திங்கட்கிழமை, ஏப்ரல் 23, 2018
அண்மையச் செய்திகள்
முகப்பு > கல்வி > பிரமாண்டமாக நடந்தேறியது லீட் மலேசியாவின் 12ஆவது மாணவர் தலைமைத்துவ மாநாடு
கல்வி

பிரமாண்டமாக நடந்தேறியது லீட் மலேசியாவின் 12ஆவது மாணவர் தலைமைத்துவ மாநாடு

கோலாலம்பூர், ஆக 26-

ஒவ்வொரு ஆண்டும் லீட் மலேசியா மற்றும் மலாயாப் பல்கலைக்கழகம் இணைந்து செயல்படுத்தும் இந்நிகழ்வு அண்மையில் 4 நாட்களுக்கு மலாயாப் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்றது. கடந்த 11 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்று வரும் மாணவர் தலைமைத்துவ மாநாடு மீண்டும் இவ்வாண்டு முழுமையான திறமைகளை மறுவடிவமைத்தல் எனும் கருப்பொருளுடன் 12-ஆவது மாணவர் தலைமைத்துவ மாநாடாக பிரமாண்டமாக நடந்தேறியது.

கடந்த 2006-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட மாணவர் தலைமைத்துவ மாநாடு, தொடர்ந்து 12 வருடத்திற்கு சிறப்புடன் நடைபெற்றுக் கொண்டு வருவதாக அதன் தோற்றுநரும், லீட் மலேசியா இயக்கத்தின் தலைவருமாகிய திரு.திலகன் அவர்கள் தமது சிறப்புரையில் தெரிவித்தார். இந்திய இளைஞர்களிடையே, குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்களிடையே தலைமைத்துவ பண்பை உருவாக்கும் நோக்கில் லீட் மலேசியா இயக்கம் இம்மாநாட்டை நடத்தி வருவதாகவும், அத்துடன் மாணவர்களின் சிந்தனை மாற்றத்திற்குத்  தேவையான ஒரு தளமாக இம்மாநாடு அமைவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இம்மாநாட்டில் கலந்து கொள்வதன் வழி மாணவர்கள் பல திறன்களையும் அனுபவங்களையும் பெற்றுக் கொள்ள முடியும். ஆகவே , இதனை ஒரு நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு  மாணவர்கள் பயனடைய வேண்டும்  என இம்மாணவர் தலைமைத்துவ மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பேசிய மலாயாப் பல்கலைக்கழக பிரதி துணை வேந்தர் பேராசிரியர் டத்தோ டாக்டர் ரோஹன  யூசோப்  தமதுரையில் கூறினார்.

இந்நிகழ்விற்கு சிறப்பு வருகை புரிந்த பிரதமர் துறை துணைமைச்சரும் ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவருமாகிய செனட்டர் டத்தோஸ்ரீ எஸ்.கே. தேவமணி,  கூறுகையில், தலைமைத்துவம் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ளது  அதாவது,  உன்னிடத்தில் உள்ளது. வழக்கமான தொழிலை கைவிட்டு தொழில்நுட்ப எண்ணத்தோடு செயல்படுங்கள் என்றும், உணர்வுகளையும் அன்பையும் விடுத்து கல்வியை முதலிடத்தில் வையுங்கள் என்றும் அவர்  வலியுறுத்தினார் .      பல்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்த பல நாடறிந்த பேச்சாளர்கள் இம்மாநாட்டில் பங்குக்கொண்டு சிறப்பித்தனர். தங்களுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பை ஒட்டி உரையாற்றி மாணவர்களுக்கு புதிய கோணத்தில் தகவல் மற்றும் அறிவைப் புகுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அவ்வகையில், இவ்வருடம் வர்த்தக ஆலோசகர் திரு. ஜீவன் சகாதேவன், முன்னாள்  சிங்கப்பூர்  தேசிய  கால்பந்து வீரர் திரு .ஷேபி சிங், ஒன் மைன்  தலைவர் டத்தோ கோபிநாத் , மாய் ஸ்கில் இயக்குனர், வழக்குரைஞர்  திரு பசுபதி, எஸ் எம் ஆர் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் பாலன், கேப்டன் பாலா  உட்பட சுமார் 38 அனுபவமுள்ள திறமையான பேச்சாளர்கள் கலந்துகொண்டு மாணவர்களிடம் பல கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர். நாடு முழுவதும் உள்ள சுமார் 110 மாணவர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டு பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது . 

நிறைவு விழாவிற்கு வருகை புரிந்த கல்வித் துணை அமைச்சர் மாண்புமிகு டத்தோ பி.கமலநாதன் கூறுகையில், அரசாங்கத்தின் கொள்கைகளை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் இம்மாநாட்டில் கலந்து கொண்ட மாணவர்களுக்குப் பெரிதும் பங்கு உள்ளது என்றுரைத்தார் . இம்மாதிரியான மாநாட்டின் மூலமாக மாணவர்கள் அரசாங்க வாய்ப்புகளை மக்களுக்குத்  தெரியப்படுத்தினால் நமது இந்திய சமூகம் கல்வியிலும் பொருளாதாரத்தில் விரைவில் வளம் பெறலாம் என அவர் மேலும் குறிப்பிட்டார். லீட் மலேசியா நாடு முழுவதும் இது போன்ற இன்னும் வெவ்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யவுள்ளது. லீட் மலேசியா பட்டணங்களில் மட்டுமல்லாமல் புறநகர் பகுதியில் வாழ்பவர்களையும் அணுகவுள்ளது. மேல் விவரங்கள் அறிய, லீட் மலேசிய அகப்பக்கத்தை வலம் வாருங்கள் அல்லது info@leadmalaysia.com மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளலாம் என ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொண்டனர்.

Anegun.com

2 thoughts on “பிரமாண்டமாக நடந்தேறியது லீட் மலேசியாவின் 12ஆவது மாணவர் தலைமைத்துவ மாநாடு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன