அண்மையச் செய்திகள்
முகப்பு > lingga (Page 306)
இந்தியா/ ஈழம்

அண்ணி மரணம்: ஜெயிலில் கண்ணீர் விட்டு கதறிய சசிகலா

பெங்களூரு, ஜூலை 28- சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா சோதனை மேல் சோதனையை சந்தித்து வருகிறார். 15 நாட்களுக்கு முன்பு சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் ரூ. 2 கோடி லஞ்சம் வாங்கியதாக டி.ஐ.ஜி. ரூபா குற்றம் சாட்டி இருந்தார். இந்த குற்றச்சாட்டு விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்தது. சசிகலா ஜெயிலில் சொகுசாக இருந்த அறை மற்றும்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

கெட்கோ விவகாரம்: மாநில போலீசின் அதிகாரமீறலை விசாரிக்க கோரிக்கை

கோலாலம்பூர், ஜூலை 27- கேட்கோ நில உரிமை விவகாரத்தில் நெகிரி செம்பிலான் போலீசின் அதிகார மீறலை தடுக்கக்கோரி சுமார் 70   இன்று காலை மணி 10.30 அளவில் தலைநகரிலுள்ள புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் முன்பு திரண்டனர். பி.எஸ்.எம். கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர் எஸ்.அருட்செல்வம் தலைமையில் ஒன்று திரண்ட அவர்கள் அனைவரும் மாநில போலீசுக்கு எதிராக குரலெழுப்பியதோடு கெட்கோ நிலம் தங்களுடையது என கோஷமிட்டனர். மேலும், அண்மையில் கெட்கோ

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

அரசாங்கத்தின் உருமாற்றுத் திட்டத்தால் குற்றச்செயல்கள் குறைந்துள்ளது!

கோலாலம்பூர், ஜூலை 27 நாட்டின் பிரதமராக டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பொறுப்பேற்றதற்கு பிறகு நாட்டில் குற்றச்செயல்கள் வெகுவாக குறைந்துள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார். அரசாங்கம் கடந்த 2013ஆம் ஆண்டு அமல்படுத்திய உருமாற்றத் திட்டத்தின் வாயிலாக குற்றச்செயல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அவர் கூறினார். நாட்டில் குற்றச்செயல்கள் குறைந்தாலும், நாட்டு மக்களின் குறைகூறல்கள் குறையவில்லை. நாட்டில் குற்றச்செயல்கள் சிறிதும் குறையவில்லை என்று நாட்டு மக்கள்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

ஆசியான் பொன்விழாவை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் தலை

கோலாலம்பூர், ஜூலை 27- ஆசியான் தோற்றுவிக்கப்பட்டு இவ்வாண்டோடு பொன்விழா ஆண்டை எட்டி உள்ளதால் அதனை கொண்டாடும் வகையில் தேசிய மலரை மையமாகக் கொண்ட சிறப்பு அஞ்சல் தலையை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த அஞ்சல் தலை ஒருவகையில்தான் வெளியிடப்படும் என்பதால் ஒரு தபால் தலை 60 காசுக்கு விற்கப்படும் என அதன் தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோ முகமட் ஷுக்ரி முகமட் சாலே தெரிவித்தார்.   125,000 எண்ணிக்கையில் இந்த தபால்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

பாலியல் துன்புறுத்தலுக்கு இலக்கான சிறார்களுக்கு சட்ட உதவி

கோலாலம்பூர், ஜூலை 27- பாலியல் துன்புறுத்தல்  சம்பவங்களில் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கும் 2017 சட்ட உதவி சட்ட மசோதா நாடாளுமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டது. சட்ட உதவிச் சட்டம் 1971க்கான சட்ட மசோதாவை பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் சைட் தாக்கல் செய்தார். இதன் மூலம் பாலியல் கொடுமைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு எழுத்துப்பூர்வமானச் சட்டத்தின் கீழ் சட்ட ஆலோசனை வழங்கப்படும். அதோடு மட்டுமின்றி தங்களின்

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

அனைத்துலக வர்த்தக வாய்ப்புகளை கண்டறிந்து வருகிறோம்!

