அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் (Page 94)
அரசியல்முதன்மைச் செய்திகள்

தே.மு. அரசாங்கம் தந்த அழுத்தத்தால் அக்கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தேன்! ஏர் ஆசியா டோனி பெர்னாண்டஸ்

பெட்டாலிங் ஜெயா, மே 13- கடந்த 14ஆவது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணிக்கும் அப்போதைய பிரதஹ்மர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கும் தாம் ஆதரவளித்ததற்கான காரணத்தை ஏர் ஆசியா குழுமத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டோனி பெர்னாண்டஸ் இப்பொழுது தெரிவித்துள்ளார். இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் டோனி, அதில் தேசிய முன்னனி அரசாங்கமும் டத்தோஸ்ரீ நஜீப்பும் ஏர் ஆசியா எக்ஸ் தலைவர் பதவியிலிருந்து டான்ஸ்ரீ ரஃபிடா அசிஸை நீக்க

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

தே.மு. உறுப்பினர்களுக்கு ஹராப்பானில் எளிதில் இடம் வழங்கப்படாது! ராம் கர்ப்பால் சிங்

கோலாலம்பூர், மே 14- தேசிய முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் நுழைவதற்கு எளிதில் அனுமதி வழங்கிவிட முடியாது என புக்கிட் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நாட்டில் பல மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்றாலும் இவர்கள் அனைவரும் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் தலைமைத்துவத்திற்கு ஆதரவளித்து வந்தவர்கள். திடிரென்று பக்காத்தான் ஹராப்பானிற்கு அவர்கள்

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

பி.என் 2.0 ஆகிவிடாதீர்கள்! ஹராப்பானுக்கு ராயிஸ் யாத்திம் எச்சரிக்கை

பெட்டாலிங் ஜெயா, மே 13-  தேசிய முன்னணியிலிருந்து நம்பிக்கைக் கூட்டணிக்கு (பக்காத்தான் ஹராப்பான்) தாவும் தரப்பினரை ஏற்றுக்கொண்டால் அக்கூட்டணியும் பி.என். 2.0 ஆக மாறும் என முன்னாள் அமைச்சரான டான்ஸ்ரீ ராயிஸ் யாத்திம் எச்சரிக்கை விடுத்தார். ஹராப்பான் அவர்களை ஏற்றுக் கொள்வதைத் தவிர்க்க வேண்டுமென்றும், அது அனுமதிக்கப்பட்டால், அவர்கள் தங்களோடு பழைய பழக்க நடைமுறைகளைத் தங்களோடு கொண்டுவருவார்கள். ஹராப்பான் இதுவரை மேற்கொண்ட செயல்பாடுகள் அனைத்தும் வீணாகிப் போகும் என நேற்று

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

துணைப்பிரதமர் வான் அசிஸா குறித்து பெருமையடைகின்றேன்! ஷாரிஸாட் ஜாலில்

கோலாலம்பூர், மே 13- நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் துணைப்பிரதமராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளது பல்வேறு தரப்பினர்களின் ஆதரவை பெற்று வருகின்றது. இந்நிலையில், துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ வான் அசிஸாவிற்கு அம்னோவின் மகளிர் பிரிவு தலைவி டான்ஸ்ரீ ஷாரிசாட் அப்துல் ஜாலில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், அரசியல் கருத்து மாறுப்பட்டிருந்தாலும் ஒரு பெண் மற்றும் தாய் அடிப்படையில் வான் அசிஸா துணைப்பிரதமராக நியமனம் செய்யப்பட்டுள்ளதால் இந்த

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

நிதி வழங்குவதில் தே.மு. கொள்கையா? ஜொகூர் மந்திரி பெசாரின் கருத்தை ஏற்க முடியாது! சைட் சாடிக்

மூவார், மே 13- கடந்த காலங்களில் ஜொகூரில் எதிர்கட்சியினருக்கு நிதி வழங்காமல் வந்த தேசிய முன்னணியின் கொள்கையையே தாம் கடைபிடிக்கவிருப்பதாக அம்மாநிலத்தின் புதிய மந்திரி பெசார் டத்தோ ஒஸ்மான் சாஃபியன் கூறியிருக்கும் கருத்தைத் தாம் ஆதரிக்க முடியாது என மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், டத்தோ ஒஸ்மான் சாஃபியான் கருத்தை ஏற்க முடியாது. இது குறித்து எனது கூட்டணி நண்பர்களுடன் பேசி

