அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் (Page 93)
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

அமைச்சரவையில் 4 இந்திய பிரதிநிதிகள்! அரசுசாரா இயக்கங்கள் கோரிக்கை

கோலாலம்பூர், மே 18- 14ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி பெற்ற மாபெரும் வெற்றிக்குப் பக்கபலமாக நின்ற இந்திய சமூகத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அச்சமூகம் எதிர்நோக்கும் பிரச்னைகளை தீர்ப்பதற்கான சிறப்பு பணிக்குழுவை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் உருவாக்கியுள்ளார். அதோடு இந்த சிறப்பு பணிகுழுவிற்கு அவரே தலைமையேற்பதாக வெளிவந்த செய்தியை நாட்டின் முதன்மை இந்திய அமைப்புகள் வரவேற்கின்றன. இந்திய சமூகத்தை பொருளியல் ரீதியில் இதர சமூகங்களுக்கு இணையாக உயர்த்துவது

மேலும் படிக்க
அரசியல்மற்றவைமுதன்மைச் செய்திகள்

அமைச்சரவை பெயர் பட்டியலை வழங்க மாமன்னரை சந்திக்கிறார் துன் மகாதீர்

கோலாலம்பூர், மே 18- மலேசிய அமைச்சரவை பெயர் பட்டியலை வழங்குவதற்காக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் இன்று மாலையில் மாமன்னரை சந்திக்கிறார். இந்த சந்திப்பு இன்று மாலை மணி 5.00 அளவில் நடைபெறும் என பிரதமர்துறை தெரிவித்தது. துன் மகாதீர் அமைச்சரவை பட்டியலை மாமன்னரிடம் வழங்குவார் என அத்துறை கூறியது. துன் மகாதீர் கடந்த 10ஆம் தேதி பிரதமராக மாமன்னர் முன்னிலையில் பதவி ஏற்றார். தொடக்கத்தில் அவர் பெர்சாத்து கட்டியின்

மேலும் படிக்க
அரசியல்மற்றவைமுதன்மைச் செய்திகள்

துன் மகாதீர் கல்வியமைச்சர் பதவியை ஏற்பது தவறில்லை! அன்வார் இப்ராஹிம்

கோலாலம்பூர், மே 18- பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கல்வியமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளது நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் கொள்கையறிக்கைக்கு முரணானது அல்ல பி.கே.ஆர். தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இது தேர்தல் கொள்கை அறிக்கைக்கு முரணானது அல்ல. எனக்கு தெரிந்த வரையில், பிரதமர் பதவி ஒரு துறை அல்ல என அவர் கூறினார். பிரதமர் பொதுவான முறையில் நாட்டை வழிநடத்துவார். அப்படித்தான்,

மேலும் படிக்க
அரசியல்மற்றவைமுதன்மைச் செய்திகள்

என்னை விமர்சிப்பவர்களை கைது செய்வதை ஏற்க மாட்டேன்! துன் மகாதீர்

கோலாலம்பூர், மே 18- என்னை பற்றி விமர்சித்த ஆடவரைப் போலீஸ் கைது செய்ததை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இவ்விவகாரத்தில் போலீஸ் உடனடி ஆய்வை மேற்கொள்ள வேண்டுமென தாம் உத்தரவிட்டிருப்பதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்தார். இந்த சட்டம் தொடர்பில் பிறகு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் ஆய்வு செய்யப்படுமென தனது டுவீட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அந்த டுவீட்டர் பதிவில், துன் மகாதீரை விமர்சித்த ஆடவரைப் போலீஸ் கைது செய்துள்ள

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

பெட்டிப் பெட்டியாக கட்டம் கட்டப்பட்டது நஜீப்பின் வீடுகள்..!

கோலாலம்பூர், மே 18- முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் வீட்டில் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட போலீஸ் சோதனை இன்னும் அதிரடியாக தொடரப்பட்டு வருகிறது. 1எம்டிபி நிறுவன முறைகேடுகள் தொடர்பாக, நஜீப்புக்கு சொந்தமான ஆறு வீடுகளில், போலீசார் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்று அதிகால 2.30 மணியளவில், நஜீப்புக்கு சொந்தமான புக்கிட் பிந்தாங்  பெவிலியன் அடுக்கு மாடி 2 சொகுசு வீடுகளில் பெரும் மதிப்பிடைய பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த பொருட்கள்

