வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
முகப்பு > முதன்மைச் செய்திகள் (Page 571)
முதன்மைச் செய்திகள்

1 எம்டிபி தொடர்பான 30 கேள்விகள் நிராகரிப்பட்டன – மக்களவையில் அமளி

கோலாலம்பூர், ஜூலை.24 - 1எம்டிபி எனப்படும் ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம் தொடர்பாக  இதுவரை எதிர்கட்சிகள் தாக்கல் செய்திருந்த 30 கேள்விகளை மக்களவை  நிராகரித்ததை அடுத்து திங்கட்கிழமை அவையில் கடும் அமளி ஏற்பட்டது. 13 ஆவது நாடாளுமன்றத்தின் ஐந்தாம் தவணைக்கான இரண்டாவது கூட்டம் திங்கட்கிழமை தொடங்கியது. 1எம்டிபி விவகாரத்தில் அந்நியர் தலையீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமா, அமெரிக்க நீதித்துறையின் 1எம்டிபி-தொடர்பான வழக்குகள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன போன்ற கேள்விகளை

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

பெல்டாவுக்கு 6 ஊக்குவிப்புத் திட்டங்கள்

புத்ரா ஜெயா, ஜூலை 23- கூட்டரசு நில மேம்பாட்டு நிறுவனத்தின் (பெல்டா) வளர்ச்சிக்காக 6 ஊக்குவிப்புத் திட்டங்களைப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நேற்று அறிவித்தார்.  அதில் கடனைச் செலுத்துதல், ஊக்குவிப்பு நிதியளித்தல், சிறப்பு நிதியத்தை அமைத்தல் மற்றும் வீட்டுடைமைத் திட்டமும் அடங்கும். குடியேற்றவாசிகளின் நலனை முன்னிட்டு வெ. 5,000லிருந்து வெ. 94,956 வரை ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்தார். மொத்தம் வெ. 47.48 கோடி

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

மகாதீர் பெக்கானில் போட்டியிட வேண்டும்

லிப்பிஸ், ஜூலை 23-  துன் டாக்டர் மகாதீருக்குத் துணிவிருந்தால் அவர் பெக்கான் தொகுதியில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு எதிராகப் போட்டியிட வேண்டுமென அம்னோ உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசேய்ன் சவால் விடுத்தார். உண்மையில் அவர் போட்டியிட மாட்டார் என்றும் போட்டியிடுவதாக அவர் அறிவித்தது வெற்று அறிக்கை என்றும் ஹிஷாமுடின் குறிப்பிட்டார். மகாதீர் பெக்கானில் போட்டியிடுவாரானால், அம்னோ உச்சமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அங்கு ஒரு சேர இணைந்து

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

பவானிக்கு பேரா மாநில ம.இ.கா. இளைஞர் பிரிவு உதவி

கம்பார், ஜூலை 23- விபத்தின் காரணமாக பின் மண்டையில் ரத்தம் கட்டிக்கொண்ட நிலையில் முழு உடல் செயல் இழந்து தவிக்கும் பேரா கம்பாரைச் சேர்ந்த பவானிக்கு(வயது4) பேரா மாநில ம.இ.கா. இளைஞர் பிரிவு சிறப்பு சக்கரநாற்காலியை வழங்கியது. இது குறித்து பேசிய கம்பார் தொகுதி ம.இ.கா. இளைஞர் பிரிவுத் தலைவர் நாகராஜன், இந்த உதவி குறித்து பேரா மாநில இளைஞர் பிரிவுத் தலைவர் நேருஜி, முனியாண்டியிடம் முன்வைத்ததாகவும், பின்னர் அவர்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

இளைய சமுதாயத்தினரின் பங்கேற்பு குறைவுக்கு வயது வரம்பே காரணம்!

அலோர்ஸ்டார், ஜூலை 23- இளைஞர்கள் சார்ந்த நடவடிக்கைகளில் இளைய சமுதாயத்தினர்களின் பங்கேற்பு மிக குறைவாக இருப்பதற்கு வயது வரம்பு 40 வயதிலிருந்து 30-ஆக குறைக்கப்பட்டதே முக்கிய காரணமாக விளங்குவதாக 4பி இளைஞர் அமைப்பின் தலைவர் டான்ஸ்ரீ முஹம்மட் அலி ருஸ்தாம் தெரிவித்தார். இக்காலக்கட்டத்தில் 30 வயதுக்குட்பட்ட கால வரம்பானது இளைஞர்கள் தங்களது சமூகபொருளாதாரத்தை வலுபடுத்திக்கொள்வதில் கொஞ்சம் பதற்றம் நிறைந்த காலக்கட்டமாக விளங்குகின்றது.      முந்தைய காலங்களில் என்னை போன்ற வயதானவர்கள்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

