அண்மையச் செய்திகள்
முகப்பு > Aegan (Page 201)
முதன்மைச் செய்திகள்

தாய்மொழிப் பள்ளிகளை அழிப்பதற்கு யாருக்கும் துணிச்சல் இல்லை

கோலாலம்பூர், ஜூலை 18 - இந்நாட்டில் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு தாய்மொழிப் பள்ளிகள் மிகவும் துணையாக இருக்கும் வேளையில், அதனை அழிப்பதற்கு யாருக்கும் துணிச்சல் இல்லையென இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் குறிப்பிட்டார்.  இந்நாட்டிலுள்ள தாய்மொழிப் பள்ளிகளை அழிப்பதற்கு அரசியலில் யாருக்குத் துணிச்சல் இருக்கிறது என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார். ஒற்றுமையை நிலைநாட்டுவதற்கு அனைத்து மாணவர்களும் ஒரே பள்ளிக்குச் செல்ல வேண்டும் என சிலர் நினைக்கின்றனர். ஆனால், அது மிகவும்

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்மற்றவைமுதன்மைச் செய்திகள்

சிறைக்கு வெளியே சசிகலா! வீடியோ இணைப்பு

பெங்களுரூ, ஜூலை 18- சசிகலாவிற்கு சிறையில் கிடைக்கும் ஜாலியான வாழ்க்கை போன்று சாமானிய சிறைக் கைதிகளுக்கு கிடைக்குமா? எவ்வளவு சுதந்திரமாக வெளியே சென்று சிறைக்கு திரும்புகிறார் சசிகலா. கருப்பு சுடிதார் போட்டுக் கொண்ட சசிகலா, பெண் போலீஸ் உதவியுடன் கடைக்கு சென்றுவிட்டு சிறைக்கு திரும்பி வருவது போன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இந்த வீடியோ காட்சி தமிழக மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [embed]https://twitter.com/Hariadmk/status/887234078407180288[/embed] சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்று

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

மகாதீர் மீது சட்ட நடவடிக்கை தேவை!

கோலாலம்பூர், ஜூலை 18- முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரூம், முன்னாள் துணைப்பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினும் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் அப்துல் ரசாக்கின் ஆட்சியைக் கவிழ்க்க திட்டமிட்டார்கள் என்ற உண்மை மகாதீரின் மகனான முக்ரிஸ் மூலமாக அம்பலமானது. ஆகையால் அவ்விருவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி அரச மலேசிய போலீஸ் படைத் தலைவரிடம் பரிந்துரைப்பதாக மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

அன்வாரே பிரதமர் – துன் மகாதீர்

புத்ரா ஜெயா, ஜூலை 18- மக்கள் விரும்பினால் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்மை தாம் பிரதமராக ஏற்றுக் கொள்வதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அறிவித்தார்.  மக்கள் விரும்பினால் அதில் தமக்கு ஆட்சேபனை இல்லையென தமது பெர்டானா தலைமைத்துவ அறவாரிய தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது இதனை அவர் அவ்வாறு தெரிவித்தார். பிரதமராவதற்கு தாம் அன்வாரை ஆதரிக்க வில்லை என்ற அவரின் செய்தி மூன்று நாள்களுக்கு முன்னர் பிரிட்டிஷ் பத்திரிகையான

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

பி.எஸ்.எம்.  தலைவராக டாக்டர் நசீர் மீண்டும் தேர்வு

கோலாலம்பூர், ஜூலை 18- பி.எஸ்.எம். எனப்படும் மலேசிய சோஷலிசக் கட்சியின் தேசியத் தலைவராக டாக்டர் முகமட் நசீர் ஹஷிம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று முன்தினம் நடந்து முடிந்த கட்சித் தேர்தலில், டாக்டர் நசீர் பெரும்பான்மை பேராளர்களால் வாக்களிக்கப்பட்டு தேர்வு பெற்றார். சிரம்பானில் நடந்த கட்சியின் 19ஆவது தேசிய மாநாட்டில், 2017/2019ஆ-ம் ஆண்டுக்கான புதிய செயலவையினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சரஸ்வதி முத்து மீண்டும் தேசியத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிவராஜன் ஆறுமுகம் தலைமை

