அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் (Page 494)
முதன்மைச் செய்திகள்

நாட்டின் நிர்வாகத்தில் அந்நிய தலையீட்டை அனுமதிக்கிறார் நஜிப் – துன் டாக்டர் மகாதீர்

கோலாலம்பூர், செப்.6 -  நாட்டின் உள் விவகாரங்களில் அந்நிய நாடுகளின் தலையீட்டை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்  அனுமதிப்பதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெறவுள்ள அதிபர் டோனல்ட் டிராம்ப், நஜிப்பிற்கும் இடையிலான சந்திப்பு அந்நிய நாடுகளின் தலையீட்டிற்கு  வழி வகுக்கும் என மகாதீர் தெரிவித்துள்ளார். தி மலேசிய இன்சைட் என்ற

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

அந்நிய செலவாணி விசாரணை ஆணையத்தில் அன்வார் நாளை சாட்சியம் அளிப்பார் !

கோலாலம்பூர், செப்.6 -  பி.கே.ஆர் கட்சியின் பொதுத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்  பேங்க் நெகாராவின் அந்நிய செலாவணி இழப்பு மீது விசாரணை நடத்திவரும் அரச விசாரணை ஆணையத்திடம் ( ஆர்.சி.ஐ )  நாளை வாக்குமூலம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சாட்சிகளின் பட்டியலிலிருந்து இது தெரிய வருவதாக அன்வாரின் வழக்குரைஞர் ஆர்.சிவராசா கூறினார். ஆர். சி.ஐ விசாரணையின் முதல் நாளில் சாட்சியமளித்த பேங்க் நெகரா முன்னாள் கவர்னர் அப்துல் மூராட் காலிட்,

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

பேங்க் நெகராவுக்கு 32.074 பில்லியன் ரிங்கிட் இழப்பு!

புத்ராஜெயா, செப். 6 - 1988 ஆம் ஆண்டுத் தொடங்கி 1994 ஆம் ஆண்டு வரையில் அந்நிய செலவாணியின் வர்த்தகத்தில் நாட்டிற்கு 32.074 பில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பேங்க் நெகராவின் முன்னாள் கவர்னர் டான்ஸ்ரீ செத்தி அக்தார் தெரிவித்துள்ளார். 1984 -88 ஆம் ஆண்டு வரைக்குமான கையிருப்பு மேலாண்மையில் ஏற்பட்ட இழப்புகள் குறித்த அறிக்கையில் அவை குறிப்பிடப்பட்டுள்ளதாக செத்தி அக்தார் கூறினார். 2007 ஆம் ஆண்டில் ஏப்ரல் 18

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

தமிழ்ப் பத்திரிக்கையாளரும் சமூக சேவகருமான அருள் தேவா காலமானார்!

கோலாலம்பூர், செப்.6- தமிழ் நேசனின் செய்தியாளரும் புகைப்பட கலைஞருமான அருள்தேவா என்றழைக்கப்படும் அருள்தேவசகாயம் உடல்நலமின்றி இன்றி காலமானார். நெஞ்சு வலி காரணமாக அவர் கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. தொடக்கத்தில் உடல்நிலை மிக மோசமாக காணப்பட்ட அவர், பிறகு உடல்நலம் தேறி வந்ததாக அவரை நேரில் சென்று பார்த்து வந்த அவரது நண்பர்கள் அனேகன்.கோம் இணையத்தள செய்தி பதிவேட்டிடம் தெரிவித்தனர். இந்நிலையில்

மேலும் படிக்க
சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

தீவிரவாதிகளா? 19 பேர் கைது!

கோலாலம்பூர், செப் 5- தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் 19 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 8 பேர் அபு சாயாப் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். ஜூலை 4ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகளில் பிடிபட்டனர். இவர்களில் 11 பேர் அந்நிய பிரஜைகள். தீவிரவாத ஒழிப்பு சிறப்புப் பிரிவு சிலாங்கூர், கோலாலம்பூர், கிளாந்தான், ஜோகூரில் மேற்கொண்ட நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று தேசிய

