முகப்பு > முதன்மைச் செய்திகள் (Page 535)
முதன்மைச் செய்திகள்

நாட்டில் மேலும் 50 தானியங்கி கேமராக்கள் பொருத்த ஜே.பி.ஜே. திட்டம்!

கோலா நெருஸ், ஜூலை 22- இவ்வாண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் மேலும் 50 ஏ.இ.எஸ் எனப்படும் தானியங்கி விழிப்புணர்வு பாதுகாப்பு கேமராக்களை சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) பொருத்தவிருப்பதாக அதன் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ நட்ஸ்ரி சிரோன் தெரிவித்தார். சாலை விபத்துகளில் மரணச் சம்பவங்களின் விகிதத்தைக் குறைக்கும் முயற்சிகளில் ஒரு பகுதியாக இந்த கேமராக்களைப் பொருத்த இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுவரை 21 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

எம்.ஆர்.டி. திட்டத்திற்கான எதிர்ப்பில் அரசியல் நோக்கம் அல்ல!

கோலாலம்பூர், ஜூலை 22- நாளை ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு முன்புறம் நடத்தவிருக்கும் எம்.ஆர்.டி. திட்ட எதிர்ப்பு போராட்டம் அரசியல் நோக்கம் கொண்டதல்ல என பி.கே.ஆர். செர்டாங் கிளையின் தலைவர் பி.ரவிசந்திரன் தெரிவித்தார். மாறாக, ஆலயத்தின் முன்புறம் கட்டப்படவிருக்கும் எம்.ஆர்.டி. திட்டத்திற்கான தண்டவாளத்தை நிறுத்துவதற்கே ஆகும் என அதன் ஏற்பாட்டுக் குழுவினருமான அவர் பெரித்தா டெய்லியிடம் கூறினார். எம்.ஆர்.டி. திட்டத்தை நாங்கள் ஏன் எதிர்க்க வேண்டும்? அத்திட்டத்தை நாங்கள்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

எதிர்க்கட்சி கூட்டணியில் பகல் கனவு -டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஸாஹிட் ஹமிடி

கோத்தா பாரு, ஜூலை 21- எதிர்க்கட்சி கூட்டணியை மக்கள் நிராகரிக்க வேண்டும். ஏனெனில், அவர்கள் பகல் கனவு காண்கிறார்கள் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஸாஹிட் ஹமிடி நேற்று வழியுறுத்தினார். எதிர்க்கட்சி கூட்டணிக்கு 3 கேப்டங்கள் உள்ளனர். ஆகவே, அவர்கள் வேறு எங்கும் சென்றுவிட முடியாது என்றார் அவர். அந்த எதிர்க்கட்சி கூட்டணிக்கு தலைமை ஏற்றவருக்கு 22 ஆண்டுகளாக மக்கள் வாய்ப்பு வழங்கினார்கள்.  இப்போது அந்த எதிர்க்கட்சி

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

பரபரப்பான வேளையில் இரயிலில் நெரிசல் -எம்ஏஎச்பி தகவல்

கோலாலம்பூர், ஜூலை 21- பரபரப்பான வேளையில் கேஎல்ஐஏ பிரதான முனையத்தை சேர்ந்த பயணிகள் இரயில் நிலையத்திலிருந்து கேஎல்ஐஏ அனைத்துலக முனைய கட்டடம் வரையில் மக்களின் கூட்ட நெரிசல் இருப்பது வழக்கமான ஒன்றுதான். பயணிகளுக்காக கேஎல்ஐஏயிலிருந்து இரு இரயில் வண்டிகள் சேவையில் உள்ளன. எனினும், ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு இரயில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் மற்றொரு இரயில் நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணைக்கு ஏற்ப தினசரி

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணிக்கே வெற்றி – துன் டாக்டர் மகாதீர்

கோலாலம்பூர், ஜூலை 21- எதிர்வரும் பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் எனப்படும் நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெறும் என துன் டாக்டர் மகாதீர் முகமட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனினும் பொதுத் தேர்தல் நியாயமாக நடந்தால் மட்டுமே இந்த வெற்றி உறுதியாக இருக்கும் என்றார் அவர். இப்போது அதிகமான ஆதரவை நாங்கள் பார்க்கின்றோம். ஆனால் எங்களது வெற்றியைத் தடுப்பதற்காக பல்வேறு வியூகங்கள் மேற்கொள்ளப்படலாம் என்றும் தாம் அஞ்சுவதாக 22 ஆண்டுகாலம் நாட்டில்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

தேர்தலில் போட்டியா? இன்னும் முடிவு செய்யவில்லை!