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

பெல்டா அதிகாரிகளிடம் எம்.ஏ.சி.சி. விசாரணை

புத்ரா ஜெயா, ஜூலை 18- எப்.ஐ.சி. எனப்படும் பெல்டா முதலீட்டுக் கழகத்தின் 2 அதிகாரிகள் விசாரணைக்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எம்.ஏ.சி.சி. தலைமையகத்திற்கு நேற்று வந்தனர். எப்.ஐ.சி. குறித்து தற்போது எம்.ஏ.சி.சி. மேற்கொண்டு வரும் விசாரணைக்கு உதவுவதற்காக தங்கள் வாக்கு மூலத்தை வழங்குவதற்கு அவர்கள் அங்கு வந்ததாகத் தெரிகிறது. 2013 மற்றும் 2015ஆம் ஆண்டுக்கிடையே லண்டனில் ஹோட்டல் ஒன்றை கொள்முதல் செய்தது தொடர்பில் எம்.ஏ.சி.சி. விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மேலும் படிக்க
விளையாட்டு

2 ஆவது வெற்றியைப் பதிவு செய்தது மென்செஸ்டர் யுனைடெட்!

ஊத்தா , ஜூலை.18- அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மென்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணி தனது இரண்டாவது நட்புமுறை ஆட்டத்திலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.திங்கட்கிழமை ( மலேசிய நேரப்படி செவ்வாய்கிழமை காலை ) நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் 2 -1 என்ற கோல்களில் சால்ட் லேக் சிட்டி அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் சால்ட் லேக் சிட்டி அணி , லுவிஸ் சில்வா மூலம் முதல் கோலைப் போட்டு அதிர்ச்சியை

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

வெளிநாட்டு மாணவர்களுக்கு ஐ-கார்டு

புத்ரா ஜெயா, ஜூலை 18 - நாட்டில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்குக் கடப்பிதழுக்கு மாற்றாக ஐ-கார்டை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் குடிநுழைவுத் துறை அறிவித்துள்ளது. தற்போது அவர்கள் அனைத்துலகக் கடப்பிதழ்களைப் பயன்படுத்துவதாகவும், அது சில சமயங்களில் அசௌகரியத்தை ஏற்படுத்துவதால், அதற்குப் பதிலாகப் புதிய பாணியிலான ஐ-கார்டு எனும் அடையாள அட்டையைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குடிநுழைத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முஸ்தாபார் அலி தெரிவித்தார். இது சம்பந்தமாகக்

மேலும் படிக்க
கலை உலகம்சமூகம்

வீடற்றவர்களை அரவணைத்த விஜய் ரசிகர்கள்

கோலாலம்பூர், ஜூலை 17- குடும்பங்களை விட்டு கோலாலம்பூர் மாநகரத்தின் மையப் பகுதிகளில் நாடோடிகளாக வாழ்ந்து வரும் வீடற்றவர்களின் தேவையறிந்து உதவி செய்துள்ளோம் என விஜய் ரசிகர் மன்றத் தலைவர் ஷர்மாநாத் ராமன் கூறினார்.  அண்மையில் உலகெங்கும் உள்ள விஜய் ரசிகர் மன்றத்தினர் அவரின் பிறந்தநாள் விழாவை வெகு சிறப்பாகக் கொண்டாடினர். விஜய்யின் ரசிகர்கள் என்ற முறையில், நாங்களும் அவரைப்போலவே பயன்தரக் கூடிய நடவடிக்கைகளை மேற்கொண்டோம். நமது குழு உறுப்பினர்களுடன் இணைந்து

மேலும் படிக்க
கலை உலகம்சிறப்புச் செய்திகள்

நினைவில் நிற்கின்றார் வாலி..!

(அம்மு)   தமிழ் திரையுலக பீஷ்மர் கவிஞர் வாலி மறைந்து இன்றோடு நான்காவது ஆண்டு. திரையுலகத்தை மட்டுமின்றி, உலகின் கோடான கோடி ரசிகர்ளை ஒரு நிமிடம் மெளனிக்க வைத்த பெருமை இந்த தாடிக்காரரின் மரணத்திற்கு உண்டு. காலத்திற்கும் ஞாலத்திற்கும் ஏற்றவாறு மிகவும் நுண்ணிய வார்த்தைகளை பிரயோகித்து இதயங்களில் இடம் பிடித்தவர் இந்த சொல்வித்தகர். எங்கோ ஓர் மூலையில் இருந்து, தமது எழுத்துக்களின் மூலம் பட்டித் தோட்டி முதல் பிரபலாமகி இன்று

மேலும் படிக்க