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

நீதிமன்றம் குற்றம் சாட்டும்வரை லிம் குவான் எங் குற்றமற்றவர்! ஜொஹாரி அப்துல் கனி

கோலாலம்பூர், மே 13- ஜ.செ.க. பொதுச்செயலாளர் லிம் குவான் எங் மீது நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு நடைபெற்றுவரும் நிலையில் அவர் நிதித்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளது குறித்து பல்வேறு தரப்பினர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து முன்னாள் 2ஆவது நிதித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கனி கூறுகையில், லிம் குவான் எங் மீது நீதிமன்றம் ஆதாரங்களின் அடிப்படையில் குற்றத்தை சுமத்தும் வரையில் அவர் குற்றமற்றவராக இருப்பார் என

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

நஜீப்பின் வீட்டை போலீஸ் கண்காணிக்க தொடங்கியது!

கோலாலம்பூர், மே 13- இங்குள்ள தாமான் டூத்தா, ஜாலான் லங்காக் டூத்தாவில் அமைந்திருக்கும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு சொந்தமான வீடு இருக்கும் சாலையை போலீஸ் இன்று தொடங்கி கண்காணிக்க தொடங்கியுள்ளது. அவரது வீட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதாக செந்தூல் மாவட்ட போலீஸ் துணைத்தலைவர் சுப்ரிண்டன் முஹம்மட் ரஃபிக் முஹம்மட் முஸ்தாபா தெரிவித்தார். அந்த வீட்டை பாதுகாக்கும் வகையில் செந்தூல் மாவட்ட போலீஸ்

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

நஜீப் ஆடம்பர அடுக்ககத்தில் சோதனையா?

கோலாலம்பூர், மே. 13- முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் துன் ரசாக்கின் ஆடம்பர அடுக்ககத்தில் போலீஸ் அதிரடியாக சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக நேற்று செய்தி பரவியது. இந்நிலையில் இந்த தகவலில் உண்மையில்லை என கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோஶ்ரீ மஸ்லான் அதை மறுத்துள்ளார். ஜாலான் ராஜா சுலானில் உள்ள அந்த அடுக்ககத்தில் உள்ள ரகசிய சிசிடிவி கேமராவை மட்டுமே போலீஸ் சோதனையிட்டதாகவும் அவர் பெர்னாமாவிடம் கூறியுள்ளார். முன்னதாக டத்தோஶ்ரீ நஜீப்பின்

மேலும் படிக்க
அரசியல்மற்றவைமுதன்மைச் செய்திகள்

தாய்மொழி நாளிதழை நாங்கள் பார்த்து கொள்கிறோம்! – டத்தோ இளையப்பன்

கோலாலம்பூர், மே 13- தாய்மொழி நாளிதழையும் அதன் பணியாளர்களையும் நாங்கள் கவனித்து கொள்கிறோம். இதில் டான்ஸ்ரீ கேவியஸ் கவலைப்பட வேண்டாம் என மைபிபிபி கட்சியின் உதவித் தலைவர் டத்தோ இளையப்பன் தெரிவித்தார். தாய்மொழி நாளிதழை மூடினால் சமுதாயம் சம்பந்தபட்ட நபர்களை மன்னிக்காது என்று டான்ஸ்ரீ கேவியஸ் கூறியதற்கு பதிலளித்த அவர் மேற்கண்டாறு கூறினார். தாய்மொழி நாளிதழுக்கு எந்த விளம்பரமும் இல்லை. வர்த்தக ரீதியில் அதனை செயல்படுத்துவதற்கு மைபிபிபி உச்சமன்றம் ஆலோசித்தது.

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

தாய்மொழி நாளிதழை நிறுத்தினால் சமுதாயம் மன்னிக்காது! -டான்ஸ்ரீ கேவியஸ்

கோலாலம்பூர், மே 12- தாய்மொழி நாளிதழை நிறுத்திவிட வேண்டுமென ஒரு தரப்பினர் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்கள். அந்நபர்களை சமுதாயமும் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் மன்னிக்க மாட்டார்கள் என டான்ஸ்ரீ கேவியஸ் கூறினார். குறிப்பாக கட்சியின் தலைமைத்துவத்தை கைப்பற்றி விட்டோம் என்றும் அத்தரப்பினர் கூப்பாடு போடுகிறார்கள். யார் மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் என்பதை தேசிய சங்கப் பதிவிலாகா அறிவிக்குமென அவர் அநேகனிடம் கூறினார். உச்சமன்றம் என்னை நீக்கயதாகவும் நான் மேல் முறையீடு

மேலும் படிக்க