கோலாலம்பூர், ஜூலை 24-
தேசிய போலீஸ் படையில் லஞ்ச ஊழல் சம்பவங்கள் ஏற்படுவதை அதன் தலைவர், டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் மீண்டும் ஒப்புக் கொண்டுள்ளார். இது இம்மாதத்தில் இவர் தெரிவித்த 2ஆவது ஒப்புதலாகும். இதனால் இப்போது மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்துடன் (எம்ஏசிசி) இணைந்து லஞ்ச ஊழலிலிருந்து விடுபடுவோம் என்ற உறுதிமொழியை எடுக்க தேசிய போலீஸ் படை முடிவு செய்துள்ளது.
போலீஸ் படையிலும் லஞ்ச ஊழலில் ஈடுபடுவோர் இருக்கவே செய்கின்றனர். அதை உடனடியாக நிறுத்துவதோடு இது தொடர்ந்து நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகத்தான் உறுதிமொழி எடுத்தல் உட்பட இன்னும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் பயிற்சி மையத்தில் எம்ஏசிசி ஆணையர், டத்தோ ஸுல்கிப்ளி அகமட்டுடன் செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் காலிட் குறிப்பிட்டார்.
போலீஸ் படையினரிடையே லஞ்ச ஊழல் சம்பவங்களை சுழியம் விகிதத்திற்குக் கொண்டு வருவதை உறுதி செய்வதில் தேசிய போலீஸ் படை மிகவும் உறுதியுடன் இருக்கிறது. இந்த ஒப்புதல் உண்மையில் இந்த ஜூலை மாதத்தில் காலிட் அளித்துள்ள 2ஆவது ஒப்புதலாகும். அதிலும் இந்தக் கேள்வி செமினியில் ஓர் அந்நியப் பெண் மீது சோதனை மேற்கொண்ட 3 ரோந்து போலீஸ்காரர்களை காலிட் விசாரித்த பிறகுதான் எழுந்தது.
இவர்கள் மூவரும் ரோந்துப் பணியின் மீதுதான் தங்களின் கவ்வனத்தைச் செலுத்த வேண்டும் என்பதால் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என காலிட் அவர்களுக்கு உத்தத்வு இட்டார்.
