வியாழக்கிழமை, மார்ச் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் (Page 52)
அரசியல்குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

ஜாகீர் நாயக்கை மலேசியாவிலிருந்து வெளியேற்ற மறுப்பதா? மலேசிய இந்து சங்கம் கண்டனம்!

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 9- சர்ச்சைக்குரிய மத போதகரான ஜாகீர் நாயக்கை மலேசியாவிலிருந்து வெளியேற்ற மலேசிய இந்துக்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், அவரை வெளியேற்றுவதற்கான அவசியம் இப்போது இல்லை எனக் கூறிய பிரதமரின் கருத்துக்கு மலேசிய இந்து சங்கம் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது என அதன் தலைவர் டத்தோ மோகன் ஷான் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் .இந்து மதம் மட்டுமின்றி நாட்டில் உள்ள மற்ற மதத்தினரும்

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

2020 இலக்கை அடைய முடியாது! – டாக்டர் மகாதீர்

புத்ராஜெயா, ஜூலை 9- 2020 இலக்கை மலேசியா அடைய வாய்ப்பில்லை. குறிப்பாகமேம்பாடடைந்த நாடு என்ற இலக்கை அடைய பல ஆண்டு காலமாக போராடிய போதிலும் 2020இல் மலேசியா அந்த இலக்கை அடைய முடியாது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார். இந்த 2020 தூரநோக்கு இலட்சியத் திட்டத்தை நான்தான் அறிமுகப்படுத்தினேன். ஆனால் இதற்கு முந்தைய ஆட்சிக் காலத்தில் அதிகாரத் துஷ்பிரயோகம் இருப்பதால் அந்த இலக்கை அடைய முடியாது.

மேலும் படிக்க
அரசியல்குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

ஸாகிர் நைக் விவகாரம் : நம்பிக்கை கூட்டணியின் நம்பிக்கை துரோகம்! அரசுசாரா இயக்கங்கள் கண்டனம்

கோலாலம்பூர், ஜூலை 8- இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் பேசி வந்த சர்ச்சைக்குரிய மத போதகர் ஸாகிர் நைக்கை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என அரசு சாரா இயக்கங்கள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர். குறிப்பாக நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் இந்துகளுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்து விட்டது என அவர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த விவகாரத்தில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள இந்திய அமைச்சர்களும் எந்த அறிக்கையும் வெளியிடாமல்

மேலும் படிக்க
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

ரஸ்லானின் எச்சரிக்கை வெறும் காலி டப்பா — அமார் சிங்

கோலாலம்பூர், ஜூலை 6- 1 எம்.டி.பி. தொடர்பான அறிக்கைகள் வெளியிடுவதை நிறுத்திக் கொள்ளும்படி செபூத்தே தொகுதி அம்னோ உதவித் தலைவர் டத்தோ முகமது ரஸ்லான் முகமது ரபீ எனக்கு விடுத்திருக்கும் எச்சரிக்கையானது வெறும் காலி டப்பா என்று புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ அமார் சிங் கூறியுள்ளார். இவருடைய அறிக்கையில் கவனம் செலுத்தி நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. தற்போது நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு எஸ்.ஆர்.சி.

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

மானம் இருந்தால் பதவி விலகுங்கள்! ஸாஹிட் ஹாமீடி

புத்ரா ஜெயா, ஜூலை 5- அம்னோவிலிருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மானம் இருந்தால் மக்கள் பிரதிநிதியாக இருக்கக்கூடிய அப்பதவியிலிருந்து விலக வேண்டுமென அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹாமீடி சவால் விடுத்தார். கட்சியிலிருந்து விலகுவதாக கூறியவர்கள் இதற்கு முன்பு தேசிய முன்னணியின் சின்னத்தில் போட்டியிட்டவர்கள். அதனால், அவர்கள் அனைவரும் பதவியிலிருந்து விலகினால் இடைத்தேர்தலை சந்திக்க வேண்டும் என அவர் கூறினார். தேசிய முன்னணியின் சின்னத்தில் போட்டியிட்ட அம்னோ நாடாளுமன்ற

மேலும் படிக்க
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

நஜீப் பிணையில் விடுதலை!

