செவ்வாய்க்கிழமை, ஜூன் 25, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > பொதுத் தேர்தல் 14 (Page 20)
பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

ஸ்கூடாயில் ம.இ.கா. கண்ணன் தோல்வி

ஸ்கூடாய், மே 9- ஸ்கூடாய் சட்டமன்ற தொகுதியில் ஜ.செ.க. டான் ஹோங் பின்னை எதிர்கொண்ட ம.இ.காவைச் சேர்ந்த தேசிய முன்னணி வேட்பாளர் எஸ்.கண்ணன் சுப்பையா தோல்வி கண்டார். அவரை டான் ஹோங் பின் 18,050 வாக்குகளில் தோற்கடித்ததாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் தெரிவித்தது.

மேலும் படிக்க
பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

சுங்கை சிப்புட்: தே.மு. வெற்றி பெறும்! டாக்டர் மைக்கல் ஜெயக்குமார்

கோலாலம்பூர், மே 9- இரண்டு தவணைகள் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக இருந்த டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் இம்முறை அத்தொகுதியில் தேசிய முன்னணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த தொகுதியில் பி.எஸ்.எம். கட்சி மட்டுமே தேசிய முன்னணியை எதிர்த்து போட்டியிட்டால் வெற்றி பெற்றிருக்கும். ஆனால், பி.கே.ஆர், பாஸ் ஆகிய கட்சிகளும் போட்டியிடுவதால் வெற்றி தேசிய முன்னணிக்கு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார். சுங்கை சிப்புட்

மேலும் படிக்க
பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

தே.மு.விற்கு ஆதரவு அளிப்பதாக உடன்பாடா? பிரபாகரன் மறுப்பு

கோலாலம்பூ, மே 9- பத்து நாடாளுமன்ற தொகுதியில் ஹராப்பான் ஆதரவுடன் போட்டியிடும் பி.பிரபாகரன் தாம் தேசிய முன்னணிக்கு ஆதரவு அளிப்பதற்கான உடன்பாட்டில் கையெழுத்திட்டிருப்பதாக வாட்சாப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் பரப்பப்படும் செய்தியில் உண்மையில்லை என தெரிவித்தார். அது பொய்யான செய்தி. சிலர் தமக்கு எதிராக கீழறுப்பு வேலைகளை செய்துள்ளதாக அவர் கூறினார். மேலும், வாட்சாப்பில் பரப்பப்படும் அந்த பொய் செய்தியை தமது முகநூல் பக்கத்தில் பி.கே.ஆரின் உதவித் தலைவரும் முன்னாள் பத்து

மேலும் படிக்க
பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

வாக்களிக்கும் நேரத்தை நீட்டிக்க பெர்சே கோரிக்கை

கோலாலம்பூர், மே 9- 14ஆவது பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்கான கால அவகாசம் மாலை மணி 5.00 அளவில் முடிவடையுள்ள நிலையில் இன்னும் பல வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்றுக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவரும் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் வாக்களிப்பதற்கான கால அவகாசத்தை தேர்தல் ஆணையம் நீடிக்க வேண்டுமென பெர்சே இயக்கம் வலியுறுத்தியது. மாலை மணி 3.00 அளவில் 69 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த பொதுத்தேர்தலை ஒப்பிடுகையில் மாலை மணி 3.00

மேலும் படிக்க
பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

ஆட்சி புரிய தே.மு.விற்கே மக்கள் ஆதரவளிப்பர்! பிரதமர் நஜீப்

பெக்கான், மே 9- அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாட்டை ஆட்சி புரிவதற்கான வாய்ப்பை மக்கள் தேசிய முன்னணிக்கே வழங்குவார்கள் என இடைக்கால பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நம்பிக்ஜைத் தெரிவித்தார். கடந்த 5 ஆண்டுகளில் அரசாங்கம் ஏற்படுத்திய கொள்கைகளின் வெற்றிகள் நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் நல்வாழ்வாதாரம் ஆகியவற்றில் ஆக்கப்பூர்வமான விளைவுகளைக் கொண்டு வந்துள்ளது ஆதாரமாக விளங்குவதால் இந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். நாட்டின் மேம்பாடு மட்டுமின்றி

மேலும் படிக்க
பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

இன்று 14ஆவது பொதுத்தேர்தல்; 14,449,200 பேர் வாக்களிக்கவுள்ளனர்!

