லண்டன், ஜூலை 22-
பாயர்ன் லெவெர்குசன் கிளப்பின் தாக்குதல் ஆட்டக்காரரான மெக்சிக்கோவைச் சேர்ந்த ஜாவியர் ஹெர்ணான்டேஸ் இங்கிலாந்து பிரிமியர் லீக் கிளப்பான வெஸ்ட் ஹாமில் இணைய இணக்கம் தெரிவித்துள்ளார்.
மன்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட் ஆகிய அணிகளில் விளையாடியுள்ள 29 வயதுடைய சிச்சாரித்தோ என்றழைக்கப்படும் ஜாவியர் ஹெர்ணான்டேஸ் வெஸ்ட் ஹாம் யுனைடெட்டில் இணைவதற்கான மருத்துவ பரிசோதணையை வெகுவிரைவில் மேற்கொள்ளக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
1.6 கோடி பவுண்ட் (8.9 கோடி வெள்ளி) மதிப்பில் வெஸ்ட் ஹாமில் இணையவிருப்பதாக இங்கிலாந்தைச் சேர்ந்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2010ஆம் ஆண்டு சிவாஸ் அணியிலிருந்து மன்செஸ்டர் யுனைடெட்டில் இணைந்த ஜாவியர் ஹெர்ணான்டேஸ் அவ்வணிக்கான 156 ஆட்டங்களில் பங்கேற்று 59 கோல்களை புகுத்தினார். அதன் பிறகு, 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் இரவல் விளையாட்டாளராக மன்செஸ்டர் யுனைடெட்டிலிருந்து ரியல் மாட்ரிட் அணியில் இணைந்தார்.
பாயர்ன் லெவர்குசன் அணியில் 76 ஆட்டங்கள் வாயிலாக 39 கோல்களை அடித்துள்ள ஜாவியர் ஹெர்ணான்டேஸ் மெக்சிக்கோவிற்காக அதிகம் கோலடித்த விளையாட்டாளராக விளங்குகிறார். மெக்சிக்கோவிற்காக 91 ஆட்டங்களில் பங்கேற்றுள்ள அவர் இதுவரையில் 47 கோல்களை புகுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
