செவ்வாய்க்கிழமை, ஜூன் 25, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > உலகம் (Page 26)
உலகம்

அமெரிக்க எப்.பி.ஐ.யின் புதிய இயக்குநராக கிறிஸ்டோபர் ரே நியமனம்

வாஷிங்டன், ஆக 3- அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. புதிய இயக்குநராக கிறிஸ்டோபர் ரே (வயது 50) நியமிக்கப்பட்டதற்கு நாடாளுமன்ற செனட் சபை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பு எப்.பி.ஐ.யின் இயக்குநராக ஜேம்ஸ் கோமி பதவி வகித்தார். கடந்த 2016-ஆம்  ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், ரஷ்யாவுக்கும் தேர்தலில் போட்டியிட்ட டொனால்டு ட்ரம்ப் பிரச்சாரக் குழுவுக்கும் இடையில் ரகசிய தொடர்பு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக ஜேம்ஸ்

மேலும் படிக்க
உலகம்

ஆப்கானிஸ்தானில் மசூதி தாக்குதலில் பலியானவர்களின்  எண்ணிக்கை 29 ஆக அதிகரிப்பு

காபூல், ஆக 3- ஆப்கானிஸ்தானில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் மசூதியில் 2 பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் சிறுபான்மை ஷியா பிரிவினரைக் குறி வைத்து தொடர்ந்து நிகழ்த்தப்படும் தாக்குதல்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29-ஆக அதிகரித்துள்ளது. 63 பேர் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால்,

மேலும் படிக்க
உலகம்

ஆப்கானிஸ்தானில் மசூதி மீது தற்கொலைப்படை தாக்குதல்

காபூல், ஆக 2- ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதியில் நேற்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.  மேற்கு ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் உள்ள மசூதிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த இரு மர்ம நபர்களில் ஒருவன் கூட்டம் இருக்கும் இடத்திற்கு சென்று, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளான். இந்த தாக்குதலில் 20 பேர்

மேலும் படிக்க
உலகம்

சீனப் பெருஞ்சுவருக்கு அடியில் அதிவேக ரெயில் சுரங்கப்பாதை

பீஜிங்: சீனாவில் பீஜிங் மற்றும் ஷாங்ஜியாகோ நகரங்களை இணைக்கும் வகையில் 174 கி.மீ. நீளத்திற்கு அதிவேக ரெயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியானது, புகழ்பெற்ற சீனப் பெருஞ்சுவருக்கு அடியில் 12 கி.மீ. நீளத்திற்கு சுரங்க ரெயில் பாதையாக அமைய உள்ளது. இதற்கான கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் 2019ல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. படாலிங் பகுதியில் பெருஞ்சுவருக்கு அடியில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதில்,

மேலும் படிக்க
உலகம்

தூணில் மோதிய கேபிள் கார்: பயணிகள் அந்தரத்தில் தொங்கினர் 

பெர்லின், ஆக 1- ஜெர்மனியில் கேபிள் கார் ஒன்று அந்த அமைப்பின் ஆதரவு தூணில் மோதியதில் பயணிகள் அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்தனர். ஜெர்மனியில் ரெகின் ஆற்றின் மேலே தூண் ஒன்றில் மோதி இந்த கேபிள் கார் போக்குவரத்து நின்றுவிட்டது. இதில் சிக்கிக்கொண்ட 75 பேரை மீட்பதற்கு கொலோனிலுள்ள தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புதவி அணியினர் கிரேனை பயன்படுத்தியுள்ளனர். அதில் சிலர் 40 மீட்டர் உயரத்தில் அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
உலகம்

வடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல்: டிரம்ப், ஜப்பான் பிரதமருடன் பேச்சு

வாஷிங்டன்: வடகொரியா கடந்த வெள்ளிக்கிழமை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இந்த ஏவுகணையால் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அமெரிக்க நகரங்களையும் தாக்க முடியும். ஏற்கனவே இதேபோன்ற ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தி இருந்ததால் 2-வது சோதனையால் அமெரிக்கா கடும் அதிர்ச்சி அடைந்தது. இதையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயை நேற்று டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார்.

மேலும் படிக்க
உலகம்

பிலிப்பைன்சில் 7 தொழிலாளர்களை கடத்தி தலை துண்டித்த தீவிரவாதிகள்

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் தீவிரவாதிகள் ஆதிக்கம், போதை பொருள் கடத்தல் கும்பலின் அட்டகாசம் உள்ளது. அவர்களை ஒடுக்க புதிய அதிபர் ரோட்ரிகோ டியூட்ரெட் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் பிலிப்பைன்சில் உள்ள அபு சாயப் என்ற தீவிரவாத கும்பல் சமீபத்தில் மரம் இழுக்கும் தொழிலாளர்களை கடத்தி சென்றது. அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். இதற்கிடையே அவர்களில் 7 பேர் தலை துணடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் பேசிலான்

மேலும் படிக்க
உலகம்

உலகின் மிக நீளமான தொங்கும் நடை மேம்பாலம் திறப்பு

சுவிட்சர்லாந்து: சுவிட்சர்லாந்து நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மெட்டர்கான் மலைகளை இணைக்கும் உலகின் மிக நீளமான நடை மேம்பாலம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இந்த மேம்பாலம் சுவட்சர்லாந்தின் கிராச்சென் மற்றும் செர்மட் நகரங்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இதற்கு முன் செர்மட் பள்ளத்தாக்கை கடப்பதற்கு 4 மணி நேரம் ஆகும். மேம்பாலம் கட்டியதன் மூலம் வெறும் 10 நிமிடமாக குறைந்துள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பயனடைந்துள்ளனர். இந்த மேம்பாலம்

மேலும் படிக்க
உலகம்

விமானத்தில் வெடிகுண்டு கொண்டு செல்ல முயன்ற நபர்

மான்செஸ்டர், ஆக 1- ரியானிர் விமானம் ஒன்று கடந்த ஜனவரி மாதம் 30-ஆம் திகதி இத்தாலியின் பெர்காமோ பகுதிக்கு செல்ல மான்செஸ்டரில் தயாராக இருந்தது. அப்போது நாடீம் முகமாட் (வயது 43) எனும் நபர் அந்த விமானத்தில் செல்வதற்காக சென்றுள்ளார். அப்போது மான்செஸ்டர் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அவரது சூட்கேஸ் போன்றவைகளை சோதனை செய்துள்ளனர். அப்போது அவரது சூட்கேசில் வெடிகுண்டு தொடர்பான பேட்டரி, டேப், மார்க்கர், ஊசிகள் ஆகிய

மேலும் படிக்க
உலகம்

நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக கிரிமினல் வழக்கு

கராச்சி: பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவின் மூலம் பதவி இழந்தார். வருமானத்துக்கு அதிகமாக இவரது மகன்கள் மற்றும் மகள் வெளிநாடுகளில் சொத்து வாங்கி குவித்ததாகவும், தொழில் நிறுவனங்கள் நடத்தியதாகவும் புகார் கூறப்பட்டது. இந்த நிலையில் பாகிஸ்தானின் ஊழல் தடுப்பு பிரிவான தேசிய பொறுப்பு குழு (என்.ஏ.பி.) முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது 2 மகன்கள், மகள் மற்றும்

மேலும் படிக்க