சனிக்கிழமை, மார்ச் 23, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் (Page 20)
குற்றவியல்மற்றவைமுதன்மைச் செய்திகள்

சாக்லெட், உணவுகளை போலீஸ் எடுத்துக்கொண்டதால் நஜீப் கோபம்! வழக்கறிஞர் தகவல்

கோலாலம்பூர், மே 19- நஜீப்பின் பிள்ளைகளின் வீட்டில் சோதனையை மேற்கொண்ட போலீசார் அங்கு குளிர்சாதன பெட்டியில் இருந்த சாக்லெட் மற்றும் உணவுகளை போலீஸ் எடுத்து சாப்பிட்டதற்கு டத்தோஸ்ரீ நஜீப் கோபம் கொண்டதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இது குறித்து நஜீப்பின் வழக்கறிஞர் ஹர்பால் சிங் கிரெவல் வெளியிட்டுள்ள அறிக்கையில், சோதனையில் போலீசின் பொறுப்பற்ற செயல் குறித்து நஜீப் கேள்வியெழுப்பியதாகவும் கூறினார். போலீஸ் அதிகாரிகள் குளிர்சாதன பெட்டியில் இருந்த உணவுகள் மற்றும்

மேலும் படிக்க
குற்றவியல்மற்றவைமுதன்மைச் செய்திகள்

விசாரணை தகவல்களை கசிய விடாதீர்கள்; அமலாக்கத் தரப்பினருக்கு ரோஸ்மா வேண்டுகோள்

கோலாலம்பூர், மே 19- விசாரணையை மேற்கொள்ளும் அமலாக்கத் தரப்பினர்கள் அதுப்பற்றிய தகவல்கள் சமூகவலைத்தளங்களில் அதிவேகமாக பகிரப்படும் வகையில் கசிய விடக்கூடாது என முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோர் கேட்டுக்கொண்டார். குறிப்பாக, சோதணையில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் பற்றிய தகவல்கள் கசியக்கூடாது என அவர் கூறியதாக வேலென், ஓ & பார்ட்னர்ஸ் சட்ட நிறுவனம் மலேசியாகினிக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்தது. அவர்கள் துன்பத்தில் இருக்கும்

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

1எம்டிபி விசாரணைக்கு ஒத்துழைப்புத் தர தயார்! – டான்ஸ்ரீ காலிட்

கோலாலம்பூர், மே 14- 1எம்டிபி முறைகேடு மீதான விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயார் என முன்னாள் போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் கூறியுள்ளார். நான் இன்னமும் பணியில் இருக்கிறேன். என்னை சம்பந்தப்படுத்திய எந்தவொரு விசாரணைக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கிறேன் என என்.எஸ்.டி.யிடம் அவர் கூறியுள்ளார். மலேசிய உள்கட்டமைப்பு நிறுனத்தின் தலைவராக இருக்கும் டான்ஸ்ரீ காலிட் கடந்த ஆண்டு போலீஸ் படைத் தலைவர்

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

தமிழ் மலர் நாளிதழின் தளவாடங்கள், பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டது

கோலாலம்பூர், ஏப்.24- கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜாவை பற்றி அவதூறான செய்திகளை வெளியிட்டதற்காக அந்நாளிதழ் மீது கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு அவருக்கு சாதகமாக அமைந்தது. தமிழ் மலர் நாளிதழ் அவர் மீது அவதூறான செய்திகளை வெளியிட்டது நிரூபிக்கப்பட்டதால் அந்நாளிதழ் அவருக்கு இழப்பீடாக ரிம 570,000 வெள்ளியும் வழக்கிற்கான செலவு தொகையாக ரிம 220,000 வெள்ளியும் செலுத்த வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

கிள்ளானில் கொள்ளை: வைரலாகி வரும் வீடியோ பதிவு; மூவர் கைது

பெட்டாலிங் ஜெயா, ஏப்.24 கிள்ளான், தாமான் பெர்க்லே மற்றும் தாமான் புக்கிட் கூடா ஆகிய இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மூவரை போலீஸ் இன்று கைது செய்தது. இன்று அதிகாலை 4.00 மணியளவில் கிள்ளான் மற்றும் ஸ்ரீ கெம்பாங்கானில் போலீஸ் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 29 முதல் 36 வயதிற்குட்பட்ட அந்த 3 ஆடவர்களும் கைது செய்யப்பட்டதாக மாநில குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் எஸ்ஏசி பாட்ஸில்

