வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் (Page 411)
சமூகம்மற்றவைமுதன்மைச் செய்திகள்

ஆதரவற்றோர் இல்லத்துடன் தீபாவளியை கொண்டாடிய சி.ஜி.சி. கழகம்!

கிள்ளான், நவ. 2- சி.ஜி.சி. என்றழைக்கப்படும் மலேசிய கடன் உத்திரவாத கழகம் அண்மையில் தீபாவளி பெருநாளை முன்னிட்டு கிள்ளான், பண்டமாரானிலுள்ள சாய் அன்னை இல்லத்துடன் இணைந்து தீபாவளி பெருநாளை கொண்டாடியது. தீபாவளி பெருநாளில் ஆதரவற்றோர் இல்லங்களை சேர்ந்தவர்களும் இப்பெருநாளை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக சி.ஜி.சி.யின் தலைவரும் தலைமை செயலமுறை அதிகாரியுமான டத்தோ முஹம்மட் ஜம்ரி முஹம்மட் இஷாக் தெரிவித்தார். சி.ஜி.சி. கழகம் ஒவ்வொரு

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

சுற்றுச்சூழல் தின போட்டியில் தாமான் மலாவாத்தி தமிழ்ப்பள்ளி வெற்றி வாகையை சூடியது!

அம்பாங் ஜெயா, நவ. 2 சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் அம்பாங் ஜெயா நகராண்மை கழக நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளிகளுக்காக நடத்தப்பட்ட போட்டியில் தாமான் மலாவாத்தி தமிழ்ப்பள்ளி ஒட்டுமொத்த வெற்றியாளராக வாகை சூடியது. குறிப்பாக, இப்போட்டியில் பழைய சமையல் எண்ணெயை சேகரிக்கும் பிரிவில் வெற்றி பெற்ற தாமான் மலாவாத்தி தமிழ்ப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் முதல் பரிசு தொகையாக 1000 வெள்ளியை தட்டி சென்றனர். அதோடு, இயற்கை உரத்தை தயாரிக்கும் போட்டியில்

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

சர்ச்சை ஆசிரியர் விவகாரம்: சமூகவலைத்தளங்களில் ம.இ.காவுக்கு எதிரான விமர்சனங்கள்!

கோலாலம்பூர், நவ. 1- இந்திய இளம் பெண்ணிடமும் அவரது தாயாரிடமும் தொலைப்பேசி வாயிலாக அநாகரீகமாக நடந்துக்கொண்ட இந்திய ஆசிரியர் விவகாரத்தில் ம.இ.கா.வினரை பலர் சாடி வருகின்றனர். சம்பந்தப்பட்ட ஆசிரியர் பெஸ்தாரி ஜெயாவிலுள்ள ஸ்ரீ சாஹாயா கிளையின் தலைவராக இருந்த நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டு காரணமாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணையமைச்சரும் ம.இ.கா.வின் மத்திய செயலவை உறுப்பினருமான டத்தோ எம்.சரவணன், ம.இ.கா. கோலசிலாங்கூர் தொகுதியின் தலைவர் குமாரசாமி முன்னிலையில் கட்சியிலிருந்து

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

8 பலகை வீடுகள் தீயில் சாம்பல்: பினாங்கில் சம்பவம்

ஜெலுத்தோங், நவ 1-   பினாங்கு, ஜெலுத்தோங் பகுதியைச் சேர்ந்த ஜாலான் மட்ராஸாவில் அமைந்திருக்கும் 8 பலகை வீடுகள், இன்று மாலை நிகழ்ந்த தீ விபத்தில் முற்றாக எரிந்து சாம்பலாயின. இன்று மாலை 4.45 மணியளவில் நிகழ்ந்த சம்பவத்தில் அடுத்தடுத்து இணைந்திருந்த 8 பலகை வீடுகள் தீக்கிரையாகின. இந்த வீடுகளில் வசித்து வந்த 5 குடும்பங்கள் உடமைகளை இழந்து தவிக்கின்றனர். காற்று பலமாக வீசியதால் தீ மள மளவென்று பரவத் தொடங்கியது.

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

தகாத செயல் புரிந்த ஆசிரியர் மீது போலீசில் ம.இ.கா. புகார்!

கோலாலம்பூர், நவ.1- இளம் பெண்ணுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்றால் தனது இச்சைக்கு இணங்க வேண்டும் என்றுத் தொந்தரவு செய்த நடராஜன் அவரது செயல் கண்டிக்கத்தக்கது என்று ம.இ.காவின் தேசிய தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ வி.எஸ்.மோகன் தெரிவித்தார். அண்மையில் அவரது குரல் பதிவுகள் புலனத்தில் பரவலாக பகிரபட்டன. மேலும், அக்குரல் பதிவுகளில் அத்தூமீறிய வார்த்தைகளே இடம்பெற்றிருந்தன. இந்த விஷயம் ம.இ.காவின் பார்வைக்கு கொண்டுவரபட்டு பின்பு அவரிடம் விசாரனையும் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் உயர்வு!