மலேசிய திராவிடர் கழகத்திற்கு மானியம் இல்லை! காந்தராவ் வருத்தம்

கோலாலம்பூர், ஜூலை 23- மலேசியாவில் உள்ள முதன்மை இயக்கங்களில் ஒன்றாக விளங்கும் மலேசிய திராவிடர் கழகத்திற்கு (மதிக) அரசு மானியம் கிடைக்கவில்லை என அக்கழகத்தின் தலைவர் எப். காந்தராஜ் வருத்தம் தெரிவித்தார்.  குறிப்பாக 2016ஆம் ஆண்டு தாம் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றது முதல், செடிக்கில் பல முறை மானியத்திற்கான விண்ணப்பம் செய்தோம். ஆனால் எந்த பதிலும் இல்லை. குறிப்பாக இளைஞர், மகளிர்களுக்கான நலத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான விண்ணப்பம் செய்தும், மானியம் வழங்கப்படாமல்

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

தெலுக் கெமாங் தொகுதி குறித்து அம்னோ, ம.இ.கா. தலைவர்கள் முடிவெடுப்பர்! -டத்தோ டி.மோகன்

கோத்தா கினபாலு, ஜூலை 23- தெலுக் கெமாங் நாடாளுமன்ற தொகுதி குறித்த விவகாரத்தை அம்னோவின் உச்சமன்ற தலைவர்கள், ம.இ.காவின் தேசியத் தலைவர் ஆகியோரிடம் விட்டுவிட வேண்டுமென ம.இ.காவின் உதவித் தலைவர்களில் ஒருவரான டத்தோ டி.மோகன் தெரிவித்தார். இவ்விவகாரத்தில் தொகுதி பங்கீடு குறித்து அம்னோ, ம.இ.கா ஆகிய இருகட்சிகளின் தேசியத் தலைவர்களைத் தவிர வேறு யாரும் முடிவெடுக்க முடியாது. அவர்கள் இத்தொகுதியை மாற்றிக்கொள்ளலாம் என கூறினால் மாற்றிக்கொள்ள வேண்டியதுதான் என இங்கு

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை வழங்கிய மலேசிய தல அஜித் நற்பணி மன்றம்!

கோலாலம்பூர், ஜூலை 23- சமூக நல நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் மலேசிய தல அஜித் நற்பணி மன்றம் அண்மையில் சுமார் 10 மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை வழங்கியது. தலைநகரிலுள்ள பிரபல உணவகத்தில் நடை பெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ம.இ.கா. இளைஞர் பிரிவு செயலாளர் அர்விந்த் கிருஷ்ணன் மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை வழங்கினார். இது குறித்து அம்மன்றத்தின் தலைவர் தேவேந்திரன் பன்னீர்செல்வம் கூறுகையில், கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

அந்நிய தொழிலாளர்கள் விவகாரத்தில் ஊழலா?அல் ஜசீராவுக்குக் கண்டனம் -நூர் ஜஸ்லான்

கோலாலம்பூர், ஜூலை 22-   பிரதமர் துறை   துணையமைச்சர் டத்தோ   நூர்  ஜஸ்லான்   முகமட்   மலேசியாவில்   அந்நிய   தொழிலாளர்களைக்    கொண்டுவரும்    தொழிலில்    மறைமுகமாகப் பணப்  பட்டுவாடா  நடப்பதாக     வெளிச்சம்போட்டுக்   காட்டும்    அல்  ஜசீரா   தொலைக்காட்சி   நிகழ்ச்சிக்குக்   கண்டனம்    தெரிவித்துள்ளார். அல்  ஜசீராவின் 101 East  

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

எரிபொருள் விலையை நாள்தோறும் அறிவிக்க அரசாங்கம் எண்ணமா?

கோலாலம்பூர், ஜூலை 22 நாள் அடிப்படையில் எண்ணெய் விலையை நிர்ணயிக்க அரசாங்கம் தற்போது எண்ணம் கொண்டிருக்கவில்லை. தற்போதைக்கு பெட்ரோல், டீசல் விலை வாராந்திர அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றது. உள்நாட்டு வாணிப, கூட்டுறவு, பயனீட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின் இதற்கு முன்னர் பரிந்துரைத்த எரிப்பொருள் விலை நிர்ணயிக்கும் நடைமுறை முழுமையாக ஆராயப்பட்டதோடு அதனைச் செயல்படுத்த அவகாசம் தேவைப்பட்டதாக இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஜொஹாரி அப்துல் கானி தெரிவித்தார். வாராந்திர

மேலும் படிக்க