மேலும் படிக்க
குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

போர்ட்டிக்சன் தமிழ்ப்பள்ளியில் எஸ்பிஎம் முடித்த மாணவர்களுக்கு சிறப்பு கருத்தரங்கு! தினாளன் அழைக்கிறார்

சிரம்பான், ஏப். 7- போர்ட்டிக்சன் வட்டாரத்தில் எஸ்.பி.எம் தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றும் சிறந்த தேர்ச்சியினை பெறாத மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்ட செடிக் வழி சிறப்பு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி நாளை 8/04/2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி வரை போர்ட்டிக்சன் தமிழ்ப்பள்ளியில் நடைபெறவுள்ளது. இந்த அற்புத நிகழ்ச்சியில் மாணவ,மாணவிகள்,பெற்றோர்கள் என அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மஇகா தேசிய இளைஞர் பகுதித்

மேலும் படிக்க
குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷனில் கூடுதலாக 700 இடங்கள்! பிரதமர் அறிவிப்பு

கோலாலம்பூர், ஏப். 7- உயர்கல்விக்கூடங்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை 7 விழுக்காடாக உயர்த்த வேண்டுமென்ற நோக்கத்தில் மெட்ரிகுலேஷன் கல்லூரியில் இந்திய மாணவர்களுக்கு கூடுதலாக 700 இடங்களை ஒதுக்கீடு செய்வதாக பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் துன் ரசாக் அறிவித்தார். ம.இ.கா.வின் தலைவர் டத்தோஶ்ரீ சுப்ரமணியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த ஒதுக்கீடு வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். முன்னதாக 2013ஆம் ஆண்டு காப்பாரில் நடந்த பொங்கல் விழாவில் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப், மெட்ரிகுலேஷனில் இந்திய

மேலும் படிக்க
குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

செரெண்டா தமிழ்ப்பள்ளி விவகாரம் : முத்தரப்பு பேச்சு வார்த்தை வெற்றி!

உலுசிலாங்கூர், ஏப். 6 செரெண்டா தமிழ்ப்பள்ளியின் கட்டுமான பிரச்னைக்கு துணைக் கல்வி அமைச்சர் டத்தோ பி கமலநாதன் சுமூகமான முறையில் தீர்வு கண்டுள்ளார். இத்தணை ஆண்டுகளாக கட்டுமானப் பணிகளுக்கு தடையாய் இருந்து வந்த தரப்பினருடன் மிகப் பலமாக நடத்தப்பட்ட சில பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, புதிய வாரியக் குழு அமைக்கப்பட்டு, கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்த முழு விவகாரத்திற்கும் முக்கிய நபராக விளங்குகின்ற ராமராவ், இறுதியாக டத்தோ

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

மார்ச் 6இல் எஸ்டிபிஎம் தேர்வு முடிவுகள்

கோலாலம்பூர், பிப்.27- 2017ஆம் ஆண்டின் எஸ்டிபிஎம் தேர்வு முடிவுகள் எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என்று மலேசியத் தேர்வு மன்றம் அறிவித்துள்ளது. பள்ளிகளில் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் முடிவுகளை மார்ச் 6ஆம் தேதி நண்பகல் 12.00 மணி தொடங்கி பெற்றுக் கொள்ளலாம். அதே போல் தனிப்பட்ட முறையில் தேர்வு எழுதிவர்களின் முடிவுகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் கைப்பேசியில் ‘STPM RESULT என்று டைப்

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

பாகான் டத்தோ தமிழ்ப்பள்ளியின் அனைத்துலகத் தாய்மொழி தினம்

பாகான் டத்தோ, பிப் 23- பாகான் டத்தோ (தமிழ்/தெலுங்கு) பள்ளியின் தமிழ்மொழிப்பிரிவின் ஏற்பாட்டில் பள்ளி அளவிலான அனைத்துலகத் தாய்மொழி தினம் அண்மையில் கொண்டடப்பட்டது. இவ்விழாவின் ஒருங்கிணைப்பாளரான ஆசிரியர் திரு.வரதராசன் ஏற்பாடுச் செய்த இவ்விழாவிற்கு பள்ளியின் முன்னாள் ஆசிரியர் திரு.அர்ஜூனன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார். காலை 7.45 மணியளவில் தொடங்கிய இவ்விழாவில் தமிழ்மொழியைத் தாய்மொழியாக கொண்ட பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தமிழ் பெருங்கடலில் திளைத்திருந்தனர்.

மேலும் படிக்க