மேலும் படிக்க
அரசியல்மற்றவைமுதன்மைச் செய்திகள்

72 பெட்டிகளில் ரொக்கம், நகைகள், 284 பெட்டிகளில் ஆடம்பர கைப்பைகள்; நஜீப் வீட்டில் பறிமுதல்

கோலாலம்பூர், மே 18- முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் பெவிலியன் அடுக்ககத்திலுள்ள வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் போலிஸ் 72 பெட்டிகளில் நகைகள், பல்வேறு நாடுகளின் பணங்கள் முதலானவற்றைப் போலீஸ் பறிமுதல் செய்துள்ளது. புக்கிட் அமான் வர்த்தக பிரிவு குற்றப்புலனாய்வு துறை இயக்குநர் டத்தோஸ்ரீ அமார் சிங் இஷார் சிங் கூறுகையில், 284 பெட்டிகளில் பல்வேறு முத்திரைகளிலான கைப்பைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறினார். இந்த பொருட்கள் அனைத்தும் 1எம்.டி.பி.

மேலும் படிக்க
அரசியல்மற்றவைமுதன்மைச் செய்திகள்

இந்தியர்களின் சிவப்பு அடையாள அட்டை விவகாரத்தில் தீவிர முனைப்பு! சேவியர் ஜெயக்குமார்

பெட்டாலிங் ஜெயா, மே 17- புதிய அரசாங்கத்தின் கீழ் அமைக்கப்படவிருக்கும் பணிக்குழுவின் கீழ் இந்தியர்கள் எதிர்நோக்கிவரும் சிவப்பு அடையாள அட்டை பிரச்னையில் தீவிர முனைப்பு காட்டப்படும் என பி.கே.ஆர். உதவித் தலைவர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்தார். இது குறித்து நம்பிக்கைக் கூட்டணி தலைவர் மன்றத்தில் எழுப்பப்பட்டதாகவும் இவ்விவகாரத்தில் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் சிறப்பு கவனத்தை செலுத்துவார் என்றும் அவர் கூறினார். இந்தியர்களின் சிவப்பு அடையாள அட்டை நீள

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

இந்தியர்களின் நலன் காக்க சிறப்பு பணிக்குழு; துன் டாக்டர் மகாதீர்

கோலாலம்பூர், மே 17 மலேசியாவில் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை நலன் கருதி ஒரு சிறப்பு பணிக்குழு அமைக்கப்படும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்திய சமூகத்தினர், மகளிர், இளைஞர், பூர்வ குடிமக்கள் ஆகியோரின் நல்வாழ்வை கருதில் கொண்டு இந்த சிறப்பு பணிக்குழு அமைக்கப்படும் என்று அவர் கூறினார். மலேசியாவிலுள்ள சிறுபான்மை மக்களின் நலன்கள் மீது இந்தப் பணிக்குழு கவனம் செலுத்தும். அந்த வகையில் இந்திய

மேலும் படிக்க
அரசியல்மற்றவைமுதன்மைச் செய்திகள்

நஜீப் வீட்டில் சோதனையா? எனக்கு தகவல் வழங்கப்படவில்லை! துன் மகாதீர்

பெட்டாலிங் ஜெயா, மே 17- முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீ துன் ரசாக் வீட்டில் இரவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட போலீஸ் சோதனை குறித்து தமக்கு எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்தார். அது போலீஸின் பணி வழக்க நடைமுறை (எஸ்.ஓ.பி). நஜீப் வீட்டில் சோதனையிடுவதற்கான ஆதாரங்கள் போலீசுக்கு கிடைத்திருக்கலாம். அதனால், அவர்கள் அந்த சோதனையை நடத்தியிருக்கக்கூடும் என இன்று நடைபெற்ற நம்பிக்கைக் கூட்டணி தலைவர்

மேலும் படிக்க
அரசியல்மற்றவைமுதன்மைச் செய்திகள்

தகுதியானவர்களுக்கு மட்டுமே பிரிம் தொகை! பிரதமர் மகாதீர்

பெட்டாலிங் ஜெயா, மே 17- பிரதமர் துன் டாக்டர் மகாதீர் ஒரே மலேசியா உதவித் தொகை (பிரிம்) மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும் என உறுதியளித்தார். அந்த உதவி நிதி தகுதியானவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதை உறுதி செய்ய மறு ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் கூறினார். இது குறித்து துன் மகாதீர் கூறுகையில், அரசாங்கம் பிரிம் தொகையை தொடர்ந்து வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. எனினும், இதற்கு முன்பு தகுதி இல்லாதவர்களும் அந்நிதியைப்

மேலும் படிக்க