கோலாலம்பூர், மே 9- பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த பொதுத்தேர்தலில் இம்முறை தேசிய முன்னணிக்கும் நம்பிக்கை கூட்டணிக்கும் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. 14,940,624 பதிவு பெற்ற வாக்காளர்களில் 14,449,200 வாக்காளர்கள் காலை மணி 8.00 முதல் மாலை மணி 5.00 வரையில் வாக்களிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள வாக்காளர்கள் வெளிநாட்டிலிருந்து வர முடியாத மலேசியர்கள், அஞ்சல்

மேலும் படிக்க
பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

தே.மு. வென்றால் இரண்டு நாள் விடுமுறை! நஜீப் அறிவிப்பு

கோலாலம்பூர், மே 8- நாளை நடைபெறவிருக்கும் நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் சிறப்பு விடுமுறைகள் வழங்கப்படும் என தேசிய முன்னணியின் தலைவரும் தற்காலிக பிரதமருமான டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்தார். இறுதிகட்ட பிரசாரத்தை நிறைவு செய்யும் வகையில் பெக்கானில் உரையாற்றிய போது அவர் இந்த அறிவிப்பை செய்தார். தேசிய முன்னணிக்கு மீண்டும் ஆட்சியமைப்பதற்கான அதிகாரத்தை வழங்கிய

மேலும் படிக்க
பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

ரபிசியின் அகப்பக்கம் ஹேக் செய்யப்பட்டது; தே.மு.வினர் செய்ததாக ரபிசி குற்றச்சாட்டு

கோலாலம்பூர், மே 8- தனது அகப்பக்கத்தை சிலர் ஹேக் செய்து அதிலுள்ள முக்கிய ஆவணங்களை அழித்துள்ளதாக பி.கே.ஆர். உதவித்தலைவர் ரபிசி ரம்லி தெரிவித்தார். இதனை தனது அகப்பக்கத்தின் கட்டப்பாட்டு அமைப்பு தெரிவித்ததாக இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் கூறினார். இன்று காலை மணி 10.00 முதல் ரபிசிரம்லி.கோம் எனும் எனது அகப்பக்கத்திலுள்ள நூற்றுக்கணக்கான ஆவணங்களை பார்வையிட முடியவில்லை. அவற்றை படிக்க முடியாததால் பலர் என்னை தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.

மேலும் படிக்க
பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

துன் அப்துல்லா மக்கள் நிலையை உணருவீர்; தே.மு. எது வேண்டுமானாலும் செய்யும்! துன் டாய்ம்

கோலாலம்பூர், மே 8- முன்னாள் நிதித்துறை அமைச்சரான துன் டாய்ம் ஜைனுடின் மக்களின் நிலையை முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா படாவி உணர்ந்து நம்பிக்கைக் கூட்டணி (ஹராப்பான்) ஆதரவளிக்கும்படி கேட்டுக்கொண்டார். அவர் உறங்கி கொண்டிருக்கிறார் என மற்றவர்கள் கூறியுள்ளனர். ஆனால், நான் அவ்வாறு கூறியதில்லை. அவர் மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்னைகளை உணர்ந்து ஹராப்பானுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமென அவர் கூறினார். நான் எங்கு சென்றாலும் ஹராப்பானுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி

மேலும் படிக்க
சிறப்புச் செய்திகள்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

பொதுத் தேர்தல் : மாற்றம் வருமா? தேசிய முன்னணியே நிலைபெறுமா?

14ஆவது பொதுத்தேர்தல் நாளை நடக்கின்றது. இம்முறை யார் மக்களின் ஆதரவோடு அரசாளும் அதிகாரத்தை பெறுவார்கள் என்பதை புதன்கிழமை இரவு தெரிந்துக் கொள்ளலாம். இச்சூழ்நிலையில் மக்கள் யாருக்கு முழுமையான ஆதரவு வழங்கியுள்ளார்கள் என்பதற்கு இன்றுவரை விடை இல்லை. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்களா? அல்லது 60 ஆண்டுகால ஆட்சி தொடரட்டும் என தேசிய முன்னணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவார்களா என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. இதுவரை எதிர்க்கட்சியாகவே பார்த்து பழகிய இடத்தில்

மேலும் படிக்க