அண்மையச் செய்திகள்
முகப்பு > உலகம் (Page 29)
உலகம்

கொரிய தீபகற்ப பகுதியில் உலா வரும் அமெரிக்க போர்க்கப்பல்

பியொங்யாங், ஜூலை 25- உலகில் உள்ள சில நாடுகளிடம் மட்டுமே நவீன விமான தாங்கி கப்பல்கள் உள்ளன. அதில் ஒன்று தான் அமெரிக்காவின் யுஎஸ்எஸ் கார்ல்வில்சன் கப்பல். நிமிட்ஸ் வகையைச் சேர்ந்த இந்த மிகப்பெரிய விமான தாங்கி கப்பலுக்கு ஜார்ஜியா மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் கார்ல்வில்சன் நினைவாக இக்கப்பலுக்கு கார்ல்வில்சன் என்று பெயர் சூட்டப்பட்டது. சுமார் 1092 அடி நீளம், 1 லட்சம் டன் எடையைத் தாங்கும் இக்கப்பல், எரிவாயு,

மேலும் படிக்க
உலகம்

ராணுவத்தை திரும்ப பெறுமாறு இந்தியாவுக்கு சீனா வலியுறுத்து

சிக்கிம் , ஜூலை.24 -  இந்திய-சீன எல்லையான சிக்கிம் பகுதியில் நிலவிவரும் பதற்றம் குறைய, இந்தியா தனது படைகளைத் திரும்பப்பெற வேண்டும்’ என சீனா வலியுறுத்தியுள்ளது. சிக்கிம் மாநில எல்லையில், இந்தியா-சீனா-பூட்டான் நாடுகளின் எல்லைகள் ஒன்று சேரும் டோக்லாம் பகுதியை ஆக்கிரமித்த சீனா, சாலை அமைக்கும் பணியை ஆரம்பித்தது. சீனா தொடங்கிய பணிகளை, இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால், ஆத்திரமடைந்த சீனா, இந்தியா அமைத்திருந்த இரண்டு பதுங்குகுழிகளை அழித்தது.

மேலும் படிக்க
உலகம்

ரஷ்யாவின் அடுத்த ஜனாதிபதி யார்? விளாடிமிர் புடின் அதிரடி பதில்

சோச்சி, ஜூலை 23- ரஷ்ய நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்க விரும்புவதாக விளாடிமிர் புடின் அதிரடி பதிலளித்துள்ளார். ரஷ்யாவில் உள்ள சோச்சி நகர் பாடசாலை ஒன்றிற்கு ஜனாதிபதியான விளாடிமிர் புடின் நேற்று சென்றுள்ளார். நீங்கள் எப்போது ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவீர்கள் என்று மாணவர் கேள்வி எழுப்பியபோது, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு ஜனாதிபதியாக பதவியேற்க விரும்புவதாக

மேலும் படிக்க
உலகம்

99 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் அபூர்வ சூரிய கிரகணம் 

நியூயார்க், ஜூலை 23- 99 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றும் அரிய முழு சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது பாதுகாப்பில்லை என்று நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.  சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு செல்லும் போது, பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியனும் நிலவும் வான் இணையலில் இருந்தால் சூரிய கிரகணம் ஏற்படும். இது ஒரு அமாவாசை நாளன்று தான் ஏற்படும். இதனால் சூரியன் முழுவதுமோ அல்லது ஒரு பகுதியோ மறைக்கப்படும். இந்நிலையில் ஆகஸ்ட்

மேலும் படிக்க
உலகம்

எய்ட்ஸ் மரணங்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது:ஐ.நா. தகவல்

பாரீஸ், ஜூலை 21- எய்ட்ஸ் நோயால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளதாக ஐ.நா. தகவல் வெளியிட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் எய்ட்ஸ் அறிவியல் மாநாடு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. கடந்த 2016- ஆம் ஆண்டு எய்ட்ஸ் நோய் காரணமாக உலகம் முழுவதும் 10 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த 2005-ஆம் ஆண்டு எய்ட்ஸ் நோய்க்குப் பலியானவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் ஏறத்தாழ பாதியாகும். அந்த ஆண்டில் 19 லட்சம் பேர்

மேலும் படிக்க
உலகம்

21 வயதில் மருத்துவரான பிரித்தானியாவில் வசிக்கும் இந்தியர்

ஷெஃபீல்ட், ஜூலை 20- இந்தியாவை சேர்ந்த மாணவர் பிரித்தானியாவில் 21 வயதில் மருத்துவ பட்டத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். அர்பன் தோஷி எனும் அவர் பிரித்தானியா வரலாற்றில் மிகவும் இளம் வயது மாணவராகக் கருதப்படுகிறார். பொறியாளரான அர்பனின் தந்தைக்கு அணுக்கரு இணைவுத் திட்டத்தில் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தது. இந்நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து பிரான்ஸில் குடும்பத்துடன் குடியேறியுள்ளார். அர்பன் தனது 16ஆவது வயதில் பிரான்ஸின் இன்டர்நேஷனல் பேச்சுலரேட்

மேலும் படிக்க
உலகம்

தேவாலயத்தின் கட்டடம் இடிந்து விழுந்தது

வேல்ஸ், ஜூலை 19- பிரித்தானியாவின் வேல்ஸ், கார்டிவ் நகரில் உள்ள பழமையான தேவாலயத்தின் கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததில் உள்ளிருந்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தக் கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இந்நிலையில் இது சம்பந்தமாக கட்டட ஒப்பந்ததாரர்களின் குழு சுமார் 3 வாரங்களாக அங்கு ஆய்வை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே, தேவாலயத்தின் கட்டடம் திடீரென தானாகவே இடிந்து விழுந்ததில் கட்டடத்தின் உள்ளே இருந்த ஒரு

மேலும் படிக்க
உலகம்

அமெரிக்காவின் ஆளில்லா தாக்குதல் விமானத்துக்குப் போட்டியாக சீனா

 பெய்ஜிங், ஜூலை 18- அமெரிக்காவின் எம்.கியூ-9 ரீப்பர் ஆளில்லா தாக்குதல் விமானங்களுக்குப் போட்டியாக சீனா சி.எச்.-5 ரெய்ன்போ ஆளில்லா விமானங்களின் வணிக உற்பத்தியை தொடங்கியுள்ளது. சீனாவின் இந்த ஆளில்லா போர் விமானங்கள் அமெரிக்காவின் போர் விமானங்களின் உற்பத்திச் செலவில் பாதி செலவில் தயாரிக்கப்படுகிறது என சீனா பெய்ஹாங் பல்கலைக்கழக பேராசிரியர் வாங் சாங் தெரிவித்தார். அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களை ஒப்பிடும்போது தங்களுடையது சற்று பலவீனமானதுதான். அமெரிக்க ரீப்பர் ஆளில்லா விமானங்கள்

மேலும் படிக்க
உலகம்

சீனாவில் வெள்ளம்

பெய்ஜிங், ஜூலை 18- சீனாவில், பலத்த மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி, 18 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர். ஆசிய நாடான சீனாவில், ஜிலின் மாகாணத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஜிலின் நகரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. வீடுகள் நீரில் மூழ்கி உள்ளன; ஒரு லட்சத்து, 10 ஆயிரம் பேர், வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.மின்சாரம் மற்றும் தொலைபேசி சேவை

மேலும் படிக்க