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

3 ஆண்டுகளாக கொத்தடிமை! தமிழக பிரஜை மீட்பு

ஜெம்போல், செப் 6 கொத்தடிமைபோல் நடத்தப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 49 வயது நபரை ஜெலுபு மாவட்ட போலீசார் மீட்டனர். அவர் மூன்று ஆண்டுகளாக கொத்தடிமை போல் நடத்தப்பட்டிருக்கிறார் என்பது விசாரணையில் தெரிய வருவதாக ஜெம்போல் மாவட்ட போலீஸ் தலைவர் டிஎஸ்பி கமாருல் ரிசால் ஜெனால் தெரிவித்தார். நேற்று மாலை 6.15 மணியளவில் பொது மக்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் அவரை மீட்டனர். தமிழ்நாட்டிலிருந்து இங்கு வந்தது முதல் அவர்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

ஓம்ஸ் தியாகராஜன் தாக்கப்பட்ட விவகாரம் : திரித்துவிடப்பட்டது! – டத்தோ எம்.சரவணன்

கோலாலம்பூர், செப். 6 கூட்டரசு பிரதேச ம.இ.கா. கட்டடத்தின் கணக்கறிக்கையை முறையாக ஆவணப்படுத்தவில்லை என்று தமிழ்மலர் நாளிதழ் தொடர்ந்து பொய்யான செய்தியை வெளியிட்டு வந்தது. இது குறித்து விளக்கம் கேட்க மஇகா இளைஞர் பிரிவினர் தமிழ்மலர் அலுவலகத்திற்குச் சென்றதாக இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் தமது அறிக்கையில் கூறியுள்ளார். கடந்த கூட்டரசு பிரதேச ம.இ.கா மாநாட்டில் கணக்காய்வாளர்களால் கணக்கறிக்கை ஆய்வு செய்யப்பட்டு பேராளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் உண்மைக்குப் புறம்பான செய்திகளை

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

சமுதாயத்திற்கு நீங்கள் செய்த சாதனை என்ன? பட்டியலிட முடியுமா?

குவாந்தான், செப் 6-- மஇகா இந்தியர்களின் தாய்க்கட்சி என்ற நிலைப்பாட்டில் தனது கடமையை நிறைவேற்றி வருகிறது. அதனைத்தொடர்ந்து பகாங் மாநில மஇகா தலைவராகவும், தனது சொந்த முயற்சியாலும் டத்தோ ஆர்.குணசேகரன் அவர்கள் சமுதாயத்திற்காக சேவையாற்றி வருகிறார். அவர் ஆற்றும் சேவையைப் பற்றி மாநில முதல்வருக்குத் தெரியும், பகாங் மாநில இந்திய மக்களுக்குத் தெரியும். கோலாலம்பூரில் ஒரு துணையமைச்சரின் அதிகாரியாக இருந்து கொண்டு, அங்குள்ள தமது மக்களுக்குச் சேவையாற்ற முடியாத மைபிபிபி

மேலும் படிக்க
சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

துணையமைச்சரின் ஆதரவாளர்களால் ஓம்ஸ் தியாகராஜன் தாக்கப்பட்டார்!

கோலாலம்பூர், செப். 5- தமிழ்மலர் நாளிதழில் கூட்டரசு பிரதேச கட்டடத்தின் வாடகை கணக்கறிக்கையை ஏன் வெளியிடவில்லை என்பதை மையப்படுத்தி, கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இது குறித்து ஆட்சேபனை தெரிவிக்க, இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சரும், கூட்டரசு பிரதேச ம.இ.கா. தலைவருமான டத்தோ எம்.சரவணன் தலைமையில் 70 க்கும் மேற்பட்டோர் தமிழ்மலர் அலுவலகத்தை சூழ்ந்து கொண்டதாக அதன் நிர்வாகி வழக்கறிஞர் சரஸ்வதி கூறினார். பின்னர் அவர்கள்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

லிம் குவாங் எங் மீது சட்ட நடவடிக்கை

கோலாலம்பூர், செப்.5 -  பினாங்கு முதலமைச்சர் லிம் குவாங் எங் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள  மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முடிவு செய்துள்ளது. பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பீ பூன் போ கைது செய்யப்பட்டது சட்டவிரோத நடவடிக்கை என  கருத்து தெரிவித்திருந்த லிம் குவாங் எங், அதற்கு மன்னிப்பு கேட்க தவறியதால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முடிவு செய்துள்ளது. லிம் குவாங்

மேலும் படிக்க