வியாழக்கிழமை, ஜனவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் (Page 3)
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

தடுப்புக்காவலில் மரணமடைந்த தர்மேந்திரனின் மனைவிக்கு ரிம 490,000 இழப்பீடு!

கோலாலம்பூர், டிச.10- கொலைச் செய்ய முயன்றதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், என்.தர்மேந்திரன் கடந்த 2013-ஆம் ஆண்டு 10 நாள் போலீஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் திடிரென உயிரிழந்தார். கணவரின் மரணத்தைத் தொடர்ந்து, தர்மேந்திரனின் மனைவியான மேரி மரியாய் சூசை, அரசாங்கம் மற்றும் போலீஸிற்கு எதிராக 2016ஆம் ஆண்டு இழப்பீடுக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்நிலையில், அவ்வழக்கில் தர்மேந்திரனின் மனைவிக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு இழப்பீடாக ரிம 490,000 வெள்ளியை

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

ரபிசி விடுவிக்கப்பட்டது தொடர்பில் மேல்முறையீடு; அன்வார் அதிருப்தி

ஆயெர் குரோ, டிச.7- என்.எஃப்.சி நிறுவனம் தொடர்பில், வங்கிக் கணக்கை அம்பலப்படுத்தியதாக, வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 7 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த பி.கே.ஆரின் உதவித் தலைவர் ரபிசி ரம்லியை சிலாங்கூர், ஷா ஆலாம், உயர்நீதிமன்றம் கடந்த மாதம் 15ஆம் தேதி அக்குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்திருந்தது. இந்நிலையில், ரபிசி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தேசிய சட்டத்துறை மேல்முறையீடு செய்திருப்பது குறித்து, பி.கே.ஆரின் தலைவரான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிருப்தி தெரிவித்தார். கால்நடை

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

சிறுமியை பிணம் என திட்டிய மாற்றான் தாய்; வைரலாகும் வீடியோ

கோலாலம்பூர், டிசம்பர் 6- இந்திய பெண் ஒருவர் சிறுமியை பிணம் என திட்டும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கூர்மையான ஆயுதத்தை காட்டியவாறு ‘நீ என் பிள்ளை இல்லை, இறந்த பிணத்திற்கு சமம், உன் தந்தையின் வற்புறுத்தலால்தான் உன்னை நான் பார்த்துக் கொள்கிறேன், உறவு என்று சொல்லிக் கொண்டு என்னிடம் வராதே’ என அப்பெண் அந்தச் சிறுமியை கடுமையாக திட்டுகிறார். இதில் அந்தப் பெண்

மேலும் படிக்க
குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

சொஸ்மாவில் கைது செய்யப்பட்ட சுப்ரமணியம் துன்புறுத்தலா?

கோலாலம்பூர், டிசம்பர் 5- ரத்தக் கறை படிந்த அறையிலும் முட்கள் நிறைந்த காட்டுப் பகுதியிலும் தான் தள்ளப்படுவேன் என்று தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக விடுதலைப் புலி இயக்கத்துடன் தொடர்புடையதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பி.சுப்ரமணியம்  தெரிவித்தார். மனோ ரீதியிலான துன்புறுத்தலுக்கு கடந்த 21 நாட்கள் சொஸ்மா தடுப்பு காவலில் இருந்தபோது தாம் அனுபவித்ததாக ஒரு வர்த்தகரான சுப்ரமணியம் கூறினார். இன்று கோலாலம்பூர் செக்ஷன் நீதிமன்ற நீதிபதி அசூரா அல்வி இந்தப் புகாரை பதிவு

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

3 இந்தியர்களைப் போலீஸ் சுட்டுக்கொன்றது தொடர்பில்,  டிச.13-ஆம் தேதி விசாரணை

கோலாலம்பூர், நவ.28- ரவாங், பத்து ஆராங்கில் கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி, மூன்று ஆடவர்களைப் போலீஸ் சுட்டுக்கொன்றது தொடர்பில், டிசம்பர் 13ஆம் தேதி ஷா ஆலாம் கொரொனர் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கவுள்ளது. அந்த மரண விசாரணையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் விளக்கம் அளிப்பதற்காக அழைக்கப்படவிருப்பதாக, சிலாங்கூர் குற்றப்புலனாய்வுத்துறையின் தலைவர் எஸ்.ஏ.சி ஃபாட்சில் அஹ்மாட் தெரிவித்துள்ளார். அந்த சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட ஓர் ஆடவரின் மனைவி

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

சுபாங் ஜெயா ஆலய கலவரம்; தனிநபர்களின் புகைப்படங்கள் மீண்டும் வெளியிடப்படும்!