கோலாலம்பூர், ஜூலை 27- மலேசியா ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழில்துறை சம்மேளனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதன் தலைவர் டத்தோ டாக்டர் வி.சண்முகநாதன் தெரிவித்தார். தற்போது அனைத்து வர்த்தகம் மற்றும் தொழில்துறைகளும் உலகமயமாகிவிட்டதால் இந்நாட்டிலுள்ள இந்திய வர்த்தகர்கள் தங்களது வர்த்தகத்தை வெளிநாடுகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழில்துறை

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

முதல்முறையாக பெருநாடி மாற்று அறுவைச் சிகிச்சை செய்து ஐஜேஎன் சாதனை

கோலாலம்பூர், ஜூலை 27- தேசிய இருதயச் சிகிச்சைக் கழகம் (ஐஜேஎன்) முதல்முறையாக ஒட்டுமொத்த பெருநாடி மாற்று அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டு புதிய சாதனையை செய்துள்ளது. கடந்த வாரம் 44 வயது நிரம்பிய ஒரு பெண்ணுக்கு பெருநாடியில் அசாதாரண வீக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு முன் இவருக்கு ஏற்கனவே 2 முறை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதாக ஐஜேஎன்னின் இருதய அறுவைச் சிகிச்சைக்கான மருத்துவர் கே.பன்னீர் செல்வம்

மேலும் படிக்க
விளையாட்டு

பிரீமியர் லீக்கில் குவந்தான் எப்.ஏ அணியை வென்றது மிஃபா! 

தஞ்சோங் மாலிம் ஜூலை 26 –  மலேசிய பிரீமியர் லீக்கில் களம் கண்டுள்ள முதல் இந்தியர் அணியான மிஃபா அணி  குவந்தான் எப்.ஏ அணியுடனான ஆட்டத்தில் 6-3 என்ற கோல்கணக்கில் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றி முக்கியமானது. மேலும் நமது அணி பிரீமியர் லீக்கில் நிலைத்திருக்க வரவிருக்கும் ஆட்டங்கள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. அந்த வகையில்  நமது அணியின் ஆட்டக்காரர்கள் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு வித்திடுவார்கள்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

பொதுத் தேர்தலுக்கு தேசிய முன்னணி தயார்! – கைரி ஜமாலுடின்

கப்பாளா பத்தாஸ், ஜூலை 25- வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் எந்த தரப்பினரையும் சந்திப்பதற்கு தேசிய முன்னணி தயாராக இருப்பதாக அம்னோவின் இளைஞர் பிரிவு தலைவரும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான கைரி ஜமாலுடின் தெரிவித்தார். ஜ.செ.க.விற்கும், ஆர்.ஓ.எஸ். எனப்படும் சங்கங்களின் பதிவு இலாகாவிற்கும் இடையில்  ஏற்பட்டுள்ள மோதல் அக்கட்சியை ரத்து செய்வதற்கு தேசிய முன்னணி கையாண்டு வரும் ஒரு சூழ்ச்சி என கூறப்படும் குற்றச்சாட்டையும் அவர் திட்டவட்டமாக மறுத்தார்.

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

900 இந்திய மாணவர்களுக்கு 18 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள உபகார சம்பளம்

கோலாலம்பூர், ஜுலை 25- ம.இ.கா தேசிய தலைவர் உபகார சம்பள திட்டத்தின் கீழ் மாதம் 3 ஆயிரத்து 855 ரிங்கிட்டிற்கும் குறைந்த வருமானம் பெறும் B40 குடும்பங்களை சேர்ந்த 900 இந்திய மாணவர்களுக்கு உபகார சம்பளம் வழங்கப்படவிருக்கிறது. 18 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள இந்த உபகார சம்பள திட்டத்தை ம.இ.கா. கல்வி பிரிவு மேற்கொள்வதாக கட்சியின் தேசிய தலைவரும் சுகாதாரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். கல்வி

மேலும் படிக்க