அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் (Page 98)
சமூகம்முதன்மைச் செய்திகள்

எழுச்சியுடன் பொங்கலை கொண்டாடுவோம்! வீ.கணபதிராவ்

ஷா ஆலம், ஜன.13- தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கலை மகிழ்ச்சியுடனும் ஒற்றுமையுடனும் கொண்டாடுவோம் என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தனது பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்தார். இந்த தமிழ் புத்தாண்டை வரவேற்பதோடு இந்நாட்டிலுள்ள இந்தியர்களிடையே எழுச்சியும் வளர்ச்சியும் ஏற்பட ஒரே இலக்கோடு பயணிப்போம் என அவர் கூறினார். இந்த பொங்கல் விழாவை ஒற்றுமை விழாவாக அனைத்து இனங்களுடன் கொண்டாடுவோம் என கணபதிராவ் கூறினார்

மேலும் படிக்க
சமூகம்மற்றவை

கூட்டரசு பிரதேச ம.இ.கா.வின் பொங்கல் விழா!

கோலாலம்பூர், ஜன.11- ம.இ.கா. தலைமையகம் மற்றும் ம.இ.கா. கூட்டரசு பிரதேச தொடர்புக் குழுவின் ஏற்பாட்டில் 2018ஆம் ஆண்டிற்கான பொங்கல் விழா சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பொங்கல் விழா அக்கட்சியின் தேசியத் தலைவரும் மலேசிய சுகாதாரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியத்தின் தலைமையில் வருகின்ற 15.1.2018 திங்கள்கிழமை, மாலை மணி 6.00க்கு ம.இ.கா. கட்டட வளாகத்திலுள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு வருகையாளராக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

பெட்ரோல் விலை குறைந்தது!

பெட்டாலிங் ஜெயா, ஜன, 10- ஜனவரி 11 தொடக்கம் 17 வரையிலான பெட்ரோல் விலை நிர்ணயத்தில் ரோன் 95, ரோன் 97 பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் புதன்கிழமைவரை ரோன் 95 பெட்ரோல் விலை 3 காசு குறைந்து 2.26 காசுக்கு விற்கப்படும். முன்னதாக அதன் விலை 2.29 காசாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதேபோல் 2.56 காசுக்கு விற்க்கப்பட்ட ரோன் 97 பெட்ரோல் விலை ஒரு வாரத்திற்கு 3 காசு

மேலும் படிக்க
கலை உலகம்சமூகம்முதன்மைச் செய்திகள்

பிரதமர் தலைமையில் நட்சத்திர கலை விழா! நடிகர் சங்கத்திற்கு 1 கோடி உபகாரச் சம்பளம்

கோலாலம்பூர், ஜன. 3- சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், உலக நாயகன் கமல்ஹாசன் பங்கேற்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலைவிழாவின் நிறைவு விழாவில் மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் பங்கேற்பதாக இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழு தலைவர் ஷாகுல் ஹமீட் உறுதிப்படுத்தினார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் வரும் சனிக்கிழமை அதாவது ஜனவரி 6ஆம் தேதி காலை 10.00 மணிக்கு 300க்கும் மேற்பட்ட முன்னணி நடிகர்கள் கலந்து

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

டான்ஸ்ரீ மூசாக்கும் மோன்ஸ்பெஸுக்கும் சம்பந்தமில்லை!!!

கோலாலம்பூர், ஜன. 3- கிளந்தானில் முன்னெடுக்கப்பட்டு வரும் விவசாய உற்பத்தி துறையில் முதலீடு செய்ய பெரும் தொகையை வசூலித்த மோன்ஸ்பெஸ் நிறுவனத்திற்கும் டான்ஸ்ரீ மூசா ஹசானுக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை என உற்பத்தி துறை நிறுவனத்தின் தலைவர் முகமட் ரஷிட் திட்டவட்டமாகத் தெரிவித்தார். கிளந்தான் கோலா கிராயில் 2286 ஏக்கரில் முன்னெடுக்கப்பட்ட விவசாயத் திட்டத்தில் நிலத்தின் குத்தகையை சாவிரா கிளந்தான் சென்டிரியான் பெர்ஹாட் கொண்டிருந்தது.  விவசாயத் துறையில் ஈடுபட ஆர்வம்

மேலும் படிக்க
சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

என் அம்மா தீனா எங்கே? 4 ஆண்டுகளாக தேடிவரும் பிள்ளைகள்!

