புதன்கிழமை, ஜனவரி 22, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் (Page 36)
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

1எம்டிபி : துபாயில் ஜோ லோ? விசாரணைக்கு ஒப்புதல்!

கோலாலம்பூர், ஜூன்.14- எம்டிபி நிதி முறைகேடு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட முக்கிய நபர்களில் ஒருவரான தொழிலதிபர் ஜோ லோ, 1எம்டிபி விசாரணைக் குழுவினரை துபாயில் சந்திக்கவிருப்பதாகவும், அதன் சார்ந்த விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக உள்ளதாகவும் அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளார்கள். எனினும், ஜோ லோவை சந்திப்பதற்கு முன்னாதாக 1எம்டிபி விசாரணைக் குழுவினர் ஜோ லோவின் வழக்கறிஞர்களுடன் சந்திப்பு நடத்தவிருப்பதாக கூறப்பட்டுள்ளது. 1எம்டிபி விசாரணைக்கு எந்த வகையில் ஜோ லோ உதவலாம் என்பது குறித்து

மேலும் படிக்க
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

மருத்துவ ஒப்பந்தத்தில் ஊழலா? விசாரணை அவசியம்! சந்தியாகோ வலியுறுத்து

கோலாலம்பூர், ஜூன் 14- தேசிய சுகாதார முறையில் உள்ள மருந்துக் கையிருப்பு தொடர்பாக அரசு விசாரணை செய்வதோடு அதன் கொள்முதல் செய்முறையையும் மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கிள்ளான் தொகுதி எம்.பி, சார்ல்ஸ் சந்தியாகோ கேட்டுக் கொண்டார். இந்த கோடிகணக்கான வெள்ளி மதிப்புள்ள மருந்துக் கையிருப்புக் குத்தகையை வசமாக்கியதில் தொடர்பு இருப்பதாக கூறப்படும் ஓர் அரசியல்வாதி மீது அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டியது அவசியமென அவர் வலியுறுத்தினார். அப்படி விசாரணை

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

சோதனை நடவடிக்கை: அரசு ஊழியர் உட்பட 7 பேர் கைது

ஈப்போ, ஜூன் 14- நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஜாலான் கிரீன்டௌனில் உள்ள கூட்டரசு கட்டடத்தின் முன்புறம் புதன்கிழமை நடத்தப்பட்ட சிறப்புச் சோதனை நடவடிக்கையில் பெத்தமினை உட்கொண்ட ஒரு பொதுச்சேவை ஊழியர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டதாக பேரா மாநில போதைப்பொருள் எதிர்ப்பு இயக்கத்தின் அமலாக்கத் துணை இயக்குநர் அஸ்மான் ஹஷிம் தெரிவித்தார். இதில் கைது செய்யப்பட்ட 16 முதல் 29 வயதிற்குட்பட்ட அனைவரும் 1983 போதைப்பித்தர் சட்டம் (சிகிச்சை

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

காரினுள் விலையுயர்ந்த பொருள்கள் வைக்காதீர்! -டத்தோ ஸைனால் அபிடின் காசிம்

அலோர்ஸ்டார், ஜூன் 13- நோன்புப் பெருநாளை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் இந்நேரத்தில் ஷாப்பிங் செய்ய விரும்பினால் தங்களது காரினுள் விலையுயர்ந்த பொருள்களை விட்டுச் செல்ல வேண்டாம் என்று கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஸைனால் அபிடின் காசிம் வலியுறுத்தினார். இச்செயல் உண்மையில் கொள்ளைச் சம்பவத்திற்குத்தான் வழி வகுக்கும், காரணம் அவ்வகைப் பொருள்கள் காரினுள் இருப்பதைக் கண்டால் சந்தர்ப்பவாதிகள் யாரேனும் அதைக் கொள்ளையிடத்தான் விரும்புவர் அப்படியே அப்பகுதியில்

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

நிந்தனை அடிப்படையில் பதாகை; நால்வர் கைது

கிள்ளான், ஜூன் 12 கிள்ளான், பண்டாமாரானில் இன துவேஷம் மற்றும் நிந்தனை அடிப்படையில் பதாகையை பொருத்தியதற்காக 4 பேரை போலீஸ் கைது செய்துள்ளது. மலாய்காரர்கள் அல்லாதவர்கள் மலாய் ஆட்சியாளர்களுக்கு மதிப்பு கொடுப்பதில்லை என்று அந்தப் பதாகையில் எழுதப்பட்டிருந்தது என்று தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷம்சூல் அமார் ரம்லி தெரிவித்தார். ஜூன் 8ஆம் தேதி 22 மற்றும் 24 வயதுடைய ஆடவர்களும் நேற்று 24 மற்றும் 27

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

நில விற்பனை முறைகேடு : நேசா கூட்டுறவு கழக தலைவர் மீது குற்றஞ்சாட்டு! 30 ஆயிரம் வெள்ளி ஜாமின்

கோலாலம்பூர், ஜூன் 12- உலுசிலாங்கூரில் அம்பாங் பெச்சாவில் நில விற்பனை முறைகேடு தொடர்பாக நேசா கூட்டுறவு கழகத்தின் தலைவர் ராஜகண்ணன் மீது அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமமையிலேயே குற்றம் சாட்டப்பட்டது. உலுசிலாங்கூர் செக்ஷன் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவதற்காக ராஜகண்ணனும் அக்கூட்டுறவு கழகத்தின் பொருளாளர் கந்தசாமியும் போலீசாரால் அழைக்கப்பட்டிருந்தனர். நேசா கூட்டறவுக் கழகத்தின் தலைவர் நாஜகண்ணன் உடல்நலம் குன்றி தலைநகர் மலாயா பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதனால் செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் உலுசிலாங்கூர்

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

மனிதவள மேம்பாட்டு நிதியில் ஊழலா ?

கோலாலம்பூர், ஜூன் 12 மனிதவள மேம்பாட்டு நிதியில் வெ.30 கோடி முறைகேடு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் எம்ஏசிசி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் அந்நிதியின் கீழ் பயிற்சியை வழங்கும் நிறுவனம் இன்று புகார் மனுவை சமர்பித்தது. எம்ஏசிசி இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்யவதற்கு தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிப்பதாக எஸ்.ஜி.எடுக்கேஷன் குழும தலைமை நிர்வாக அதிகாரி டத்தோஸ்ரீ கணேஷ் தெரிவித்தார். இந்த நிதியின் உயர் அதிகாரியும் வாரிய

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

ராஜ் வாழையிலை உணவகத்தின் உரிமம் நிரந்தரமாக தடை செய்யப்பட்டது!

கோலாலம்பூர், ஜூன் 12- தலைநகர் பங்சாரில் செயல்பட்டு வந்த சர்ச்சைக்குரிய ராஜ் வாழையிலை உணவகத்தின் உரிமம் விரிவான பல ஆய்வுகளுக்குப் பின்னர் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜ் வாழையிலை உணவகத்தின் உரிமத்தை ரத்து செய்ய முடிவு எடுத்துள்ளதாக கோலாலம்பூர் மாநகராட்சி (டிபிகேஎல்) உரிமம் மற்றும் சிறிய வர்த்தகர்கள் மேம்பாட்டுத் துறை இயக்குநர் அன்வார் முகமட் ஸின் தெரிவித்தார். இது கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகத்தின் சமூகப் பொருளாதார நிர்வாக இயக்குநர் டத்தோ

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம் : பழிவாங்கும் செயலே காரணம்

பெட்டாலிங் ஜெயா,ஜூன் 11- இளைஞர் ஒருவர் கை கால்களில் சரமாரியாகத் தாக்கப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையே காரணம் என்று கூறப்பட்டது. இச்சம்பவம், இங்குள்ள கௌானா ஜெயா, ஜாலான் பிஜேயு 1ஏ/42, லெம்பா சுபாங் சுரங்கப் பாதையில் நேற்று முன் தினம் நடந்தது. பின்னிரவு மணி 2.00 அளவில் நடந்த இச்சம்பவத்தில் 28 வயது இளைஞர் இரு கைகள் மற்றும் இடது கால் தொடைப் பகுதியில் தாக்கப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ்

மேலும் படிக்க
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

நஜீப்பின் புத்ராஜெயா வீட்டில் போலீசார் சோதனை!!

புத்ரா ஜெயா, ஜூன் 11- முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பின் பிரிசிண்ட் 10 இல் உள்ள வீட்டில் சாதாரண உடையணிந்த போலீஸ் அதிகாரிகள் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். இது முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் ‘பாதுகாப்பான வீடு என்று இணைய தளம் ஒன்று வருணித்துள்ளது. இந்த வீட்டிற்கும் 1எம்டிபி விவகாரத்திற்கும் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது. புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பிற்பகல் மணி 1.00

மேலும் படிக்க