கோலாலம்பூர், நவ.28- கடந்தாண்டு சிலாங்கூர், சுபாங் ஜெயா, யூ.எஸ்.ஜே 25-லுள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் முன்புறம் இரவில் நிகழ்ந்த கலவரம் தொடர்பில், அங்கு இருந்ததாக கூறப்படுபவர்களின் புகைப்படங்களைப் போலீஸ் மீண்டும் வெளியிடவுள்ளது. அவர்களை அடையாளும் காணும் முயற்சியில், சிலாங்கூர் மற்றும் புக்கிட் அமான் போலீஸ் தீவிரம் காட்டி வருவதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறையின் இயக்குநர் ஹுசீர் முஹம்மட் தெரிவித்துள்ளார். அந்த ஆலய கலவரத்தினால் உயிரிழந்த தீயணைப்பு வீரர்

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

மன்னிப்பு கேள்! சார்ல்ஸ்க்கு ஜாக்கிர் நைய்க் 48 மணி நேர கெடு

பெட்டாலிங் ஜெயா, நவ.28- தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்ததாக, டிஏபியின் இரு தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதையும் தம்மையும் தொடர்பு படுத்தி அவதூறாக பேசிய கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ மீது சட்டநடவடிக்கையை எடுக்கவிருப்பதாக சர்ச்சைக்குரிய சமய போதகரான டாக்டர் ஜாக்கிர் நைய்க் தெரிவித்துள்ளார். மக்களவையில் 2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்ட நாளில், டிஏபியின் தலைவர்கள் இரவு நேரத்தில் தடுத்து வைக்கப்பட்டது குறித்து

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

சொஸ்மா: சாமிநாதனுக்கு ஜாமினா? வெள்ளிக்கிழமை தெரியவரும்!

கோலாலம்பூர், நவ.27- தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்ததாக, 2012ஆம் ஆண்டு சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள காடேக் சட்டமன்ற உறுப்பினர், ஜி.சாமிநாதனுக்கு ஜாமின் வழங்கப்படுமா இல்லையா என்பது குறித்து வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படுமென உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அந்த இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்ததாகவும் அது தொடர்பான பொருட்களை வைத்திருந்ததாகவும் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள 34 வயதான சாமிநாதன் தற்போது, சுங்கை பூலோ சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை மணி

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

தடுப்புக்காவலில் சிவ ராஜா மரணம்: ஏன் இன்னும் விசாரணை இல்லை?

கோலாலம்பூர், நவ.25- பேராக்கிலுள்ள தாப்பா சிறையில், தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட சிவ ராஜா ராமன் (வயது 30) மரணமடைந்து 33 மாதங்கள் ஆகி விட்டன. அவரது மரணம் குறித்து விசாரணையை மேற்கொள்ள ஈப்போ, உயர்நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவிட்டிருந்தது. இன்று வரையில், அந்த விசாரணை நடத்தபடாதது ஏன்? என சிவ ராஜாவின் குடும்பத்தினர் கேள்வியெழுப்பியுள்ளனர். கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி விடுவிக்கப்படவிருந்த சிவ ராஜா அதே நாளில் மரணமடைந்தார்.

மேலும் படிக்க
குற்றவியல்மற்றவைமுதன்மைச் செய்திகள்

போலீசால் தொந்தரவா? சொஸ்மாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவரின் மனைவி புகார்!

கோலாலம்பூர், நவ.25- தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்துடனான தொடர்பு காரணமாக, டிஏபியைச் சேர்ந்த காடேக் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினரான ஜி.சாமிநாதன், சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரது மனைவியான வி.உமா தேவி, உதவியாளர் கே.ஜெயசுதா ஆகிய இருவரும், தங்களுக்கு தொந்தரவுகள் அளிக்கப்படுவதாக கூறி, இன்று மலேசிய மனித உரிமை ஆணையத்தில் (சுஹாக்காம்) புகார் அளித்துள்ளனர். 11 பேர் அடங்கிய குடும்பத்தைச் சேர்ந்த உமாதேவி, தனது குடும்பத்திற்கு, புக்கிட்

மேலும் படிக்க