வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > லிங்கா (Page 326)
முதன்மைச் செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை நிலை நிறுத்தம்!

கோலாலம்பூர், ஜூலை 19 கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் இவ்வாரமும் எவ்வித மாற்றமுமின்றி நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ரோன் 95 பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 1 வெள்ளி 97 காசும் ரோன் 97 பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 2 வெள்ளி 22 காசாகவும் இவ்வாரமும் தொடர்கின்றது. அதேப்போன்று டீசல் விலை ஒரு லிட்டருக்கு 1 வெள்ளி 96 காசாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விலைகள்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

இந்திய முஸ்லிம்களுக்கு மட்டும் பூமிபுத்ரா அந்தஸ்தா?

கோலாலம்பூர், ஜூலை 19- இந்நாட்டில் பிறந்த அனைத்து குடிமக்களுக்கும் பூமிபுத்ரா அந்தஸ்து வழங்காமல் இந்திய முஸ்லிம்களுக்கு மட்டும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் வழங்க முன்வருவது ஏன்? என மலேசிய இந்தியர் முன்னேற்ற சங்கம் (மீப்பாஸ்) கேள்வியெழுப்பியுள்ளது. இவ்விவகாரத்தில் இந்நாட்டில் பிறந்த கிருஸ்து, இந்து, சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த குடிமக்களின் நிலை என்ன என்றும் அந்த சங்கம் கேள்வியெழுப்பியது. இது குறித்து மீப்பாஸ் இயக்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பாரதிதாசன் கூறுகையில்,

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

குருக்களை இழிவுபடுத்திய நபர் மீது போலீசில் புகார்!

பத்து ஆராங், ஜூலை 19- வாட் சாப் சமூக வலைத்தளத்தில் கிள்ளானைச் சேர்ந்த சிவாச்சாரியார் எஸ்.கோபால் குருக்களைப் பற்றி இழிவாகப் பேசி குரல் பதிவை வெளியிட்ட நபருக்கு எதிராக ரவாங், பத்து ஆராங்கைச் சேர்ந்த இளைஞர்கள் பத்து ஆராங் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து புகார் அளித்தவர்களில் ஒருவரான கேசவன் சுப்ரமணியம் (வயது 31) கூறுகையில், சிவாச்சாரியார் எஸ்.கோபால் குருக்களுக்கு எதிராக குரல் பதிவை வெளியிட்ட நபரும்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

இந்திய முஸ்லிம்களுக்கான பூமிபுத்ரா அந்தஸ்து குறித்து அரசாங்கம் ஆய்வு! -பிரதமர் நஜீப் தகவல்

கோலாலம்பூர், ஜூலை 19- இந்நாட்டிலுள்ள இந்திய முஸ்லிம்களின் நீண்டகால கோரிக்கையான பூமிபுத்ரா அந்தஸ்து வழங்குவது குறித்து ஆராய அரசாங்கம் தயாராக உள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்தார். நாட்டின் வளர்ச்சிக்கு இந்திய முஸ்லிம்கள் பெரும் பங்காற்றியிருப்பதாக கூறிய அவர், அச்சமூகத்தினரின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவி சாய்த்து வருவதாக கூறினார். இந்திய முஸ்லிம் சமூகத்தினரின் கோரிக்கைகளை நான் செவிமடுக்கிறேன். அவர்களை பூமிபுத்ராக்களுக்களாக ஏற்றுக்கொள்கிறேன். இப்போதைய கேள்வி என்னவென்றால் அதனை

மேலும் படிக்க
கலை உலகம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பா?

பிரபல சேனலில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது சில சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறது. அதன் காரணமாக அதை நடத்தும் கமல்ஹாசனும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறார். அவரை நோக்கி எழுப்பப்பட்ட சில கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். இருந்தாலும் அவருக்கு நாளுக்கு நாள் எதிர்ப்புகளும், கண்டன குரல்களும் அதிகரித்து வருகின்றன. இதனால் அவரது வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சர்ச்சைகள் ஒரு பக்கமிருந்தாலும், நேயர்களின் ஆதரவு கமலுக்கு அதிகரித்து வருகிறது. இதனால் இந்த

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

நம்பிக்கை கூட்டணியின் தலைமைத்துவத்தால் அம்னோ கலக்கம்! -லிம் கிட் சியாங்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 17 பக்காத்தான் ஹராப்பான் தனது மேல்மட்டத் தலைவர்களின் பட்டியலை அறிவித்தத்தைத் தொடர்ந்து, அமைச்சர்கள் பல்வேறு விதமான அறிக்கைகளை வெளியிட்டு வருவது அம்னோவும் தேசிய முன்னணியும் கலக்கம் அடைந்துள்ளதைப் புலப்படுத்துவதாகக் ஜ.செ.கவின் ஆலோசகர் லிம் கிட் சியாங் தெரிவித்தார். பக்காத்தான் கூட்டணியின் கொள்கை அறிக்கை, சின்னம், தலைமைத்துவ அமைப்புமுறை யாவும் அம்னோவுக்கு அச்சத்தை உருவாக்கியிருப்பதோடு ஆளும் கட்சிக்கு பெரும் தாக்கத்தை உருவாக்கியிருப்பதாக அவர் கூறினார். அண்மையில் முன்னாள்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

குண்டர் கும்பலில் சேர சொல்லி மாணவரை தாக்கிய இளைஞர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

ஜொகூர்பாரு, ஜூலை 17–      தங்களின் “கேங் 550’’ எனும் குண்டர் கும்பலில் சேர மறுத்த மூன்றாம் படிவ மாணவனைத் தாக்கிய 5 இளைஞர்களை போலீஸ் தேடி வருகின்றது. அவர்கள் நேற்று ஜாலான் இம்பியான் எமாஸ் 9 எனும் பகுதியில் அந்த மாணவனைத் தாக்கியதாக கூறப்படுகின்றது. பாதிக்கப்பட்ட மாணவர் பள்ளி முடிந்து வீடு திரும்புவதற்காக பேருந்திற்காக காத்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த அந்த 5 இளைஞர்கள் அவரை அருகாமையிலுள்ள ஒரு

மேலும் படிக்க
விளையாட்டு

இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் பேட்மிண்டன் போட்டி!

கோலாலம்பூர், ஜூலை 17- இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் பேட்மிண்டன் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டி வருகின்ற 19ஆம் தேதி காலை மணி 10.00 அளவில் கெப்போங்கிலுள்ள டெ சாலேஞ்சேர் ஸ்போர்ட்ஸ் மையத்தில் நடைபெறவிருப்பதாக அந்த கூட்டமைப்பின் தலைவர் டத்தோ இப்ராஹிம் ஷா தெரிவித்தார். இந்திய மாணவர்களுக்கு தொழில்திறன் பயிற்சிகளை வழங்கிவரும் இக்கூட்டமைப்பு அவர்களிடையே விளையாட்டின் மீதான ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. இப்போட்டியை

மேலும் படிக்க
மற்றவை

Tactics Toward speculator ny Discover Expenditure Features

Tactics Toward speculator ny Discover Expenditure Features Once by yourself're thinking of acquiring a household and land deal, it a loads of gains towards be learned. Not simply will oneself be picking toward stay within a person of the greatest desirable elements, still on your own will be equipped toward

மேலும் படிக்க