Site icon அநேகன்

ரியல் மெட்ரிட்டை வீழ்த்தியது மென்செஸ்டர் யுனைடெட்

சந்தா கிளாரா, ஜூலை.24 –

அமெரிக்காவில் நடைபெற்ற நட்புமுறை ஆட்டத்தில் இங்கிலாந்தின் மென்செஸ்டர் யுனைடெட்   2 -1 என்ற பினால்டி கோல்களில் ஸ்பெயினின் ரியல் மெட்ரிட்டை வீழ்த்தியது. ஐரோப்பிய மண்டலத்தின் லீக் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ள வேளையில் பல முன்னணி கிளப்புகள் ஆசியாவையும் அமெரிக்காவையும் முகாமிட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்துலக வெற்றியாளர் கிண்ண போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் , ரியல் மெட்ரிட்டை எதிர்த்து விளையாடியது. இந்த ஆட்டத்தில் ரியல் மெட்ரிட் தனது முன்னணி நட்சத்திர ஆட்டக்காரர்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ, செர்ஜியோ ராமோசை களமிறக்கவில்லை.

முதல் பாதியில் மென்செஸ்டர் யுனைடெட் அந்தோனி மார்சியல் ஐந்து ரியல் மெட்ரிட் ஆட்டக்காரர்களை லாவகமாக ஏமாற்றி தட்டி கொடுத்த பந்தை ஜெசி லிங்காட் கோலாக்கினார். அதன் பின்னர் இரண்டு அணிகளும் பாதுகாப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தின.

இரண்டாம் பாதியில் மென்செஸ்டர் யுனைடெட் தற்காப்பு ஆட்டக்காரர் விக்டர் லின்டலோப் செய்த தவறினால் நடுவர் பினால்டி வழங்கினார். கஸ்மிரோ அந்த பினால்டியை கோலாக்கி ஆட்டத்தை சமப்படுத்தினார். 90 நிமிட ஆட்டம் 1 – 1 என்ற நிலையில் முடிந்ததால் பினால்டி வழங்கப்பட்டது.

ஐந்து பினால்டிகளில் மென்செஸ்டர் யுனைடெட் இரண்டு பினால்டிகளை கோலாக்கிய வேளையில் ரியல் மெட்ரிட் ஒரு பினால்டியை மட்டுமே கோலாக்கியது. இறுதியில் மென்செஸ்டர் யுனைடெட் 2 – 1 என்ற கோல்களில் வெற்றி பெற்றது. ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடைபெறவுள்ள ஐரோப்பிய சூப்பர் கிண்ணப் போட்டியில் ரியல் மெட்ரிட்டும், மென்செஸ்டர் யுனைடெட்டும் மீண்டும் களம் காணவிருக்கின்றன.

Exit mobile version