செவ்வாய்க்கிழமை, ஜூன் 18, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > பொதுத் தேர்தல் 14 (Page 28)
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

வைரலான சவப்பெட்டி!!! உண்மையில் என்ன நடந்தது

பாகான் டத்தோ நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றால் இந்தியர்களுக்கு இலவசமாக சவப்பெட்டி வழங்கப்படுமென பராமரிப்பு  அரசாங்கத்தின் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஸாஹிட் அமிடி கூறியதாக நேற்று இணையத்தளத்தில் செய்தி வெளியானது. இந்த செய்தி வைரலானதால், இந்தியர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். எதிர்க்கட்சிகள் இதனை தங்களின் துருப்புச் சீட்டாக பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள். ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். பாகான் டத்தோ நாடாளுமன்றத்தின் கீழ் ருங்குப்

மேலும் படிக்க
பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

அரசியல் பார்வையும் குருட்டு அரசியலும்!!!

(ஜெயமோகன் பாலசந்திரன்) அரசியல் பார்வை ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், அதனை வெளிப்படுத்தும் விதமும் ஆதரவு தேடும் விதமும் முதிர்ச்சியாகவும் நாகரிகமாகவும் இருப்பது அவசியம். நாட்டின் நலன் கருதி அரசியல் மாற்றத்தை விரும்புவதாக சொல்லும் நாம் நாட்டிற்கு அவப்பெயரை கொண்டு வருதல் சிறப்பாகாது. அரசியல் ஆதரவு தேடி வெளிநாட்டவர்களிடம் நாட்டின் பெருமையைச் சீர்குழைப்பது கண்டனத்துக்குரியது. எழுச்சி நிகழ்ச்சியில் மலேசியாவின் பொதுத் தேர்தலைப் பற்றிய தகவல்களை ஊடகத்துறையைச் சார்ந்த மோனிக்கா அவர்கள்

மேலும் படிக்க
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

கூடுதல் தொகுதிகளை வெல்வோம்! டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம்

கோலாலம்பூர், ஏப். 24- 14ஆவது பொதுத் தேர்தலில் மஇகாவின் மகத்தான வெற்றியை உறுதி செய்வதுதான் கட்சியின் நோக்கம். அதோடு கூடுதலாக நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளை மஇகா வெல்லும் என அதன் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தெரிவித்தார். நேற்று மஇகா தலைமையகத்தில் நேதாஜி மண்டபத்தில் வேட்பாளர் அறிமுகத்திற்குப் பிறகு செய்தியாளர்கள் வினவிய கேள்விக்கு அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார். கடந்த 13ஆவது பொதுத் தேர்தலில் சிகாமாட், கேமரன் மலை, தாப்பா,

மேலும் படிக்க
பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

ம.இ.கா. தேசியத் தலைவரின் முடிவுக்கு மதிப்பு அளிப்பீர்! ஜேம்ஸ் காளிமுத்து

கோலாலம்பூர், ஏப். 24- 14ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களுக்கு மஇகா தலைமைத்துவம் வாய்ப்பு வழங்கியுள்ளது. குறிப்பாக அனைவருக்கும் வாய்ப்பு வழங்கியுள்ள தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியத்தின் முடிவிற்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் என மஇகா மத்திய செயலவை உறுப்பினர் ஜேம்ஸ் காளிமுத்து கேட்டுக் கொண்டார். இந்த முறை அதிகமான இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியில் டத்தோ சிவராஜ் போட்டியிடுகின்றார். ஸ்ரீ

மேலும் படிக்க
பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

வேட்பாளராக தேர்வு செய்யப்படாதவர்கள் அதிருப்தி கொள்ளாதீர்

ஈப்போ, ஏப்.24 எதிர்வரும் 14ஆவது பொதுத்தேர்தலில் நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத் தொகுதிகளில் வேட்பாளர்களாகத் தேர்வு செய்யப்படாதவர்கள் வெறுப்புக் கொள்ள வேண்டாம் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் இறுதி முடிவு வாயிலாகவும் செயல்முறை வாயிலாகவும் தற்போதை வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தப் பொதுத் தேர்தலில் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்படாதவர்கள் பெரும்பாலோர் வருத்தத்துடன் இருப்பதால் தேசிய முன்னணியைப் பிரதிநிதித்து

மேலும் படிக்க
சிறப்புச் செய்திகள்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

ஊத்தான் மெலிந்தாங்கில் இந்திய வாக்காளர்களின் ஆதரவை இழக்குமா தேசிய முன்னணி

ஈப்போ, ஏப். 24- ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதியில் இந்திய வேட்பாளரான ரமேஷ் ராவ்வுக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக அம்னோ உறுப்பினர் டத்தோ கைரூடினுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. ஊத்தான் மெலிந்தாங் மஇகாவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதி. ஆனால் வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் இத்தொகுதியை அம்னோ எடுத்துக் கொண்டு, மீண்டும் சுங்கை சட்டமன்ற தொகுதியை வழங்கியுள்ளது. 2008ஆம் ஆண்டு மஇகாவிடம் இருந்த சுங்கை தொகுதியில் டான்ஸ்ரீ வீரசிங்கம் போட்டியிட்டார். 1,454

மேலும் படிக்க