ்க்கையில் செயற்கை கால்களை மட்டுமே நம்பி இருக்கவேண்டிய சூழ்நிலைக்குச் சேட்டன் உள்ளானார். தமது வயதுடைய மற்ற சிறுவர்களை ஒப்பிடுகையில் அதிகமான சிரமங்களை எதிர்நோக்கி வந்ததோடு அவரது உடல்

மேலும் படிக்க