முகப்பு > இந்தியா/ ஈழம் (Page 44)
இந்தியா/ ஈழம்

ரஜினிகாந்த் -கமல்ஹாசன் அ.தி.மு.க.வில் இணையலாம்!

மதுரை, ஜூலை 24- மதுரையில் நேற்று நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாம்களை அமைச்சர் செல்லூர் ராஜூ பார்வையிட்டு கட்சி நிர்வாகிகளிடம் புதிய வாக்காளர் சேர்ப்பு மற்றும் திருத்தம் தொடர்பான பணிகளில் பொது மக்களுக்கு உதவிட கேட்டுக் கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. (அம்மா அணி) தயாராக உள்ளது. உள்ளாட்சி தேர்தல் பணிகளையும் நிர்வாகிகளும், தொண்டர்களும் தொடங்கி விட்டோம். வார்டுகளில் மக்களை சந்தித்து வருகிறோம்.

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்

தி.மு.க., அ.தி.மு.க.வை ஒழிக்கவே ரஜினி, கமலை இழுக்கிறார்கள்!

சென்னை, ஜூலை 24- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மாலை மலருக்கு அளித்த பேட்டி வருமாறு:- வருகிற 27-ந் தேதி தி.மு.க. ஒருங்கிணைக்கிற மனித சங்கிலி போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகளும் பங்கேற்கிறாம். மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கைக்கான தகுதித் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. முன் எடுத்து செல்லும் இந்த அறப்போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் தமிழகம் தழுவிய அளவில் பங்கேற்கிறோம். கடலூரில் நான் கலந்து கொள்கிறேன். போராட்ட களத்தில்

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்

டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு போனில் மிரட்டல்!

திருச்சி, ஜூலை 24- விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த தமிழக விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த 11-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று 14-வது நாளாக போராட்டம் நடக்கிறது. இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்

அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி உருவாகிறது

சென்னை, ஜூலை 24- காற்றின் திசை அவ்வப்போது மாறுவது போல் அரசியல் காற்றும் மாறி மாறித்தான் வீசும் என்பதுதான் யதார்த்தம். தமிழகத்தில் ஜெயலலிதாவின் மறைவும், கருணாநிதியின் முதுமையும் மிகப்பெரிய அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதை பயன்படுத்திக் கொள்ள ஒவ்வொரு கட்சியும் ஒரு வியூகத்தை வகுக்கும். அதில் வெற்றி பெற என்னென்ன வழிகள் உண்டோ அத்தனையையும் ஆராயும். ஆனால் திடீரென்று திரை நட்சத்திரங்கள் அரசியல் பக்கம் திரும்பியது அரசியலின் போக்கை

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்

வானொலி, தொலைக்காட்சி வழியாக மக்களிடம் இருந்து பிரியாவிடை பெறும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி

புதுடெல்லி, ஜூலை 24- ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதால், புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 25-ம் தேதி நாட்டின் 14-வது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். இந்த நிலையில் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதால் பாராளுமன்றத்தில் பிரிவு உபசார விழா நேற்று நடைபெற்றது. பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த பிரிவு  உபசார விழாவில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி அமீது அன்சாரி, சுமித்ரா மகாஜன், காங்கிரஸ்

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்

ஒருமையில் பேசிய அமைச்சருக்கு கமல் நெத்தியடி!

சென்னை, ஜூலை 21- ஒருமையில் பேசுவதை கலாசாரமாக கொண்டுள்ளவர்கள் மத்தியில் தலைவாஸ் என்ற பன்மை பெயர் மிகவும் சிறப்பானது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். புரோ கபடி 'லீக்' போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி வீரர்களின் அறிமுகம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. வீரர்களின் ஜெர்சியும், லோகோவும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர், கமல்ஹாசன், தெலுங்கு நடிகர்கள் அல்லு அர்ஜுன்,

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்

நேரடி பிரச்னைகளை குறிப்பிட்டு தமிழக அரசை சாடிய நடிகர் கமல்ஹாசன்!

சென்னை, ஜூலை 21- இதுவரை பிரச்சினைகளைப் பேசாமல், பொத்தாம் பொதுவாக அரசைச் சாடி வந்த கமல்ஹாஸன் இப்போது மக்கள் பிரச்சினைகளைப் பற்றி ட்விட்டரில் பேச ஆரம்பித்துள்ளார். இப்போது தமிழக மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது நீட் பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை, விவசாயம் பொய்த்துப் போன அவலம், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களால் டெல்டா மாவட்டங்கள் சுடுகாடாகும் அபாயம் போன்றவைதான். இந்தப் பிரச்சினைகளுக்காக மக்கள் போராடினாலும், ஒரு தனித்துவம் மிகுந்த தலைமை இல்லாததால்

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்

குற்றவாளி ஜெயலலிதா பெயரில் ஆட்சி நடக்கிறது. கமல் அண்ணன் பரபரப்பு போஸ்ட்!

 சென்னை, ஜூலை 20- குற்றவாளி பெயரில் தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் அண்ணன் சாருஹாசன் பேஸ்புக்கில் பரபரப்பு கருத்துக்களை தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் அண்ணன் சாருஹாசன் தனது பேஸ்புக்கில் இன்று கூறியுள்ள கருத்து: "மாண்புமிகு அமைச்சர் ஜயகுமார் அவர்களுக்கு.... 60 கோடி லஞ்ச ஊழல் குற்றவாளியாக உச்ச நீதி மன்றத்தால் முடிவு செய்யப்பட்ட அம்மா அவர்கள் பெயரால் ஆட்சி செய்கிறீர்கள்...? குற்ற வாளியாக சிறையிலிருக்கும் சசிகலா அவர்கள்

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் பாஜகவின் ராம்நாத் கோவிந்த் வெற்றி!

டெல்லி, ஜூலை 0- ஜனாதிபதி தேர்தலில் 66% வாக்குகளைப் பெற்ற பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் இந்தியாவின் 14-ஆவது ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ளார். குடியரசுத் தலைவராக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் இந்த மாதம் 25-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அப்பதவிக்கான தேர்தல் கடந்த 17-ஆம் தேதி நடைபெற்றது. 99 சதவீதம் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகளின் சார்பில் மீராகுமாரும் போட்டியிட்டனர். இவர்களில்

மேலும் படிக்க
இந்தியா/ ஈழம்

சிறையில் சசிகலா எப்படி இருக்கிறார்..? விளக்கம் சொல்கிறார் டி.டி.வி.தினகரன்

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, நட்சத்திர ஓட்டலில் தங்குவது போல சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்; ஷாப்பிங் செல்கிறார். இந்த வசதிகளை பெறுவதற்கு அவர் 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார் என்று கடந்த சில தினங்களாக  அனல் பறக்கும் விவாதங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த குற்றசாட்டுகளைச் சொன்ன போலீஸ் அதிகாரி ரூபா, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், டி.டி.வி.தினகரன் சென்னையில் இன்று (ஜூலை 19-ம் தேதி) நிருபர்களை

மேலும் படிக்க