சுங்கைப் பட்டாணி, ஜன. 3- தனது கணவரின் இறப்புக்கு பின்னர் மன அழுத்தத்திற்கு இலக்கான என் அம்மா தீனா நடேசன் வீட்டிலிருந்து வெளியேறி 4 ஆண்டுகள் ஆன நிலையில் அவரைப் பற்றிய தகவல்கள் கிடைக்காதது ஏமாற்றத்தையும் துயரத்தையும் அளிப்பதாக அவரது பிள்ளைகள் தெரிவித்தனர். இது குறித்து தீனாவின் மகன் ரவின் கூறுகையில், கடந்த 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி என் அம்மா தீனா பிற்பகல் மணி 12.00 அளவில்

மேலும் படிக்க
சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ஊத்தான் மெலிந்தாங்கில் ரமேஷ் ராவ்?

கோலாலம்பூர், ஜன. 3- வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதியில் சமூக சிந்தனை மேம்பாட்டு இயக்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ ரமேஷ் ராவ் போட்டியிடக்கூடுமென பரவலாகப் பேசப்படுகின்றது. குறிப்பாக துணைப் பிரதமரும் பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ அமாட் ஸாஹிட், வெற்றி பெறக்கூடிய வேட்பாளருக்கு மட்டுமே ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கின்றார். கடந்த 13ஆவது பொதுத் தேர்தலில் தேசிய

மேலும் படிக்க
குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

எஸ்பிஎம் மாணவர்களுக்கு இலவச பிரத்தியேக வகுப்பு: பக்தி சக்தி அழைக்கின்றது!

கோலாலம்பூர், ஜன. 1- பக்தி சக்தி இயக்கம் வறுமை கோட்டின் கீழ் இருக்கும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டது. டத்தோஸ்ரீ எஸ்.கே. தேவமணியின் ஆலோசனையின் கீழ் இந்த இயக்கம் அடுத்த இலக்கை நோக்கி தமது பயணத்தை தொடங்குவதாக அதன் தலைவர் டத்தோ பழனியப்பன் தெரிவித்தார். கடந்த ஆண்டு பக்தி சக்தி இயக்கம் முன்னெடுத்த பிரத்தியேக வகுப்புகளின் மூலம் 1000 மாணவர்கள் பலனடைந்தார்கள். இந்த முறை

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

சுபிட்சம் தழைத்தோங்கட்டும்! டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம்

ஒவ்வோர் ஆண்டு துவக்கத்திலும் புதிய எண்ணங்களுடனும் சிந்தனைகளுடனும் அவ்வாண்டை நோக்கி நாம் பயணிக்கின்றோம்.  இப்புதிய ஆண்டு அனைவருக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் ஆண்டாக அமைய வேண்டும் என சுகாதார அமைச்சரும் ம.இ.கா. தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தமது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார். அவ்வகையில், நாட்டிற்கும் சமூகத்திற்கும் மிதவாத அடிப்படையில் நல்லதொரு சுபிட்சத்தை வழங்க நாம் வகை செய்ய வேண்டும். இன வேறுபாடின்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும்.

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

எதிர்கட்சியின் கோட்டை சரிகிறது! – பிரகாஷ் ராவ்

சுங்கை பூலோ, டிச. 31- சுபாங் நாடாளுமன்றத் தொகுதியின் ஆட்சிப் பீடத்தில் எதிர்கட்சியின் ஆளுமையை உறுதிச் செய்த இந்திய இளைஞர்களில் அதிகமானோர், தங்களின் ஆதரவுக் கரங்களை தற்போது மஇகா பக்கம் திருப்பியிருக்கின்றனர். மஇகாவின் பாரம்பரிய நாடாளுமன்றத் தொகுதியான சுபாங்கில் எதிர்கட்சி வேட்பாளரை அமர வைத்து 10 ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு தவணைக்கு வழங்கிய வாய்ப்பு போதும்! அடுத்து வரும் பொதுத் தேர்தலில் மஇகா வேட்பாளரை வெற்றிப் பெறச் செய்ய வேண்டும்.

மேலும் படிக்க