கோலாலம்பூர், நவ. 1- பெட்ரோல் விலை 4 காசு உயர்ந்துள்ள நிலையில் டீசல் விலையும் 4  காசு உயர்ந்துள்ளது. கடந்த வாரம் முழுவதும் ரோன் 95 பெட்ரோல் விலை 2.20 காசுக்கு விற்கப்பட்ட நிலையில் வருகின்ற வாரத்திற்கு 2.24 காசுக்கு விற்கப்படும். அதேபோல் கடந்த வாரம் 2.50 காசுக்கு விற்கப்பட்ட ரோன் 97 பெட்ரோல் விலை 2.54 காசுக்கு விற்கப்படுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த வாரம் 2.13 காசுக்கு

மேலும் படிக்க
மற்றவைமுதன்மைச் செய்திகள்

சர்ச்சைக்குரிய இந்திய ஆசிரியர் பணியிட மாற்றம்!

பெஸ்தாரி ஜெயா, நவ.1- இந்திய பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பாலியல் தொந்தரவு வழங்கிய ஹோப்புல் தமிழ்ப்பள்ளியை சேர்ந்த ஆசிரியரும் ம.இ.கா. தாமான் ஸ்ரீ சாஹாயா கிளையின் முன்னாள் தலைவருமான நடராஜா எனும் நபரை கல்வியமைச்சு பணியிட மாற்றம் செய்துள்ளதாக துணைக்கல்வியமைச்சர் டத்தோ பி.கமகநாதன் இன்று தெரிவித்தார். சம்பந்தப்பட்ட அந்த ஆசிரியரின் இந்த நடவடிக்கை ஒட்டுமொத்த ஆசிரியர் தொழில் துறைக்கே சங்கடமான நாள் என தமது அறிக்கையின் வாயிலாக

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

விளையாட்டு வெற்றி பரிசுத் திட்டம் – 2017 சீ, பாரா ஆசியான் விளையாட்டாளர்கள் கெளரவிப்பு!

கோலாலம்பூர், நவ.1 - 2017 சீ விளையாட்டுப் போட்டி, 2017 பாரா ஆசியான் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்த அடைவுநிலையை வெளிப்படுத்திய விளையாட்டாளர்களுக்கு விளையாட்டு வெற்றி பரிசுத் திட்டத்தின் வழி 55 லட்சம் ரிங்கிட் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியா 145 தங்கம், 92 வெள்ளி, 86 வெண்கலப் பதக்கங்களை வென்றது. அதேவேளையில் பாரா ஆசியான் விளையாட்டுப் போட்டியில் 90 தங்கம், 85 வெள்ளி, 84 வெண்கலப் பதக்கங்களை பாரா

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

3 லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை இல்லையா?

கோலாலம்பூர், அக் 31- நாட்டில் 3 லட்சம் இந்தியர்களுக்கு அடையாள ஆவணம் இல்லை என எதிர்க்கட்சிகள் கூறி வருவது சுத்தப் பொய் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் இன்று தெரிவித்தார். கடந்த 2010 ஆண்டு தொடங்கி 2016 வரை பல்வேறு அரசு சார்பற்ற அமைப்புகள் மேற்கொண்டு வந்த நடவடிக்கைகள் வழி 12,726 இந்தியர்கள் மட்டுமே அடையாள ஆவணம் இல்லாமல் இருந்துள்ளனர். அவ்வாறு இருக்கையில், 3 லட்சம் இந்தியர்களுக்கு அடையாளம் இல்லை

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

இந்தியர்களின் குடியுரிமை பிரச்னைகளுக்கு இனி விடிவுகாலம்: டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் 

கோலாலம்பூர், அக். 31- நீண்ட நாட்களாக இந்திய சமுதாயத்தில் பெரும் பிரச்னையாக இருந்த குடியுரிமை பிரச்னை படிப்படியாக தீர்வுக் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில்,  இவ்வாண்டு விண்ணப்பம் செய்தவர்களில் 1054 மலேசிய இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது மகிழ்ச்சியை அளிக்கிறது என சுகாதார அமைச்சரும் மஇகா தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார். கோலாலம்பூர் மாநகர் மன்ற மண்டபத்தில் இன்று நடைபெற்ற 1054 இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட

மேலும் படிக்க