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 21- எதிர்வரும் 14ஆது பொதுத்தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா என்பது பற்றி தாம் இன்னும் முடிவெடுக்கவில்ைெலைன பார்டி பிரிபூமி பெர்சத்துவின் (பெர்சத்து) அவைத் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். கக்காத்தான் ஹராப்பான் நம்பிக்கை இழந்த நிலையில் இருந்தால்தான் நான் போட்டியிடுவேன். ஆனால், கூட்டணி அம்மாதிரியான நிலையில் இல்லை என்று நான் நினைக்கிறேன் என்று டாக்டர் மகாதீர் கூறியதாக சீனார் ஹரியான் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

விருப்பமின்றி கட்சியின் மறுதேர்தலுக்குத் தயாராகிறது ஜசெக 

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 21- ஜசெக மறுதேர்தலை நடத்த வேண்டுமென்ற சங்கங்களின் தலைமை இயக்குநரின் உத்தரவை கட்சி ஏற்றுக் கொள்ளவில்லாவிட்டாலும், அதன் செயலவை கட்சியின் மத்திய செயலவைக்கான (சிஇசி)க்கு மறுதேர்தலை நடத்தத் தயாராகி வருகிறது.  14வது பொதுத் தேர்தல் எந்த நேரத்திலும் நடத்தப்படலாம் என்றிருக்கும் வேளையில், இந்த ஆர்ஓஎஸ்ஸின் உத்தரவு வந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, ஜசெக விருப்பமில்லாமலேயே அதன் மறுதேர்தலை நடத்தத் தயாராகி வருகிறது. அதேவேளை, இந்த விவகாரத்தில் ஆர்ஓ

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

அரசியல் சட்டத்திற்கேற்ப  பூமிபுத்ரா தகுதி!

கோலாலம்பூர், ஜூலை 21- ஒட்டுமொத்தமாக அனைத்து மலேசிய இந்திய முஸ்லிம்களுக்கும் பூமிபுத்ரா எனும் அங்கீகாரம் அளிப்பது சரியாக இருக்காது என மலேசிய இந்திய முஸ்லிம் சங்கமான கிம்மாவின் தேசியத் தலைவர் செனட்டர் டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் காதர் குறிப்பிட்டுள்ளார்.  எவர் ஒருவர் 5ஆவது அல்லது 6ஆவது தலைமுறையாக இந்நாட்டில் வசிக்கிறரோ, அவரே பூமிபுத்ரா அந்தஸ்தைக் கொண்டவராக அங்கீகரிக்கப்பட வேண்டும். உதாரணத்திற்கு என்னை எடுத்துக் கொண்டால், நாட்டின் சுதந்திரத்துக்கு முன்னர் இங்கு

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

ஆணையத்திடம் சாட்சியம் அளிக்கத் தயார்

கோலாலம்பூர், ஜூலை 21- 1990ஆம் ஆண்டுகளில் தாம் நிதி அமைச்சராக இருந்தபோது அந்நிய செலவாணி முதலீட்டில் ஏற்பட்ட இழப்பீடு மீதான அரச விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டுள்ளார்.  எனினும், அந்த இழப்பிடு துன் மகாதீரால்தான் ஏற்பட்டது என அவரைத் தாக்கிக் குறைசொல்லக் கூடாதென அவர் கேட்டுக் கொண்டார். அதே வேளையில், அரசியல் விளையாட்டுக்குத் தம்மை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதை நம்பிக்கை கூட்டணி

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

சக மாணவருக்கு உணவில் விஷம் கொடுத்த மாணவன் கைது

கூச்சிங், ஜூலை 21- தனது வகுப்பு தோழனுக்கு கரப்பான் பூச்சி விஷம் கலக்கப்பட்ட உணவை உட்கொள்ளும்படி கட்டாயப்படுத்திய முதலாம் படிவ மாணவனை சரவாக் போலீசார் கைது செய்தனர்.  நேற்று விடியற்காலை மணி 2.30 மணியளவில் ஸ்ரீ அமானிலுள்ள தனது வீட்டில் அந்த மாணவன் கைது செய்யப்பட்டதாக சரவாக் குற்றவியல் துறையின் தலைவர் துணை ஆணையர் டத்தோ தேவ் குமார் செய்தியாளரிடம் தெரிவித்தார். வியாழக்கிழமையன்று பிற்பகலில் உணவில் விஷம் கலக்கப்பட்ட சம்பவம்

மேலும் படிக்க