Site icon அநேகன்

ஸ்பெயின் லா லீகா – 400 ஆவது ஆட்டத்தில் கோல் போட்டார் மெஸ்சி !

பார்சிலோனா, ஜன. 8 –

ஸ்பெயின் லா லீகா கால்பந்துப் போட்டியில் பார்சிலோனா 3 – 0 என்ற கோல்களில் லெவேந்தேவை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் 400 ஆவது முறையாக பார்சிலோனா அணியில் களமிறங்கிய லியோனெல் மெஸ்சி , 12 ஆவது நிமிடத்தில் முதல் கோலைப் போட்டார். அந்த கோலானது ஸ்பெயின் லா லீகா போட்டியில் மெஸ்சி போட்டிருக்கும் 365 ஆவது கோலாகும்.

38 ஆவது நிமிடத்தில் லுவிஸ் சுவாரேஸ் போட்ட கோலின் வழி பார்சிலோனா தனது கோல் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்தியது. இரண்டாம் பாதி ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் பார்சிலோனாவின் மூன்றாவது கோலை பவுலின்ஹோ அடித்தார்.

கடந்த 26 ஆட்டங்களில் தோல்வியே காணத பார்சிலோனா லீக் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. இந்த பருவத்தில் 16 லீக் கோல்களைப் போட்டுள்ள மெஸ்சி, இன்னும் ஒரு கோலைப் போட்டால், 1964 ஆம் ஆண்டில் இருந்து 1979 ஆம் ஆண்டு வரையில் பாயேர்ன் மூனிக் அணியில் கெர்ட் முல்லர் ஏற்படுத்திய சாதனையை முறியடிக்க முடியும்.

Exit mobile version