கோலாலம்பூர், ஜூலை 4 - கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நிர்ணயித்த 10 லட்சம் வெள்ளி ஜாமீன் தொகையில் ஒரு பகுதியை செலுத்தியதால் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் பிணையில் விடுவிக்கப்பட்டார். அவரது பிள்ளைகளான முகமது நோர் அஸ்மான், நூரியான நஜ்வா ஆகியோர் கோலாலம்பூர் நீதிமன்ற கட்டடத்தில் உள்ள ஒரு வங்கியில் ஜாமீன் தொகையை செலுத்திய பின்னரே அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள நஜீப்புக்கு நீதிமன்றம்

மேலும் படிக்க
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

என் மீதான வழக்கு புதிய அரசாங்கத்தின் விருப்பம்! – நஜீப்

கோலாலம்பூர், ஜூலை 4 - நாட்டிற்கும் மக்களின் தேவைக்கும் 42 ஆண்டுகள் தாம் சேவையாற்றி இருப்பதாகவும் அதற்கு தாம் செலுத்தவேண்டிய விலை இதுதான் என்றால் தாராலமாக ஏற்றுக் கொள்வதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்துள்ளார். ஜாலான் டூத்தா கோலாலம்பூர் நீதி மன்ற கட்டட வளாகத்தில் அவர் நிருபர்களிடம் பேசினார். தமது மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு புதிய அரசாங்கத்தின் விருப்பமாக உள்ளது. சட்டவிதிகளுக்கு ஏற்ப விசாரணை நடந்தால்

மேலும் படிக்க
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

நஜீப்பிற்கு எதிராக வலுவான வழக்கு-டோம்மி தோமஸ்

கோலாலம்பூர், ஜூலை 4- முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு எதிராக புராசிகியூஷன் தரப்பிடம் வலுவான வழக்கு உள்ளது என்று சட்டத்துறை தலைவர் டோம்மி தோமஸ் தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரையில் நஜீப் குற்றமற்றவர் எனும் நிலையை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் நஜீப்பிற்கு எதிராக வலுவான வழக்கு இருப்பதை வழக்கு விசாரனையின் போது இதனை நிரூபிப்போம் என்று இன்று நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை குறிப்பிட்டார்.  நஜீப்பிற்கு

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

சிலாங்கூர் தண்ணீர் பிரச்னைக்கு 1 மாதத்தில் தீர்வுக் காணப்படும்! சேவியர் ஜெயக்குமார் உறுதி

புத்ராஜெயா, ஜூலை 3- நீண்ட காலமாக இருந்து வரும் சிலாங்கூர் தண்ணீர் பிரச்னைக்கு ஒரு மாதத்தில் தீர்வுக் காணப்படும் என்று நீர், நில மற்றும் இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் உறுதியளித்தார். இவ்விவகாரம் குறித்து மந்திரி புசார், அமிருடின் ஷாரி உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விட்டது. எனினும், இதுவரை சில விவகாரங்களுக்குத்தான் ஒப்புதல் அளிக்கப்பட்டதால் அவை குறுகிய காலத்தில் தீர்க்கப்பட்டு விடும் என்று நம்பப்படுகிறது.

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

அம்னோ வேட்பாளர்களுக்கு மிரட்டல்! தோல்விக்கும் அதுதான் காரணம் – கைரி ஜமாலுடின்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 1- அம்னோ பேராளர்களில் பெரும்பாலோர் மாற்றத்தையே விரும்பினர். எனினும், தாங்கள் தேர்வு செய்த வேட்பாளர்களை ஆதரிக்கும்படி செல்வாக்குமிக்கவர்கள் மிரட்டல் விடுத்ததாக கைரி ஜமாலுடின் குற்றம் சாட்டியுள்ளார். சனிக்கிழமை நடைபெற்ற அம்னோ தலைவருக்கான தேர்தலில் தனக்கு 32, 592 வாக்குகள் கிடைத்த வேளையில் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஸாகிட் ஹமிடி 39,197 வாக்குகள் பெற்றதாக முன்னாள் அம்னோ இளைஞர் பிரிவு தலைவரான கைரி தனது டுவிட்டர் தளத்தில்

மேலும் படிக்க